தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு!
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை @cslcochin மற்றும் @MazagonDockLtd ஆகிய இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ₹4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ₹30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்!
On the first day of Navratri and when the divine Durga Puja season is underway, had the opportunity to pray at the Mata Tripura Sundari Temple in Udaipur, Tripura. Prayed for the well-being and prosperity of my fellow Indians.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ₹30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.
நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களுக்குக் கணக்கே இல்லை. திமுக நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க, நமது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. அதுவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை.
இந்தப் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? என்ன அடிப்படையில் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இடிந்து விழும் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது, இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஏற்கனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கையில், தொடர்ந்து அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதன் பின்னணி என்ன? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, இவை அனைத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்.
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75-ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் வெகு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வரும் மோடி அவர்களை பிரதமராக அடைந்ததற்கு, இந்த நாடே பெருமிதம் கொள்கிறது.
#HappyBdayPMModi
பாரத மக்களின் காவலனாகவும், பல கோடி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
#HappyBdayPMModi
ஒப்பற்ற தலைவர்!
ஈடு இணையற்ற தர்ம போராளி!
பாரதத் தாயின் தவப்புதல்வர்!
தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர்!
கர்மயோகி!
எங்கள் பாரதப் பிரதமர்!
மாண்புமிகு திரு.@narendramodi அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
#HappyBdayPMModi#SevaParv
Delighted to meet & welcome the Hon Dy CM of Andhra Pradesh Thiru @PawanKalyan garu on his arrival in Temple city Madurai today to attend the Muruga Bakthargal Manadu.
#MuruganManadu
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தந்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், @JanaSenaParty கட்சியின் தலைவருமான @PawanKalyan அவர்களை, மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான சகோதரி டாக்டர். @DrTamilisai4BJP அவர்களுக்கு என் அன்பிற்கினிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும், அவர் தன் மக்கள் நலப் பணியை என்றும் சிறப்பாக தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.