அண்ணன் கே.சி.வீரமணி., இல்லாத இடத்தில், எங்களுக்கு என்ன வேலை.
எங்களையும் நீக்கி விடுங்கள்.
ஜோலார்பேட்டையில் அவருக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் இரட்டை இலைக்கும் KCV. க்கும் விழுந்த வாக்குகள். EPSக்காக விழுந்த வாக்குகள் இல்லை.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல்.
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu@AIADMKOfficial
2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் Force ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?
அவ்வளவு தில் இருந்தா, #மெர்சல்#மாஸ்டர் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை தற்போது எங்கு திரும்பினும் பாலியல் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வன்முறைக் காடாக மாற்றிய நிர்வாகத் திறனற்ற #பொய்க்கால்_குதிரை_அரசு
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய வெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாளத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர் 1/2
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @IInbadurai ஆகியோர் உடன் இருந்தனர்.
அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம்.
அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா?
எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!
உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
#EidMübarek
@AIADMKOfficial
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள
டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை ,
மிகுந்த அச்சமூட்டுகிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial