IndiaTamizhan! CongressMan! A true follower of @INCIndia @RahulGandhi ji & @manickamtagore ji Followers.
State Vice President, TNPCC - OBC
RTs not Endorsements
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடுவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.
இந்த விழாவில், முதலில், 'வந்தே மாதரம்', அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. என். சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.
"மாநில ஆளுநர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், முதலில், 'வந்தே மாதரம்' அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவமதிக்கப்பட இதுவே காரணம். இந்த உத்தரவை திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்றாலே பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் வேப்பங்காயாக கசக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது, அந்த வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சேர்ந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு, எப்போதும் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், மாநில உரிமைகளை உயிருக்கு மேலாக போற்றி வரும் மாநிலம் தமிழ்நாடு. இதை அமித்ஷா உணர்ந்து கொள்வது நல்லது. மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை துச்சமென மதித்து அதிகார அத்துமீறலில் ஈடுபடும் அமித்ஷாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஆளுநரின் பின்னால் ஒளிந்து கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவமானம் இழைக்க நினைக்கும் அமித்ஷாவின் செயலை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. அதே நடைமுறையை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இனிவரும் அரசு விழாக்கள் அனைத்திலும் பின்பற்ற வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் இதுதான். அதை மத்திய பாஜக அரசும், அமித்ஷாவும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடினால், அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது மிகக் கடுமையானதாக இருக்கும்.
தலைவர் திரு ப. மாணிக்கம் தாகூர்
கோவை & மதுரைக்கு மெட்ரோ ரயில் மறுப்பா?
அதே பழைய ரீலை சுற்றும் மோடி அரசு!
@narendramodi அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
ஒவ்வொரு ஆண்டும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரிக்க அதே பழைய ரீலைத் தான் சுற்றுகிறார்கள்... எந்த மாற்றமும் இல்லை!
இதுதான் பழைய ரீல்:
1. பழைய கணக்கெடுப்பு சாக்கு: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், 14 ஆண்டுகள் பழமையான 2011 கணக்கீட்டைப் (கோவை 15.84 லட்சம், மதுரை 15 லட்சம்) பிடித்துக்கொண்டு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை எனத் திட்டம் நிராகரிக்கப்படுகிறது.
2. இரட்டை நிலைப்பாடு: ஆக்ரா, போபால், பாட்னா, இந்தூர் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ வழங்கிவிட்டு, தென்னகத்தின் முக்கியத் தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களான கோவை & மதுரைக்கு மட்டும் BRTS-ஆ?
3. வளர்ச்சிப் புறக்கணிப்பு: மிதக்கும் மக்கள் தொகை (Floating Population) மற்றும் நகர்ப்புற அதிவேக வளர்ச்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?
பழைய தரவுகளைக் காட்டி தமிழக நகரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதை நிறுத்துங்கள்!
கோவை மற்றும் மதுரைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிடுக!
#CoimbatoreMetro #MaduraiMetro
#StopDiscrimination
ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) திரு. கே.சி. வேணுகோபால் அவர்கள் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.
தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2029-ல் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!
#RahulGandhi #RGinTamilNadu #Congress #JaiHind
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, அய்யப்பராஜ், பாண்டிதுரை ஆகிய 4 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!
மேலும், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரன் விரைந்து குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu #Sivakasi #Virudhunagar
Today, we are here to celebrate your courage, spirit of service and duty.
: Congress General Secretary & Wayanad MP Smt. @PriyankaGandhi ji at the Felicitation of the Kalladi Rescue and Relief Teams.
📍 Wayanad, Kerala
"டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு திமுக , அதிமுக குரல் கொடுக்கவில்லை"
நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் பேச்சு
#ManickamTagore#NEET#Congress#DMK#ADMK #News18TamilNadu
இன்று காலை , காங்கிரஸ் #SOSSevaDal தோழர்களுடன் முதன்மை அமைப்பாளர் @srinivasiyc அவர்கள் ஜந்தர் மந்தரில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார் .
மக்கள் இயக்கம் என்பது வெறும் குரல் எழுப்புவதால் மட்டுமல்ல ; பொறுப்பை ஏற்று செயல்படுவதாலும் வலிமை பெறுகிறது . சேவை , போராட்டம் , அர்ப்பணிப்பு – இவையே காங்கிரஸ் சேவாதளத்தின் அடையாளம் . 🇮🇳
Every candle carried a message:
We will not be silent. We will not back down.
From the streets to Parliament, we will continue our fight against the BJP government until justice prevails. 🕯️
#Congress
@INCTamilNadu@manickamtagore ஆகிய கட்சிகள் பிரதிநிதிகளை அழைத்து நடத்தி தமிழகத்தின் புதிய அரசியல் அத்தியாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற நமது @INCTamilNadu தலைவர் திருமிகு.ப. @manickamtagore அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற அனைத்து தலைவர்களுக்கும் அனைத்து தொண்டர்களுக்கும், நன்றி.. நன்றி.. (2/2)
தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் வஞ்சித்து வரும் மத்திய அரசினை எதிர்த்து
@INCTamilNadu சார்பில்
மாணவர்களின் நலனுக்கான ஒரு மாபெரும் போராட்ட நிகழ்வினை, தமிழக வெற்றி கழகம்,கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதிமுக,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (1/2) @manickamtagore
மாணவர்களின் நலனுக்காக நமது மரியாதைக்குரிய @INCTamilNadu தலைவர் திருமிகு.ப. @manickamtagore அவர்கள் ஏந்திய தீப்பந்தம், மாணவர்களின் வாழ்வில் புதிய ஒரு ஒளியாகவும், தீய சக்திகளை தீயிட்டு கொளுத்த போகும் மாபெரும் அக்கினியாகவும் இருக்கப் போகிறது
என்பதனை வரலாறு சொல்லும்.. 🔥🔥