புதுவை பெரியகடை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். காவல் நிலையங்களின் கட்டட நிலை, குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டேன். காவல் துறையினரின் பணிச்சூழல் மேம்படத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும்.
மேலும்,புதிய காவல் நிலையக் கட்டடம் அமைப்பது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அதேபோல், பேட்டரி ரோந்து வாகனங்கள் மற்றும் மின் இருசக்கர வாகனங்களுக்கான வசதிகள் உள்ளிட்ட காவல்துறையினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, அவற்றை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பொதுமக்களின் பாதுகாப்பையும் காவல் துறையினரின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நான் உறுதியாக செயல்படுவேன்.
#PoliceWelfare #PublicSafety #InfrastructureDevelopment #LeadershipInAction #PeopleFirst
சொத்துக்களை பிரிக்கப் போகிறீர்களா? இந்த ஒரு ஆவணம் மிகவும் முக்கியம்...
குடும்பத்தில் உள்ள நிலம், வீடு அல்லது பிற அசையா சொத்துகளை வாரிசுகளுக்குள் பிரிக்கும்போது, 'பாகப்பிரிவினைப் பத்திரம்' (Partition Deed) என்பது மிகவும் முக்கியமான சட்ட ஆவணமாகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குச் சொந்தமான கூட்டுச் சொத்துகளை பரஸ்பர சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்காகப் பிரித்துக் கொள்ளும் ஆவணமே பாகப்பிரிவினைப் பத்திரம். இந்த ஆவணம் முறையாக எழுதப்பட்டு, முத்திரைத் தீர்வை (Stamp Duty) செலுத்தி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே எதிர்கால சட்டப் பிரச்சினைகளை பெருமளவில் தவிர்க்க முடியும்.
பாகப்பிரிவினைப் பத்திரத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டிய விவரங்கள்:
✅ அனைத்து வாரிசுகள் மற்றும் உரிமையாளர்களின் முழு விவரங்கள்
✅ பிரிக்கப்படும் சொத்தின் சர்வே எண், பரப்பளவு, எல்லை விவரங்கள்
✅ ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும் பங்கு பற்றிய தெளிவான விவரம்
✅ அனைவரின் சம்மதம் மற்றும் கையொப்பங்கள்
✅ சாட்சிகளின் கையொப்பங்கள்
ஏன் இது அவசியம்?
* எதிர்கால உரிமைத் தகராறுகளைத் தவிர்க்க உதவும்.
* ஒவ்வொருவருக்கும் தனித்தனி உரிமை உறுதியாகும்.
* பின்னர் பட்டா மாற்றம், விற்பனை, கடன் பெறுதல் போன்ற சட்ட நடவடிக்கைகள் எளிதாகும்.
* நீதிமன்ற வழக்குகள் உருவாகும் வாய்ப்பு குறையும்.
பதிவு செய்யாமல் இருந்தால் என்ன நடக்கும்?
பாகப்பிரிவினை வாய்மொழியாகவோ அல்லது சாதாரண காகிதத்தில் எழுதிக்கொண்டோ இருந்தால், பின்னர் உரிமை நிரூபிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக அசையா சொத்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணம் சட்டரீதியாக அதிக வலிமை பெறுகிறது.
முக்கிய குறிப்பு:
குடும்பச் சொத்துகளைப் பிரிப்பதற்கு முன், அனுபவமிக்க வழக்கறிஞர் அல்லது ஆவண எழுத்தாளரின் ஆலோசனையைப் பெற்று, அனைத்து வாரிசுகளின் சம்மதத்துடன் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினைப் பத்திரம் தயாரிப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.
பதிவு செய்யாத பாகப்பிரிவினை - பயம் வேண்டாம்!
சட்டப்படி 3 தீர்வுகள்:
நம்ம ஊர்ல 100-ல 90 குடும்பத்துல இதே பிரச்சனை தான்.
அப்பா உயிரோட இருக்கும்போது 3 பிள்ளைங்களுக்கும் சொத்த பிரிச்சு கொடுத்திருப்பார்.
"நீ வடக்க பார்த்த வீடு,
நீ தெற்கு பார்த்த நிலம்,
நீ தோட்டம் வச்சுக்கோ"னு வாய் வார்த்தையா சொல்லிட்டு போயிருப்பார்.
ஆனா பத்திரம் பதிய மாட்டார். "நமக்குள்ள என்னடா பத்திரம்"னு விட்டுடுவார்.
