சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசா��ிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி ��ருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்��ார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam@mkstalin@Udhaystalin
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பி��ரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோச��ைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @keprakashdmk @AbdulmalikDmk @Prabhugajendran
@pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை ��ழுதுவோம்!
@Udhaystalin @dmk_youthwing
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கல��ஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடு�� அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever