தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கிய நீர்நிலையான 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கும் பணிகள் இன்று 16/07/2026 தொடங்கப்பட்டது.
இந்த ஏரி சீரமைப்பு முழுமை பெற உதவி தேவை.
உதவுவதற்கு : 9345420445, 9025351318.
உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடம் இது தான்.
ஒரு சிறிய ஊற்றாக தொடங்கி விக்டோரியா ஏரியின் நீருடன் இந்தப் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளின் வாழ்வாதாரமாக மாறுகிறது💫
#NileRiver#SourceOfTheNile#Jinja#Uganda#LakeVictoria#Nature#Africa
நம்ம குறுங்காடு💚
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை கஞ்சங்காடு கரம்பக்காடு பூங்குடி குளத்தில் நாம் வைத்த குறுங்காட்டின் 2.5 வருட வளர்ச்சி💫
நம்ம குறுங்காடு💚
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை கஞ்சங்காடு கரம்பக்காடு பூங்குடி குளத்தில் நாம் வைத்த குறுங்காட்டின் 2.5 வருட வளர்ச்சி💫
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
நாடக இயக்குநர், பேராசிரியர், அன்பு நண்பர் கே.எஸ். ராஜேந்திரன் அவர்களின் நினைவு நாள் இன்று.
டெல்லியில் இந்தியா கேட் அருகே நாங்கள் வாழ்ந்த காலத்தில் தேசிய நாடகப் பள்ளி எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அங்குப் பேராசிரியராகப் பணியாற்றிய நண்பர் ராஜேந்திரனின் மூலமாகப் பல நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அருகருகே வசித்ததால் மாலை நேரக் காபியிலும் இரவு விருந்துகளிலும் நாடகம், கலை, எழுத்து சார்ந்த எங்களின் உரையாடல்கள் எப்போதும் சுவாரசியமாக நீண்டன. அவரோடு பகிர்ந்துகொண்ட அந்தத் தருணங்கள் எங்களின் டெல்லி வாழ்க்கையின் ஆகச்சிறந்த நினைவுகளாக இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன.
அவருடைய ஓர் ஒளிப்படம் பிடித்திருந்தது, அதை பென்சில் ஓவியமாக வரைந்தால் அழகாக வரும் என்று நினைத்தேன். “இப்படி யோசித்த பல படங்கள் என் சேமிப்பில் பல வருஷங்களாக இருக்கின்றன. இதையும் சேர்த்துக்கொள்கிறேன்,” என்றேன். அவரும் சிரித்தார். ஆனால், ஒரு நீண்ட வார இறுதியில் வரைந்துவிட்டேன். அவருடைய ஒரு நாடகத்தைப் பார்த்த பிறகு 2010இல் அவருக்குப் பரிசளித்த ஓவியம் தான் இது. அவரின் குழுவினர், மாணவர்கள், பார்வையாளர்கள் என்று எல்லோருக்கும் காட்டினார்.
செய்திறனும் காட்சி இன்பமும் கதாபாத்திரங்களின் அருகாமை உணர்வும் அவருடைய நாடகங்களில் மேலோங்கி இருந்தன. இந்திரா பார்த்தசாரதி எழுதிய அவுரங்கசீப் நாடகத்தின் கடைசி நொடியில் தலைநிமிரும் தருணம், ஷேக்ஸ்பியரின் மூன்றாம் ரிச்சர்டு நாடகத்தின் இன்னொரு குதிரை கொண்டுவா என்று பதறும் போர்க்களக் காட்சியை ஒரு சில அடிகளில் நிகழ்த்திக்காட்டியது, பீட்டர் வைஸ் எழுதிய மாராட்/சாடே நாடகத்தின் அழுத்தித்தாக்கும் உணர்வு என்று பல அற்புத மாலைகள் எங்களுக்குக் கிடைத்தன.
உண்மையான கலைஞர்கள் உலகை நமக்காகப் பார்ப்பதில்லை. நாமும் உடனிருக்கும்போது இருட்டில் ஒளிபாய்ச்சி நம்முடன் பார்க்கிறார்கள். நம்மைப் பார்க்கவைக்கிறார்கள். ராஜேந்திரன் அதை மேடையில் செய்தார். மற்றவர்களுக்குச் செய்யக் கற்றுக்கொடுத்தார்.
#நினைவஞ்சலி #தேசியநாடகப்பள்ளி
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
"என்னைப் பொறுத்தவரை, எந்தவித அச்சமும் சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.”
-பாபாசாகேப் அம்பேத்கர்
ஒரு அண்ணனின் ஆசை நிறைவேறியது
தவறான நண்பர்களுடன் சேர்ந்து இருந்த தனது தம்பியை திருத்தி காவல் துறை தேர்வில் வெற்றிபெறச் செய்த அண்ணன்
சந்தோஷம் இது போல் அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
"படிக்கலாம் என்கின்ற எண்ணம்கூட தோற்றுப் போகிறது..." 📉📚
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
நிறைய மாணவர்கள் படிக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குப் படிக்கப் பிடிக்காதது அல்ல. இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியாததே காரணம்:
1️⃣ எப்படிப் படிப்பது? (How to study?)
2️⃣ எங்கிருந்து தொடங்குவது? (Where to start?)
3️⃣ படித்ததை எப்படி நினைவில் கொள்வது? (How to retain?)
4️⃣ அதை எப்படி வெளிப்படுத்துவது? (How to present?)
இந்தக் கேள்விகள் ஒரு மலையாக மாறி அவர்களை அழுத்துகின்றன.
எனது "விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?" நூலைப் படித்த ஆசிரியர் ஒருவர், இந்த நிலைக்கு ஒரு தீர்வை அடையாளம் கண்டிருக்கிறார்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்:
"இத்தனை கேள்விகளுக்கும் ஒரு புத்தகத்தில் விடை இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது இந்தப் புத்தகம்.
பயணி தரனின் பயணம் மிக மென்மையானது; அது மூளையின் நரம்புகளுக்குள் ஊடுருவுகிறது."
அறிவியல் என்பது மூளையைக் கசக்கக் கூடாது; அது மூளையின் நரம்புகளுக்குள் மென்மையாக ஊடுருவ வேண்டும்.
அதைத்தான் நாவல் வடிவத்தில் இருக்கும் இந்த நூல் செய்கிறது. 🧠🌱
இவ்வளவு கவித்துவமாக விமர்சித்த அந்த ஆசிரியருக்கு நன்றிகள்!
புத்தகத்தைப் பெற:
📕 விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?
GPay: 9444960935 (பாரதி புத்தகாலயம்)
விலை: ₹190 (டெலிவெரி இலவசம்)
#Education #StudentProblems #LearningSuccess #TamilBooks #BrainScience #PayaniDharan
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
Happy New Year 2026❤️
புத்தாண்டின் முதல் நாளை உலகின் மிகப்பெரிய தெப்பக்குளமான மன்னார்குடி தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகளிலிருந்து தொடங்குகிறோம்.
இதுபோல் உங்கள் பகுதிகளிலோ, உங்களுக்கு தெரிந்த இடங்களிலோ கோவில் குளங்கள்/ தெப்பக்குளங்கள் சீரமைக்க தொடர்பு கொள்ளவும்
ராம் - 6383979335.
நான்கு பக்கமும் தண்ணீர் சூழ்ந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாலத்தளி கடமாங்கால் ஏரி குறுங்காடுகளில் மரக்கன்றுகள் வைக்கும் பணிகளை தொடங்கிவிட்டோம்!
❤️