வருஷம் ஓடும். அப்பா-அம்மா இறந்துடுவாங்க. கூட பிறந்த 2 பேரும் இறந்துடுவாங்க.
இப்போ நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க. சொத்த விக்க போனா, லோன் வாங்க போனா, பட்டா மாத்த போனா ஆபீஸர் கேட்பார்:
"பாகப்பிரிவினை பத்திரம் எங்க?"
அப்போ தான் தலை சுத்தும். "அய்யய்யோ பத்திரமே இல்லையே, இனி சொத்து போச்சா?"னு பயம் வரும்.
பயப்படாதீங்க. சொத்து போகாது. இந்திய சட்டம் உங்க பக்கம் தான் இருக்கு.
முதல்ல ஒரு அடிப்படை உண்மை தெரிஞ்சுக்கோங்க:
பதிவு செய்யாத பாகப்பிரிவினை செல்லாது இது Registration Act Section 17 சொல்லுது. ₹100 மேல மதிப்பு இருக்கிற அசையா சொத்த பிரிச்சா கண்டிப்பா பதியணும். பதியலனா அந்த பத்திரத்துக்கு சட்டப்படி மதிப்பு கிடையாது.
ஆனா இங்க தான் ஒரு Twist இருக்கு.
Limitation Act, 1963 Section 27 சொல்லுது:
"ஒரு சொத்த ஒருத்தர் 12 வருஷத்துக்கு மேல தொடர்ந்து, தடையில்லாம, வெளிப்படையா அனுபவிச்சா, அந்த சொத்து அவருக்கே சொந்தமாயிடும்." இதுக்கு பேரு Adverse Possession.
அதாவது, பத்திரம் இல்லனாலும் 12 வருஷம் நீங்க மட்டும் தனியா அனுபவிச்சா, EB Bill உங்க பேர்ல கட்டுனா, வீட்டு வரி உங்க பேர்ல கட்டுனா, Voter ID, Ration Card-ல இந்த Address இருந்தா, அந்த சொத்து சட்டப்படி உங்களுக்கு சொந்தம்.
சரி, இப்போ தீர்வுக்கு வருவோம். உங்களுக்கு 3 வழி இருக்கு.
வழி 1: விடுதலை பத்திரம் - Release Deed - ரொம்ப ஈஸி
இது தான் 90% கேஸ்ல Work ஆகும் வழி. இறந்து போன உங்க கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க இருப்பாங்க இல்லையா?
அவங்க தான் இப்போ சட்டப்படி வாரிசு.
நீங்க அவங்க கிட்ட போய் பேசணும். "எங்க அப்பா அப்பவே பாகம் பிரிச்சு கொடுத்துட்டார். 20 வருஷமா நான் தான் அனுபவிக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, என் பேருக்கு ஒரு விடுதலை பத்திரம் எழுதி கொடுங்க"னு கேட்கணும்.
அவங்க சம்மதிச்சா, ஒரு Document Writer கிட்ட போய்
"விடுதலை பத்திரம்"
எழுதணும்.
வாசகம் இப்படி இருக்கும்:
"எங்கள் தகப்பனார் பெயரில் உள்ள சொத்தில் எங்களுக்கு சேர வேண்டிய பாகத்தை, [உங்க பெயர்] அவர்களுக்கு முழுமனதுடன் விட்டுக்கொடுக்கிறோம். இனி அந்த சொத்தில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை."
இத எல்லா வாரிசும் கையெழுத்து போட்டு சார் பதிவாளர் ஆபீஸ்ல பதிஞ்சா போதும். Stamp Duty சொத்து மதிப்புல 1% மட்டும் தான். Registration Fee ₹4,000. ஒரு வாரத்துல உங்க பேருக்கு பத்திரம் வந்துடும். பட்டா மாத்திடலாம்.
இதுக்கு தேவையான Document:
1. தாய் பத்திரம்
2. இறந்தவர்களின் Death Certificate
3. வாரிசு சான்று
4. EC
5. உங்க ஆதார், பான் கார்டு
வழி 2: குடும்ப ஏற்பாடு பத்திரம் - Family Arrangement
ஒருவேளை வாரிசுகள் "விடுதலை பத்திரம் வேண்டாம், ஆனா சொத்து உங்களுக்கே இருக்கட்டும்"னு சொன்னா, இந்த வழிக்கு போகலாம்.
