முகநூலில் 60 K ஃபாலோயர்ஸ் என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கிறேன்.உயிருள்ளவரை உணர்வோடு களத்திலும் தளத்திலும் இந்த இயக்கத்திற்காக உண்மையாய் உழைக்க வேண்டும் என்ற உறுதியோடு பயணத்தை தொடர்கிறேன்...துணை நிற்கும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய நன்றி!🖤❤️🖤❤️🙏🙏
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
அன்று பதவியை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுத்தவர் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள்.
இன்று பதவிக்காக ஆட்சியாளர்களிடம் சென்று ஒட்டிக்கொண்ட IUML கட்சி, காயிதே மில்லத் அவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது அசிங்கம்.
@pudugaiabdulla
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar.
#TVKFails
இதுல ரெண்டு மெசேஜ்ஜ திமுக அழுத்தமா சொல்லிருக்கு
1.காங்கிரஸ் பங்கேற்கும்
இந்தியா கூட்டணியில் திமுக பங்கேற்காது
2. இக்கூட்டத்தில் பங்கேற்காத அதே வேளையில் அதில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனை பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? கேடுகெட்ட தற்குறி கூட்டம் பாஜகவோடு திமுக கூட்டணி வைக்கப் போகிறது பாஜக கொண்டு வரும் சட்டங்களை திமுக ஆதரிக்கும் என்று பரப்பிய வதந்திகளுக்கும் சேர்த்து செருப்படி கொடுத்துள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
#அரசியல்Post | அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி MLAக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
#SunNews | #DMK | #MKStalin
நெருக்கடி காலத்தில் உடன் நிற்பவன் தான் நல்ல நண்பன். மற்ற மாநில கட்சி தலைவர்கள் திமுக தலைவர் திரு @mkstalin அவர்களை சந்தித்து காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைப்போம் என்று கூறியபோது அதனை மறுத்து ராகுல் காந்திக்கு உறுதுணையாக இருந்தது திமுக. காங்கிரஸ் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
#WATCH | "MLA பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன், ஆனால்.."
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்பு சிதம்பரம் தொகுதி MLA தமிமுன் அன்சாரி உருக்கம்
#SunNews | #MKStalin | #DMK | @ThamimunansariM
#WATCH | கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது கண் கலங்கிய தொண்டர்கள்.. ‘அழக்கூடாது’ எனக் கூறி தேற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #MKStalin | #Kolathur | @mkstalin
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
நேத்தே ஒரு post போட்டேன்... புதுச்சேரி போலவே, தமிழ்நாடு CBSC பள்ளிகளிலும் இனி french கிடையாது, இனி இரண்டாம் / மூன்றாம் மொழியாக ஹிந்தி படிக்க வேண்டும்.. இது அனைத்து வகுப்புக்கும் பொருந்தும்.. அதாவது 1-4 french படித்த பிள்ளைகள் இனி நேரடியாக 5ம் வகுப்பில் ஹிந்தி படிக்க வேண்டும், ஹிந்தியில் அ னா ஆவன்னா கூட தெரியாத பிள்ளைகள் நேரடியாக எப்படி பெரிய பாடங்களை படிப்பார்கள்.. தமிழ்நாட்டில் திமுக போன அடுத்த நாள் இந்த செய்தி அனைத்து பெற்றோருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது..
நம்புங்கள் மக்களே இதுவும் மாற்றம் தான் 🤧
திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை:
குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு, மாணவர்களின் உற்சாகம், பெண்களின் பேராதரவு!
இவர்களை மீறி நம்மை வெல்பவர் யார்!
#TiruvannamalaiWithDMK#வெல்வோம்_ஒன்றாக#VoteForDMK