ஃபைனான்ஸ் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன்!
நிதித் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மேனாள் நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்களும்; திரு சவுகதா ராய், திருமதி சுப்ரியா சூலே, திரு என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். திரு பர்துஹரி மஹ்தாப் அவர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செப்டம்பர் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது பெயரைப் பரிந்துரைத்த தலைவர் @thirumaofficial அவர்களுக்கு நன்றி.
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அண்ணன் @VanniArasu_VCK அவர்களுக்கு திண்டிவனம் தொகுதி மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றி
அன்னம்புத்தூர்
கிராமத்தை சேர்ந்த மாணவி
மோனிகா என்பவருக்கு
மாண்புமிகு சமூகநீதித்துறை
அமைச்சர் அவர்கள் தனது
சொந்த செலவில் பேட்டரி வீல் சேர் வழங்கினார்
அக்டோபர் 2
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!
முனைவர் தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
No file chosen
தமிழ் மண்ணில்
தலைவர் எழுச்சித் தமிழர்
அவர்கள் பல லட்சம்
சிறுத்தைகளுக்கு திலீபன்
என பெயர் சூட்டி உள்ளார்...
ஒவ்வொரு கிராமங்களிலும்
போராளி திலீபன் அவர்களின்
பெயரை கொண்டு போய்
சேர்த்தவர் தலைவர்
எழுச்சித்தமிழர் அவர்கள் ..
இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும்! தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“ இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் அதிகம்
3 லட்சம் கோடிக்கு மேல் உள��ளது”
நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய வினாவுக்கு நிதித்துறை இணையமைச்சர் அளித்த பதில்
===
a) விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் சுமை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?; அப்படியாயின், அதன் விவரங்கள் என்ன?;
(b) தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் கூட்டுறவுப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு அத்தகைய நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது உண்மையா?; அப்படியாயின், அதன் விவரங்கள் என்ன?;
(c) 31 மார்ச் 2026 நிலவரப்படி, தேசியமயமாக்கப்பட்ட/பொதுத்துறை வங்கிகளில் விவசாயி���ளிடம் நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன்களின் விவரத்தைத் தருக (மாநில வாரியாக); மற்றும்
(d) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அத்தகைய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக்க அரசு உத்தேசித்துள்ளதா?; அப்படியாயின், அதன் விவரங்கள் என்ன?
ஆகிய வினாக்களை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு
நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. ப���்கஜ் சவுத்ரி பின்வருமாறு பதில் அளித்துள்ளார்:
(a) மற்றும் (b) கடன் நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி 'அழுத்தத்திற்குள்ளான சொத்துக்களைத் தீர்வு காண்பதற்கான முதன்மை வழிகாட்டுதல்கள், 2025'-ஐ (28 நவம்பர் 2025 தேதியிட்டது மற்றும் 01 ஜூலை 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது) வெளியிட்டுள்ளது. இது, கடன் வழங்குநர்கள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களின் கடன்களை நிதி ரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
தமிழ்ந���ட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு, கடந்த மூன்று நிதியாண்டுகளில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) தெரிவித்துள்ளது.
(c) நபார்டின் (NABARD) 'ENSURE' இணையதளத்தில் வங்கிகள் அளித்துள்ள தகவல்களின்படி, பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
(d) சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.” இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற கடன்கள் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றிய அரச���ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய அது மறுக்கிறது. அமைச்சர் கொடுத்துள்ள பதிலில் உள்ள அட்டவணையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்ற கடன் தான் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது. 31.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை மூன்று லட்டத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு கோடி (3,44,996.64 கோடி) ரூபாய் ஆகும்.
#விசிக_விருதுகள்_2026#காயிதேமில்லத்_பிறை_விருது
ஐஎன்டிஜே மாநில துணை தலைவர் முகமது முனீர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'காயிதேமில்லத் பிறை விருது' வழங்கி சிறப்பித்தோம்!
"திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவி��்துவிட்டது; தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் இடம்பெறுவோம்.” - விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி பேச்சு
#VCK | #Thirumavalavan | #CMVijay | #TVK
“விசிகவைப் பொருத்தவரை ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டுமென்பதுதான் எங்கள் நிலைப்பாடு; அந்த வகையில் இதற்கான தீர்வை எவ்வகையிலான முயற்சியில் ஈடுபட்டாவத��� நாங்கள் அடைவோம்” – அமைச்சர் வன்னி அரசு
#VanniArasu | #VCK
ஜூலை 5, கேப்டன் மில்லர் அவர்களின் நினைவு நாள் கரும்புலிகள் நாள், மதுரை சென்னகரம்பட்டியில் அரசு நில குத்தகை உரிமைக்காக போராடி உயிர்நீத்த அம்மாசி - வேலு அவர்களின் நினைவுநாள் - ஈழவிடுதலைக் களத்தில் உயிர்நீத்த கரும்புலிகளுக்கும், அரசு நில குத்தகை உரிமைக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் இன்று வீரவணக்கம் செலுத்தினோம்!
செய்தியாளர் சந்திப்பில்...
#விசிக_விருதுகள்_2026
அம்பேத்கர் சுடர் -
முனைவர் திரு.கே.சொக்கலிங்கம்,
மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பெரியார் ஒளி-
வழ. ஹென்றி டிஃபேன்
மனித உரிமைப் போராளி.
மார்க்ஸ் மாமணி-
திரு. மு. வீரபாண்டியன்,
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
காமராசர் கதிர் -
ஐயா பால.பிரஜாபதி அடிகளார்
சாமித் தோப்பு .
அயோத்திதாசர் ஆதவன்-
திருமதி. ரூத்மனோரமா
சமூக செயற்பாட்டாளர் .
காயிதேமில்லத் பிறை-
முகமது முனீர்
மாநில து.தலைவர், ஐஎன்டிஜே
செம்மொழி ஞாயிறு -
பொ. வேல்சாமி
தமிழறிஞர், நாமக்கல்.
ஆக��ய சான்றோர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.