தம்பி மைக்கேல் @Michel_Offl
நாளை காலை 11 மணிக்குள் நடிகர் விஜய் மாதிரி கையை கட்டிட்டு கெஞ்சி வீடியோ வர வேண்டும். இல்லையென்றால் முதல்வர் விஜய் உன்னை கைது செய்ய வேண்டும்.
தமிழ் முருகன் யாரென்று பார்க்கத்தானே போற.
@TVKVijayHQ@RameshOffcl@CMOTamilnadu
தமிழ் இல்லை என்றால் முருகன் இல்லை.
தமிழர்கள் இல்லை என்றால் முருக வழிபாடு என்றோன்றே இருக்காது..
ஆனா நாங்க
தமிழ்க் கடவுள் முருகன்'னு
முப்பாட்டன் முருகன்,
அப்பனே முருகா, கந்தா கடம்பா, என்றெல்லாம் சொல்ல கூடாதுனு ராமனுக்கு பேன் பார்க்கிற சங்கீ பயலுக சொல்லுறானுங்க 😂😂ஒரே சிரிப்பு தான் போங்க..
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Today, we mark the anniversary of the Mullivaikkal Massacre and remember the tens of thousands of Tamil civilians killed by the Sri Lankan military in May 2009. The grief of this loss continues to reverberate through the Tamil community in Ontario and around the world.
We remember those who were killed and disappeared, and we stand with the Tamil community in its ongoing fight for truth, justice, and accountability.
தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில், இலங்கைத் தமிழர் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கும், கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்த எம் உறவுகளின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான குரலாகவும், தமிழர் இனத்தின் உரிமை மற்றும் மரியாதைக்கான உறுதியான நினைவாகவும் இன்று நாம் தலைவணங்குகிறோம்.
இலங்கைத்தமிழர்களின் நலனுக்காக புரட்சித்தலைவர் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை உறுதுணையாக நின்று இருக்கிறார். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.
மேலும், மே 18 தினத்தினை நாம் தமிழ்குடிகளின் எழுச்சி நாளாக கருதவேண்டும். அதனை கருத்தில் கொண்டு பல்வேறுசாதியாகவும், குடிகளாகவும் பிரிந்து கிடக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
தமிழினப் படுகொலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் நினைவில் கொள்கின்ற வகையில் தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அமைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து, அங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே நாளில், இலங்கை போரில் உயிர் தியாகம் செய்த நம் உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வீர வணக்கம் செலுத்தி மலரஞ்சலி செய்ததை என்றென்றும் என் நினைவில் கொள்வேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஒவ்வொரு தமிழரின் தியாகமும் என்றும் வரலாற்றில் அழியாததாகும். அவர்களின் வேதனை, துயரம், போராட்டம் அனைத்தும் தமிழர் இனத்தின் மனசாட்சியாக என்றும் நிலைத்து நிற்கும். இந்த நினைவு நாளில் உயிரிழந்த அனைத்து தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழ் மொழியை பேசினார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக தமிழராய் பிறந்த குழந்தைகளை கூட மிச்சம் வைக்காது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் மரண ஓலம் இன்றும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது .
முள்ளிவாய்க்கால் முடிவல்ல எனக் உரக்க கூறி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழீழ கனவு நிறைவேறும் வரை உறுதியாய் நிற்போம் !
#முள்ளிவாய்க்கால்
#மே18
#இனப்படுகொலைநாள்
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Tamil Identity || அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது
தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Seeman | NTK | TamilDesiyam
#Seeman #NaamTamilar #TamilUnity #TamilIdentity #TamilNation #Viduthalai #TamilNews #NewsTamil24x7
மதுரை மாட்டுத்தாவணியில் அடி வாங்கியவன், மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் போய் சவுண்ட் விட்டானாம்
ஏன் என்று கேட்டதற்கு "சொந்தக்காரன்ங்க இங்கதான் இருக்காங்க" என்றானாம்
யாழ்ப்பாணத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய எம்.பி சென்னையில்போய் சீமான் மீது விமர்சனம் செய்தாராம்.
😂
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!