எல்லா வாரிசும் ஒண்ணா உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும். அப்புறம் ₹100 Stamp Paper வாங்கி
"குடும்ப ஏற்பாடு பத்திரம்"
எழுதணும். "குடும்பத்துல சண்டை வரக்கூடாதுனு நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்திருக்கோம்.
[சொத்து விவரம்] இனி [உங்க பெயர்] அவர்களுக்கே முழு உரிமையானது"னு எழுதி எல்லாரும் கையெழுத்து போடணும்.
இந்த பத்திரத்த பதிய வேண்டிய அவசியம் இல்ல. ஆனா பதிஞ்சா சட்டப்படி ரொம்ப Strong. இத வச்சே தாசில்தார் ஆபீஸ்ல போய் பட்டா பெயர் மாத்த கேட்கலாம்.
செலவு வெறும் ₹500 தான் ஆகும்.
வழி 3: நீதிமன்ற வழக்கு - Declaration Suit - கடைசி ஆயுதம்
வாரிசுகள் ஒத்து வரல. "எங்களுக்கும் பங்கு வேணும்"னு சண்டைக்கு வந்தா, வேற வழி இல்ல. Court தான் போகணும்.
நீங்க Civil Court-ல "Declaration Suit" போடணும். வக்கீல் மூலமா "நான் இந்த சொத்த 12 வருஷத்துக்கு மேல தனியா அனுபவிக்கிறேன். EB Bill, வீட்டு வரி எல்லாம் என் பேர்ல தான் இருக்கு. அதனால Limitation Act படி சொத்து எனக்கே சொந்தம்னு தீர்ப்பு கொடுங்க"னு கேட்கணும்.
Court-ல நீங்க 12 வருஷ அனுபவத்தை நிரூபிக்கணும். பழைய EB Bill, வீட்டு வரி Receipt, Voter ID, பக்கத்து வீட்டுக்காரங்க சாட்சி எல்லாம் கொடுக்கணும். Judge திருப்தி ஆனா உங்களுக்கு சாதகமா Decree கொடுப்பார். அந்த Decree-அ வச்சு பத்திர ஆபீஸ்ல பதிஞ்சு பட்டா மாத்தலாம்.
இதுக்கு 2 முதல் 5 வருஷம் ஆகும். செலவு ₹50,000 மேல ஆகும்.
அதனால இது கடைசி வழி தான்.
-------------------------------------------------
இப்போ நீங்க உடனே செய்ய வேண்டிய 3 விஷயம்:
1. EC போடுங்க:
https://t.co/0wiZZA0A49 Website-ல போய் இப்போ சொத்து யார் பேர்ல இருக்குனு பாருங்க. அப்பா பேர்ல இருந்தா தான் மேல சொன்ன வழி எல்லாம் Work ஆகும்.
2. வாரிசு சான்று எடுங்க:
இறந்து போன கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க யாரு இருக்காங்கனு VAO ஆபீஸ்ல கேட்டு வாரிசு சான்று வாங்குங்க.
3. பேசி தீருங்க:
வாரிசுகள் கிட்ட நேர்ல போய் பேசுங்க. "சண்டை வேண்டாம், சுமூகமா முடிச்சுக்கலாம்"னு சொல்லுங்க. 90% பிரச்சனை பேச்சுவார்த்தையில முடிஞ்சிடும்.
கடைசியா ஒரு வார்த்தை:
சொத்து பிரச்சனை வந்தா உடனே Court-க்கு ஓடாதீங்க. முதல்ல குடும்பத்துக்குள்ள பேசி பாருங்க. விடுதலை பத்திரம் மூலமா சுமூகமா முடிக்க பாருங்க. நேரம், பணம், மனநிம்மதி மூணும் மிச்சமாகும்.
சட்டம் தெரிஞ்சா எல்லாமே ஈஸி தான். பயப்படாதீங்க.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்
Why is CM Vijay gifting Cabinet-Level Posts to a Non-Tamil Outsider?
The absolute disgrace of the TVK government is officially out!
CM Vijay is shamelessly handing over prestigious state representative posts to his movie producers, managers, and astrologers.
Look at the shocking contrast for Tamil Nadu’s Special Representative in New Delhi.
What qualification does this outsider have to represent 8 crore Tamils?
Zero administrative experience, zero public policy knowledge, and absolutely zero connection to our soil! Is Delhi a place to lobby for your movie distributions and real estate deals under a government seal?
