பள்ளிகளில் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் செய்யும் தரம் தாழ்ந்த அரசியலைத் தொடரும் தவெக நிர்வாகிகள், இன்று ஒருபடி மேலே சென்று அரசுப் பள்ளியைச் சினிமா தியேட்டராக மாற்றி, புதிதாக வெளியாகும் முதலமைச்சரின் திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டி கல்விக்கூடங்களை அவமதித்துள்ளனர்.
எதற்கெடுத்தாலும் கருத்து கந்தசாமியாக முந்திக்கொண்டு அறிக்கை விடும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இந்த அத்துமீறலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
“தொட மாட்டேன், தொட்டா விட மாட்டேன்” என்பதெல்லாம் #JanaNayaganFDFS பிளாக் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாதா @actorvijay ?
உங்க ஊரில் #JanaNayagan FDFS டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க நண்பர்களே..!!
எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..
ஜனநாயகம் வேண்டும்!
போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா?
வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?
பதில் இருக்கிறாதா?
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் என்ற
இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
போலீசார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் மரண வாக்குமூலம்..
ஜனநாயகத்தின் முதல் கடமை, ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான்.
இது ரீல் ஜனநாயகனுக்கு தெரிய வாய்பில்லை.
தன்னுடைய ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து ரீல் ஜனநாயகன் @CMOTamilnadu என்ன பதிலளிக்க போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்,
கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்,
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
29.7.2026 - புதன் கிழமை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தேர்தல் காலம் வரை தன்னை நீட் எதிர்ப்புப் போராளியாக வேடமிட்ட @CMOTamilNadu, இன்று நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குகிறார்!
இரண்டு மாதங்களாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மௌனம் காக்கும் முதல்வர், ஜனநாயக ரீதியாகப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது வாயைத் திறந்து பதில் சொல்வாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழக மக்கள் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சுகாதாரத்துறை அமைச்சரோ சினிமா கொண்டாட்டங்களில் மும்முரமாக இருப்பது தமிழகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு