ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்த��ய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
கேட்க தான செய்வாரு ??
சொந்தமா நீங்களே முயற்சி பண்ணி அந்த செயல்களை செஞ்சு இருந்தா தாரளமாக நாங்களே உங்களை பாராட்டுறோம்
நாங்க கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 😊
ஒச்சே அடி 🔥🔥🔥
மக்கள் என்னை தேடினால் முதல் ஆளாக இருப்பேன்
என்னை சட்டமன்றத்துல தேடுறீங்கன்னு கேள்வி பட்டேன்
கோட்டைல எந்த திட்டத்தை எடுத்தாலும் அந்த கோப்புல மு.க.ஸ்டாலின் கையெழத்து போட்டு கோட்டைல நான் தாங்க ராஜா மாறி இருப்பேன்ங்க 🔥🔥
- ஆருயிர் தலைவர்
@mkstalin...😍💥
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு��ளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
ச��ங்கல்பட்டு கோர்ட்டில் கணவ��ை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் ப���ருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்��ு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவர��க்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
TN fought. TN won.
#Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance.
Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism.
The south stood united and made its voice heard. Democracy prevailed.
We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain.
This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering.
My sincere thanks to all opposition parties who stood united.
#TNWillFightTNWillWin #SayNoToNDA
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!
இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது.
தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!
நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்ட���ன் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!
இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும���. இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
உடன்பிறப்புகளே,
நம்ம உரிமை, நம்ம மாநிலம், நம்ம சுயமரியாதைக்காக
கருப்பு கொடி உயர்த்தி களத்தில் இறங்கும் நேரம் வந்துடுச்சு!
ஒன்றுபட்டு நின்றால் தான் பார்ப்பனிய அடக்குமுறைக்கு முடிவு!
#BlackFlagProtest#திமுக_போராடும்_திமுக_வெல்லும்
ஜனநாயகன் படம் விஜய் PR டீம் தான் திட்டமிட்டு அரசியல் ஆதாயம் தேடி வெளியிட்டுள்ளார்கள்.. என்ற குற்றச்சாட்டில் நியாயமான காரணம் இருக்கா?
படம் 300 கோடி பட்ஜெட் என கணக்கு காட்டியுள்ளனர்.
அதில் 200 கோடி விஜய் சம்பளம்..
இந்த பட தயாரிப்பாள��் முன்னர் எடுத்த 2 படமும் 2 கோடி தான் செலவில் எடுத்தார். திடீர் என்று 300 கோடி எங்கே வந்தது!
ஆக
இவர் படம் ��டுத்த காசு விஜய் கணக்கு தான். அப்படி என்றால் படம் எடுக்க 100 கோடி செலவிட்டாரா தன் சம்பளம் போக? அதுவும் இல்லை 60 கோடிக்கும் கீழ் - சினிமா கணக்கு காட்டுவது எளிது.
60 கோடி எடுத்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் வசூல் பண்ணிவிடும் எப்படி வந்தாலும் லாபம் தான். எளிதில் தியட்டர், OTT , TV என 200 கோடி எடுத்துவிடும். ஆக எப்படி பார்த்தாலும் லாபம் தானே!
சரி படத்தை மொத்தமா கசிய விடுங்க..
ஒன்று கட்சி பிரச்சாரமாக இருக்கும்.
இரண்டு மக்களிடம் அனுதாபம் தேடலாம்.
ஆக நிச்சயம் விஜய் தரப்பில் தான் படம் லீக் செய்திருக்க வாய்ப்பு அதிகம்.
போலீஸ் தானாக முன்வந்து அனைத்து தரப்பு குற்றச்சாட்டையும் விசாரிக்க வேண்டும்.
இந்த காணொளி பாத்திங்க'ன்னா யார் #JanaNayagan படத்தை இணையத்தில் leak செய்தது என்று புரிந்துவிடும்.
1. Editor
2.Producer
3. Director
4. Carrier உச்சம் Vijay
இவங்க நாலு பேரல யாரோ ஒரு ஆள் தான்.வேற யாருமில்லை 100% சதவீதம் confirm.
ஜனநாயகன் லீக் மொதல்ல பேசிக் ஃபேக்ட் தெரிஞ்சுக்கோங்க!
'ஜனநாயகன்' படம் யாரால லீக் ஆச்சுன்னு கேக்குறதுக்கு முன்னாடி, கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க. இது தியேட்டர்ல திருட்டுத்தனமா எடுத்த சாதாரண பைரசி பிரிண்ட் கிடையாது.
இந்த பிரிண்ட்ல 'Edit Reference Mark' இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? இது டைரக்டா ஒரு Personal Copy' சினிமா இண்டஸ்ட்ரி புரோட்டோகால் படி இந்த மாதிர��� காப்பி தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் இந்த நாலு பேர்கிட்ட மட்டும்தான் இருக்கும்.
இப்படி இருக்கறப்போ படம் எப்படி லீக் ஆகியிருக்கும், எங்கிருந்து வந்திருக்கும்னு கொஞ்சமாவது அறிவுப்பூர்வமா யோசிக்கணும். அதை விட்டுட்டு, எந்த சம்பந்தமும் இல்லாம, ஒரு எவிடென்ஸும் இல்லாம "திமுக தான் காரணம்"னு காரைக்குடியில போய் பேசப்போறான்.
லாஜிக் இல்லாம எதையாவது அடிச்சு விடுறதுக்கு முன்னாடி, இந்த டெக்னிக்கல் விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க!
#JanaNayagan