Stop distributing public offices like audio launch passes, CM Saar!
Our state is not a film set to fulfill your personal corporate obligations!
திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மோத தயாராகும் திருமாவளவன்
தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், திருச்சி கிழக்கில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பிடிவாதமாக கூறி வருகிறார். இந்த கோரிக்கை மட்டுமல்லாமல் விசிகவுக்கு பவர் ஃபுல் இலாகா வேண்டும், அதனால் கேபினெட்டை மாற்றி அமையுங்கள், உள்ளாட்சித் தேர்தலில் 3 மேயர்கள் சீட் வேண்டும், அரசு வாரியப் பதவிகளில் 4 இடங்கள் வேண்டும், அரசு வழக்கறிஞர் பதவிகளில் 5 சதவீதம் விசிகவுக்கு வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் வைத்தபடி இருக்கிறார். ஆனால், விஜய்யும் சரி அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்களும் சரி, திருமாவின் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுக்கின்றனர்.
இதனை ஆதவ் மூலம் அறிந்துள்ள திருமா, விஜய்க்கு செக் வைக்கும் விதத்தில், தவெக அமைச்சரவையில் இருக்கிறோமே தவிர, தவெக கூட்டணி கட்சியாக இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்கிற ரீதியில் பேசி வருகிறார். அதாவது , எனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், தவெக அரசுக்கு தந்து வருகிற ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட்டல் தொணி இது !
திருமாவை பொறுத்தவரை, மற்ற கோரிக்கைகளை விட்டுக்கொடுத் தாலும் திருச்சி கிழக்கில், தான் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தை அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்கிறனர் விசிகவினர்.
இதற்கிடையே, தவெகவில் இணைந்துள்ள திருச்சி மாவட்ட அதிமுக வி.ஐ.பி.க்கள் பலரும், திருச்சி கிழக்கில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவிடமும் செங்கோட்டையனிடமும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களும் இதுகுறித்து ஆலோசித்து 3 நபர்களின் பெயர்களை குறித்து வைத்துள்ளனராம். இது குறித்து, விஜய்யிடம் விவாதிக் கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்..
திருச்சி கிழக்கை மையப்படுத்தி தவெக தரப்பில் இப்படிப்பட்ட சீக்ரெட் மூவ்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவிலும் திருச்சி கிழக்கை மையப்படுத்தி அரசியல்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, சட்டமன்றத்திற்குள் போக முடியவில்லையே என்கிற ஆதங்கம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இருந்து வருகிறது. அவரிடம் உரிமையாகவும் நெருக்கமாகவும் பழகும் திமுக தலை வர்களிடம் ஸ்டாலின் பேசும் போது, அவரது பேச்சில் இந்த ஆதங்கம் வெளிப் படுவதை கவனிக்கின்றனர். ஸ்டாலின் குடும்பத்திலும் இந்த ஆதங்கம் இருக்கிறது.
அந்த வகையில், திருச்சி கிழக்கில் நீங்கள் போட்டியிட வேண்டும் தலைவரே என்று மு.க.ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் மாஜி அமைச்சர் கே.என்.நேரு. நீங்கள் இல்லாத சட்டமன்றத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. திருச்சி கிழக்கிற்கு சம்மதம் மட்டும் சொல்லுங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் உரிமையுடன் பேசி வருகிறார் கே.என்.நேரு. ஸ்டாலினிடம் மட்டுமல்லாமல், துர்கா ஸ்டாலினிடமும் வலியுறுத்துகிறார் இவர்.
''கே.என்.நேருவை பொறுத்தவரை, திருச்சி கிழக்கில் தனது எதிரியான அன்பில் மகேஷுக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைத்து விடக்கூடாது. அன்பில் மகேஷுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டு மானால், திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட விரும்பினால் மட்டுமே நடக்கும். அவர் விரும்பாத பட்சத்தில், திருச்சி கிழக்கில் போட்டியிட யார் காய்களை நகர்த்தினாலும் அதனை உடைத்து விட்டு தனக்கு வாய்ப்பை அன்பில் மாகேஷ் வாங்கி விடுவார் என்று கே.என்.நேரு ஆலோசித்துத்தான், திருச்சி கிழக்கில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு வலியுறுத்துகிறார். சட்டமன்றத் துக்குள் போக வேண்டும் என்கிற யோசனை ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஆனால், இன்னும் முடிவாகவில்லை'' என்கிறார்கள் அறிவாலய தரப்பினர்.
