உண்மையில் சரக்கு அடிக்க காரணமெல்லாம் எதுவுமில்லை
அவர்களுக்கு சரக்கு பிடித்திருக்கிறது
அவ்வளவுதான்
சரக்கு வசூலை அதிகரிக்க
நினைக்கும் அரசாங்கத்திற்கும்
அதுதான் பிடித்திருக்கிறது
இந்த சந்திப்பே கடைசியாக இருக்க
அதிக சாத்தியங்கள் இருந்தபோதும்
கடைசிவரை நீ என்னை
திரும்பிப் பார்க்கவே இல்லை;
வழிந்தோடும் உன் கண்ணீரை
என்னிடம் மறைக்க நினைப்பதாக என்னை நானே
சமாதானப்படுத்தி கொள்ளலானேன்