உசிலம்பட்டி பெண்குட்டி பாடல சாகுல் ஹமீதும், ஸவர்ணலதாவும் பாடியது, இரண்டுபேறும் இப்ப உயிருடன் இல்ல, அருமையான ரகுமான் மெட்டு.
பாடலின் வரிகள் வலிமையானது..கண்டமனூரு மை..அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு..ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப்பட்டி மடமிருக்கு
வைரமுத்து அவர்களைதான் கேட்கனும் எப்படி எழதினீர்கள் என்று.
1. கண்டமனூரு மை தாரேன்
கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்சு
கைய வைப்ப தெரியாதா
அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு
சேர்ந்து போனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கையில்
மயில புடிப்ப தெரியாதா .........
2. வேப்ப மரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு
இடுப்பு சேல இடைவெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப்பட்டி மடமிருக்கு
ஜென்டில்மேன் படம் - 1993