நாம் தமிழர் கட்சியை ஆதரிக்காத தமிழ்த்தேசியவாதி கூட இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பவன் ஒருபோதும் தமிழ்த்தேசியவாதியாக இருக்க முடியாது.
அவன் தமிழ்த்தேசிய துரோகிதான்...
காவிரி நதிநீர் உரிமையின் அடிநாதம்கூட தெரியாத அடிமுட்டாள்களை முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் ஆக்கியதன் விளைவை தமிழ்நாடு எதிர்கொள்ளப் போகிறது.
கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முதலமைச்சர் விஜய்யின் முடிவு முட்டாள்தனத்தின் உச்சம்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நடுவர் மன்றம் வலியுறுத்தியும் கேட்காத கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார், விஜய் கூறியதும் கேட்டுவிடுவாரா? சட்டத்திற்குக் கட்டுப்படாத கர்நாடக அரசு, பேச்சுவார்த்தைக்குப் பணிந்து வருமா?
காவிரிச்சிக்கலுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வை எட்ட முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, பல கட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
இவ்வளவு ஆண்டுகாலமாகப் போராடித் தக்க வைத்திருக்கும் குறைந்தபட்ச உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்க்கப் போகிறது கேடுகெட்ட தவெக அரசு.
#கோணத்துவிளை முதல் #வாலக்குளம் வழியாக மேல #காட்டுவிளை செல்லும் சாலையில் சிறு பாலம் அமைத்து, 5 இடங்களில் குளத்திற்கு தண்ணீர் செல்ல குழாய் அமைத்து, இடையூறாக இருந்த பாறைகளை உடைத்து, பள்ளமான இடங்களில் மண் இட்டு, ரோடு ரோலர் மூலம் சமன்படுத்தப்பட்டு பின்னர் கான்கிரீட் அமைப்பதற்காக பேரூராட்சிக்கு வழங்கப்பட்டு தற்போது கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
#ancyshobarani
#ஆன்சிசோபாராணி
தமிழன் படத்தில் செய்த விஜய் அவர்கள் முதல்வரானதற்கு பிறகு ஏன் அவர் கடனை அவர் கட்டவில்லை ,அவர் அமைச்சரவை ஏன் இதை செய்யவில்லை ,தவெக MLAக்கள் ஏன் இதை செய்யவில்லை ? அப்போ கடமை தவறிட்டார்களா?
விளம்பரத்தை கொஞ்சம் நிறுத்துங்கள் தவெக நண்பர்களே... வழக்கறிஞர் ,சமூக சேவகர் போன்ற Tagயை மாட்டிக்கொண்டு விளம்பரத்திற்கு இப்படியான வேலைகளை செய்யாதீர்....
அரசு தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் ,வருமானத்தை பெருக்க வேண்டும் பிறகு கடன் தானாக அடையும்.
விளம்பரத்தை தவிருங்கள்
மாரிதாஸ் கைதில் நீதிமன்றத்தில் அசிங்கப்பிட்டிருக்கிறார் விஜய்.. தன்னிடம் காவல்துறை இருக்கிறது என்பதற்காக பழிவாங்க புறப்பட்டால் இப்படி தான் கேவலப்பட வேண்டும். எந்த சமூக ஊடகத்தால் ஆட்சிக்கு வந்தீர்களோ அந்த சமூக ஊடகத்தில் எழுதுபவர்களையும் பேசுபவர்களையும் அடக்காதீர்கள். கடந்த ஸ்டாலின் ஆட்சி வீழ்ந்ததற்கு தவறான அதிகாரிகளும் அதிகாரத் திமிரும் தான் பாதி காரணம் அதே வழியில் விஜய் செல்கிறார்.
#அசிங்கப்பட்ட🛺
@Unmai_Kasakkum அனைவரும் ஐபிஎல் பார்க்க சென்றுவிட்டார்கள். அடுத்து பிக் பாஸ், குக்கு வித் கோமாளி, சூப்பர் சிங்கர் என்று போய்ட்டே இருப்பானுங்க தவிட்டு தற்குறிங்க.
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi
திமுக கூட்டணியில் தொடர்கிறோம்.
இந்த கூட்டணியை கடுமையாக எதிர்த்து, இந்த கூட்டணியின் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து, வேட்பாளர்களை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு பூத்திலும் விமர்சித்து, சண்டை போட்டு எதிர்த்து போட்டியிட்ட தவெகவை
ஆதரிக்கிறோம்.
- திருமாவளவன்,இடதுசாரிகள்.
உங்களுக்காக ஒவ்வொரு பூத்திலும் நின்று, உழைத்த கட்சிக்காரனை நினைத்த இடங்களில் எல்லாம் அடகு வைப்பது தான் அரசியல் என்றால்..
அதுதான் நாசமாய் போன, முட்டாள்தனமும் திரைப்பட ரசிக மனப்பான்மையும், நிரம்பிய இந்த ஜனநாயகத்தை காப்பாற்றும் என்றால்..
நல்லவேளை ..
நாங்கள் தோற்று விட்டோம்.