🚨 ரேஷன் கார்டு முகவரி மாற்றம்: புதிய கட்டுப்பாடுகள் அமல்! 🚨
குடும்ப அட்டையில் முகவரி மாற்ற புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன:
📌 PDS இணையதளம் வழியாக மட்டுமே இனி விண்ணப்பிக்க முடியும்.
📌 புதிய முகவரிக்கு ஆதாராக, ஆதார் மற்றும் சிலிண்டர் ரசீதுடன், இனி விண்ணப்பதாரரின் 'தந்தை வீட்டின் காஸ் ரசீதையும்' சமர்ப்பிக்க வேண்டும்.
📌 திருமணமான பெண்கள் முகவரி மாற்றம் கோரினால், மனைவியின் தந்தை வீட்டு காஸ் ரசீது கட்டாயம்.
📌 ஆதார், மின் கட்டண அட்டை, வங்கி கணக்கு புத்தகம் இருந்தாலும், காஸ் ரசீது இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!
முழு விவரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 👇
#RationCard #TNPDS #SmartCard #TNNews #TamilNadu #MakkalSevai
டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. , கடைசியாக ஜோசப் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் இந்த வெங்கட் கே. நாராயணன்.
பட்டா விண்ணப்பத்தை கிடப்பில் போட முடியாது! 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்* – சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
⚖️ வழக்கு எண்: W.P. No.31802 of 2023
தீர்ப்பு நாள்:07.11.2023
🏛️ நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதி: P. வேல்முருகன்
வழக்கின் பின்னணி
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர், தமக்கு சொந்தமான நிலங்களுக்கு பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரங்களின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து, சரியான அளவுகளுடன் பட்டா வழங்குமாறு 20.03.2023 அன்று இரண்டு விண்ணப்பங்களை வருவாய்த் துறையில் தாக்கல் செய்தார்.
ஆனால், பலமுறை நினைவூட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் வைத்தும், சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்தனர்.
இதனால், அதிகாரிகளுக்கு பட்டா விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
⚖️ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி P. வேல்முருகன் அவர்கள், வழக்கின் உரிமை தொடர்பான அம்சங்களில் எந்த கருத்தும் தெரிவிக்காமல், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள்:
✅ மனுதாரரின் பட்டா விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியர் (RDO) மற்றும் தாசில்தார் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்.
✅ விசாரணை நடத்தும் முன் மனுதாரருக்கும், அந்த நிலத்தில் உரிமை கோரக்கூடிய மற்ற நபர்கள் (Rival Claimants) இருந்தால் அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
✅ அனைத்து தரப்பினருக்கும் உரிய வாய்ப்பு வழங்கி, சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்.
✅ விசாரணை முடிந்த பிறகு, 3 மாதங்களுக்குள் விண்ணப்பத்தின் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
📢 இந்த தீர்ப்பின் முக்கியத்துவம்
இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமானது.
🔹 பட்டா விண்ணப்பங்களை அதிகாரிகள் காலவரையின்றி கிடப்பில் போட முடியாது.
🔹 மனுவை நிராகரிக்கவோ அல்லது ஏற்கவோ முன்பு உரிய விசாரணை நடத்துவது கட்டாயம்.
🔹 போட்டி உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி கருத்து கேட்க வேண்டும்.
🔹 பட்டா தொடர்பான மனுக்களை நியாயமான காலத்திற்குள், குறிப்பாக நீதிமன்றம் நிர்ணயித்த 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் கவனத்திற்கு
உங்கள் பட்டா மாற்றம் அல்லது பட்டா வழங்கும் விண்ணப்பம் பல மாதங்களாக அல்லது ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, உரிய அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை கோரலாம். தேவையான சூழலில், உயர்நீதிமன்றத்தையும் அணுகி காலக்கெடுவுடன் உத்தரவு பெறலாம்.
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH - State Highways
(2) MDR - Main District Roads
(3) ODR - Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்று அழைக்கிறார்கள். எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் Construction & Maintenance பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.
தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.
இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவரை Senior Technical Officer என்ற பதவியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார். @evvelu .
இதுபோல தோண்ட தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தூய சக்தி ஆட்சி என்ன செய்யப்போகிறது ?
@CMOTamilnadu
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் 379 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின்போது மின்சாரம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கலைவாணர் அரங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.