Chartered Accountant, Independent Director Kauvery Hospital & a proud Sanatani President -The Society of Auditors Chennai
RTs are not necessarily endorsements
சிறையில் மாட்டுத் தோலை சுத்தம் செய்ய வைத்து _
தொழுநோய்க்கு ஆட்பட்டு -
அதன்பின்பும் அந்த வேதனையுடன் _
வெள்ளையர் அரசு ரயிலில் ஏற அனுமதி மறுத்தும் கூட -
கால்நடையாக நடந்து சென்று சுதந்திரக் கனலைப் பரப்பிய -
என் சுப்பிரமணியன் சிவாவின் வீடு -
வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் பாழடைந்து கிடக்கிறது -
அந்தக் காலத்திலேயே பாப்பாரபட்டியில் அவர் கட்ட நினைத்த பாரதமாதா கோவில் இன்று வரை கட்டப்படவேயில்லை -
அவன் பிறந்த வத்தலக்குண்டு மண்ணில் அந்த மாவீரனுக்கு ஒரே ஒரு சிலை கூட இல்லை -
ஆனால்,
சுதந்திரத்தை எதிர்த்த _
தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று சொன்ன -
கண்ணடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் எங்கும் சிலைகள் -
சென்னையில் மட்டும் 29 சிலைகள் -
எங்கள் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன் சொந்த இடத்தில் ராஜகோபுரத்திற்கு எதிரில் கூட சிலை -
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு எதிரிலேயே சிலை -
போதாதென்று அவன் முறை தவறி சாகும் தருவாயில் மனமுடித்த மணியம்மைக்குக் கூட எழும்பூரில் சிலை -
அவ்வளவு ஏன் -
தமிழகத்தில் இந்துக்களையும், இந்துக் கோவில்களையும் கொன்று குவித்த _
திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும் திண்டுக்கல் மாநகரில் குளத்தை ஆக்ரமித்து மணிமண்டபம் -
அதற்கு ஒரு SI - இரு காவலர்கள் இரவு பகலாக பாதுகாப்பு நமது வரிப்பணத்தில் -
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கோபம் வருகிறது -
இந்த நாட்டை 50 வருடங்கள் ஆண்ட திராவிட கட்சிகளின் துரோகங்களை நினைத்தால் -
இனிமேலாவது இந்த மண்ணில் உண்மையான தேசத்தியாகிகளை மதித்து மரியாதை செய்யும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் .
@pvsubramanyam All the PSU banks are procedure oriented and never think practically. Officers & clerical staff are never trained to be customer friendly. Comply with Rules & procedures irrespective of the business. Effect of Govt running the business!
சக்திமிக்கது அதிகார வர்க்கம்!
சஞ்சலமிக்கது ஆட்சியாளர்கள் மனம்!
மலைக்க வைக்கின்றன, நூலக முறைகேடுகள்!
அகல் விளக்கு பதிப்பகம் 33,661 நூல்களும் , பீனிக்ஸ் பதிப்பகம் 39,2241 நூல்களும் கடந்த மூன்றாண்டுகளில் நூலகங்களுக்கு தந்துள்ளனர்…!
இதை எண்ணிப் பார்க்கும் போது, எவ்வளவு துரித கதியில் இத்தனை நூல்களை தயார் செய்து புத்தகங்கள் தந்திருப்பார்கள்! இதற்கு பின்னணியில் எத்தனை பேர் பங்கெடுத்து இயங்கி இருப்பார்கள். தொடர்ந்து இவ்வளவு மோசமான நூல்களை நூலகங்களுக்கு கொள் முதல் செய்தும் யாரும் பொருட்படுத்தாமல் இந்த மோசடிகள் எப்படி தொடர்ந்தன…? என்ற கேள்விகள் எழுகின்றன!
கொள்முதலான நூல்கள் பெரும்பாலும் வாசகர் பார்வைக்கு வைக்கப்படாமலே அட்டை பெட்டியிலோ அல்லது நூலகத்தின் ஒரு மூலையில் அடுக்கபடாமலோ தான் இருந்து வருகின்றன. தகுதியான சில நூல்களை மாத்திரம் வாசகர்கள் பார்வைக்கு வைத்து மற்றவற்றை ரிசிவ் பண்ணி பணம் தந்துவிட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் நூலகத் துறைக்குள் இருக்கும் யாரேனும் ஒரு ஊழியர் இப்படி மோசடி நூல்களை அடுக்கி வைத்ததாலோ, எப்படியோ… ஒரு வகையில் இது பார்வைக்கு வந்து வெளிப்பட்டுவிட்டது.
நூல்கள் அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் பிப்ரவரியில் தான் ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. மார்ச்சில் கொள்முதலும் நடந்துள்ளன. அட்டை பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்தது ஜூன், ஜூலை மாதங்கள் அவ்வளவே! அப்போது போடப்பட்ட சீல்களை வைத்து தவெக அரசு மேல் சந்தேகம் வந்துள்ளது. இந்த புதிய அரசு எந்த ஒரு நூலையும் இது வரை நூலகங்களுக்கு வாங்க யார் ஒருவருக்கும் ஆர்டர் போடவில்லை என்பது நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள தகவல்களில் நிருபணமாகியுள்ளது.
அகல் விளக்கு பதிப்பக மோகன் அவர்களை காலதாமதமாக கைது செய்துள்ளனர்.
5 நூலக அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறிய முன்னேற்றம் கூட நீதிமன்றம் அரசை நிர்பந்தத்தினால் தான் நடந்துள்ளது. இதில் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ் நிச்சயம் சம்பந்தப்பட்டு இருப்பார். அடுத்த நிலையில் இருந்த ராமேஸ்வர முருகன் 100 சதவிதம் சம்பந்தப்பட்டு இருப்பார். இவர்களைக் கூட இன்னும் நெருங்கவில்லை.
இவர்களையும் விட செல்வாக்கான ஒருவர் திட்டக் குழு உறுப்பினராக இருந்த - பொருளாதார அறிஞராக அறியப்பட்ட – ஜெயரஞ்சன்! இவரை விசாரணை வளையத்தில் கொண்டு வராமல் இந்த நூலக முறைகேடுகளின் முழு பரிமாணம் வெளிவர வாய்ப்பில்லை.
இத்தனை நகர்வுகளையும் தீர்மானிக்கும் பிக் பாஸாக இருந்தவர் – நிழல் முதலமைச்சராக வலம் வந்த – உதய சந்திரன். இவரையும் அச்சமின்றி அணுகி விசாரிக்க முடிந்தால், மிகத் துல்லியமாக நூலக முறைகேடுகள் மட்டுமல்ல, அதற்கும் மேல் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
பெரிய அளவு பல கோடிகள் மோசடி நடந்திருப்பதை முற்றிலும் அறியாத நிலையில் சென்ற ஆட்சியாளர்கள் இருந்துள்ளார்கள் என்றால், இந்த லட்சணத்தில் தான் படுமோசமாக ஆட்சி நிர்வாகம் செய்துள்ளனர்....!
பொதுவாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பைலை வாசித்து பார்க்கத் தெரியாது. விருப்பமும் காட்டமாட்டார். அதிகாரிகள் விளக்கிச் சொல்ல வந்தாலும் காது கொடுத்து கேட்க மாட்டார். இந்த யதார்த்த நிலை அரசுத் துறை செயலாளர்கள் அனைவருக்கும் தெரியும். ஆகவே அவர்கள் அனைத்துக்கும் உயதசந்திரன் அவர்களையே சார்ந்து இயங்கினர்.
உதயசந்திரன் அளவுக்கு மிக உயரத்தில் இருந்த – தலைமை செயலாளர், முதலமைச்சர் என்ற இரட்டை கதாபாத்திரமாகவும் சென்ற ஆட்சியில் உச்சபட்ச செல்வாக்கில் இருந்த ஒருவரை - நெருங்கும் நிர்வாகத் துணிவு இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்குமா? தெரியவில்லை. ஏனென்றால், உதய சந்திரனுக்கு நல்ல டெல்லி மேலிடத் தொடர்புகள் வலுவாக உண்டு.
திமுக தலைவர் ஸ்டாலின் வேறு அடிக்கடி, ’’இந்த ஆட்சி விரைவில் கவிழும்’’ எனச் சொல்லி வருகிறார். இதன் மூலம் மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியில் இருக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆட்சியை தக்க வைக்கும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டார். பாஜக தலைவர்களின் அறிக்கைகள் முரசொலியின் முதல் பக்கத்தை அலங்கரிக்கின்றன….! டெல்லியில் திமுக எம்.பிக்களுக்கும் பாஜக தலைவர்களுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றங்கள் தவெகவை மேலும் தடுமாற வைக்கும்.
ஆகவே, மேற்படியானவர்களைத் தொடாமல் அடுத்தடுத்த கீழ் நிலையில் இருக்கும் சில அதிகாரிகளை பலி கொடுத்து அதிகார வர்க்கத்துக்கு அனுசரணை காட்டி கடந்து விடுவார்களா? இல்லை, தைரியமாக குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவார்களா? என்பதை ஒட்டு மொத்த தமிழகமும் உற்று நோக்குகிறது.
சாவித்திரி கண்ணன்
@balagtwit1967@Kanthaswam80359 Vacant possession is never assured in Bank Auctions. I know a friend of mine got the property in auction & never could get possession Finally my friend received what he paid from the original owner after the matter prolonged for more than 3 years. Bank auctions are a scam
@Mahesh10816 ji, BJP was a party for long time where inner party democracy used to be strong Post 2014 slowly BJP has become a Hero worship party like INC If the leadership makes mistakes no one raises any question All the ministers are "yes men" or "yes women" If you question anything you're sidelined. You know this well
Huge amount spent! How many Universities could be estsblished with such a huge capital? How much infrastructure could be created out of this allocation? If 50% of these funds are available to infrastructure creation, we could bear China, in my opinion. Government headed by the BJP iwes an explanation certainly