ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விசயத்தில் ஏன் இழுபறி இதில் அரசியல் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது
எப்படி இருக்கிறது?
மாநிலத்தில் அரசு அடித்தால் மத்திய அரசிடம் ஜனநாயகன் செல்லவேண்டும்.அதைதான் மாநில அரசும் எதிர்பார்க்கிறது.ஆனால் ஜனநாயகன் மத்தியரசிடம் கெஞ்ச விரும்பவில்லை இருவரும் ஒன்றுதானே என நினைக்கிறானோ என்னவோ தெரியவில்லை.
மாநில அரசும் ஜனநாயகன் மத்தியரசிடம் போகட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தது.காரணம் அதை வைத்து "பார்த்திர்களா ஜனநாயகன் சங்கி"என கூறி வீழ்த்தலாம் என்று இருந்தது.
ஆனால் அவன் சென்றது நீதிமன்றம்.
இது சரியான முடிவு வர இருக்கும் தேர்தலுக்கு.
ஜனநாயகம் வென்றே தீரும்.
Why @Atlee_dir is India’s leading director, it’s because of his loyalty . One of the biggest directors in India says that his today’s stature is because of Vijay !
தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி @TVKVijayHQ முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன்.
என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! @AadhavArjuna@BussyAnand
On the 69th Remembrance Day of the visionary and revolutionary Dr. B.R. #Ambedkar, we paid our respects to his portrait along with our party administrators.
@TVKVijayHQ#TVK#Alangulam#Tenkasi
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்ட மேதை, அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினேன். இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சத்தியபாமா, மாவட்ட கழக செயலாளர் திரு. பிரதீப்குமார் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை. ஆலங்குளம் அருகே நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு. சாத்தான்குளத்தைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரான மெட்டில்டாவின் கணவர் ஜேம்ஸ் வெட்டிக்கொலை.
கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இவை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து குற்றச்சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறி வருகின்றன. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் தான் வாழ வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
இன்னும் தமிழ்நாடு அமைதி மாநிலமாகத் திகழ்கிறது எனும் நாடகத்தை விட்டொழித்து, மக்கள் நலனுக்கு எப்போது முக்கியத்துவம் கொடுப்பீர்கள் @mkstalin அவர்களே?
கண்டன ஆர்ப்பாட்டம்
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11.00 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.
போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
கழக மகளிரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 65 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மகளிரணி
1. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
2. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
3. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
4. ஈரோடு கிழக்கு மாவட்டம்
5. ஈரோடு மாநகர் மாவட்டம்
6. ஈரோடு மேற்கு மாவட்டம்
7. கடலூர் கிழக்கு மாவட்டம்
8. கடலூர் தெற்கு மாவட்டம்
9. கடலூர் வடக்கு மாவட்டம்
10. கரூர் கிழக்கு மாவட்டம்
11. கரூர் மேற்கு மாவட்டம்
12. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
13. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்
14. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
15. காஞ்சிபுரம் மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்
17. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
18. கோவை கிழக்கு மாவட்டம்
19. கோவை தெற்கு மாவட்டம்
20. கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
21. கோவை மாநகர் மாவட்டம்
22. சிவகங்கை கிழக்கு மாவட்டம்
23. சிவகங்கை தெற்கு மாவட்டம்
24. சிவகங்கை வடக்கு மாவட்டம்
25. சென்னை கிழக்கு மாவட்டம்
26. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்
27. சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்
28. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
29. சென்னை புறநகர் மாவட்டம்
30. சென்னை மத்திய மாவட்டம்
31. சென்னை மத்தியம் (தெற்கு) மாவட்டம்
32. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்
33. சென்னை வடமேற்கு மாவட்டம்
34. சேலம் கிழக்கு மாவட்டம்
35. சேலம் தெற்கு மாவட்டம்
36. சேலம் மத்திய மாவட்டம்
37. சேலம் மேற்கு மாவட்டம்
38. சேலம் வடமேற்கு மாவட்டம்
39. தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்
40. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
41. தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
42. தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்
43. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
44. தருமபுரி கிழக்கு மாவட்டம்
45. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம்
46. திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்
47. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
48. திருச்சி மாநகர் மாவட்டம்
49. திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம்
50. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம்
51. திருப்பூர் கிழக்கு மாவட்டம்
52. திருப்பூர் தெற்கு மாவட்டம்
53. திருப்பூர் மேற்கு மாவட்டம்
54. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
55. திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
56. நாமக்கல் கிழக்கு மாவட்டம்
57. நாமக்கல் மேற்கு மாவட்டம்
58. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்
59. புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
60. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
61. மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
62. மயிலாடுதுறை மாவட்டம்
63. விருதுநகர் தென்மேற்கு மாவட்டம்
64. விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்
65. விழுப்புரம் வடமேற்கு மாவட்டம்
(1/2)