அம்மஞ் சல்லிக்கு கூட பிரயோஜனம் இல்லாத திட்டம்❗ 💍
இத்திட்டத்தால் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை❗ வெறும் வாக்கு வங்கியை மட்டுமே மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட ஒரு தண்ட செலவுத் திட்டம் தான் இது❗💍
இன்னும் இதை முதல்வர் விஜய் அவர்களின் மொழியிலேயே சொல்வதானால் " ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு (விஜய்) ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார்"
மக்களின் வரிப் பணத்தை செலவழித்து அவர் கட்சிக்கு வாக்கு வங்கியை சேகரித்துக் கொண்டிருக்கிறார்❗
What Bro This is Very Wrong Bro @TVKVijayHQ@CMOTamilnadu
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17
அனுகீர்த்தனா (19 வயது )
ஜூன் 19 கோபிகா (19 வயது)
ஜூன் 20
ரோஷினி (19 வயது)
ஜூன் 20 வெற்றியானந்தம் (20)
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
இடும்பாவனம் கார்த்திக்,
மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை - நாம் தமிழர்
@idumbaikarthi
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
தமிழ்நாட்டுச் சட்டமன்றம்!
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பேரவை! தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தலைமைக்கூடம்! மாண்புமிகு பிரதிநிதிகள் மக்களுக்காக முழக்கமிடும் மாமன்றம்!
பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், பேராசான் ஜீவானந்தமும், கண்ணியமிகு காயிதே மில்லத்தும், நாவலர் நெடுஞ்செழியனும், பெருமகன் சங்கரய்யாவுமென பெரும் பெரும் தலைவர்களும், அறிஞர்களும், ஆளுமைகளும், மேதைகளும் உரையாற்றிய மகத்தான மன்றமிது.
இங்குதான் அரும்பெருந்தலைவர்கள் சமூக மாற்றத்துக்கான வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்தார்கள்; மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு விவாதித்தார்கள்; சமூக அவலங்களை நாடறிய எடுத்துரைத்தார்கள்; கடைக்கோடி மக்களின் கனவுகளை ஈடேற்றத் திட்டங்களையும், சட்டங்களையும் தீட்டினார்கள்.
எப்பேர்ப்பட்ட அவை? எப்படிப்பட்ட ஆளுமைகள் உரையாற்றிய இடம்? எப்படிப்பட்ட தலைவர்களைக் கண்ட மன்றம்? அதனை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்?
‘ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை, அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்’ என்கிறது துருக்கியப் பழமொழி. அதனை தமிழ்நாட்டில் மெய்ப்பித்துக் காட்டிய பெருமை முதல்வர் விஜய்யையே சாரும்.
சட்டமன்றத்துக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது; சட்டமன்றத்தில் இருப்பவர்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. முதலமைச்சர் பதவிக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. அமைச்சர் பெருமக்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. அவை யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கைகொட்டிச் சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்குக் கூடாரமாக சட்டமன்றத்தை மாற்றி, சந்திச் சிரிக்க வைத்திருக்கிறார் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்.
திரைப்படங்களில் நடிப்பதைவிட்டவர், நடிப்பதை மட்டும் ஏனோ விட மறுக்கிறார்? சபாநாயகரை இயக்குநராகவும், அமைச்சர்களை துணை நடிகர்களாவும் நினைத்து, சட்டசபையை நாடகசபா ஆக்கியிருக்கிறார்.
நான்கு நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மூன்று நாட்கள் மௌனவிரதம்; இல்லை! இல்லை! மௌனப் புரட்சி! தனக்கு இன்றைக்கு, ‘Scene இல்லை’ என்று நினைத்தாரோ என்னவோ, கால்கள் மரத்து போனாலும் சரி! மறந்தும், எந்திரிக்க மாட்டேன்; ‘எந்திரித்தால் பேசச் சொல்லிவிடுவார்கள்’ என மந்திரித்துவிட்டவர் போல, சபையை வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்.
சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும் எல்லா அமைச்சகங்கள் குறித்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமையும், உரிமையும் கொண்ட தலைமை நிர்வாகிதான் முதல் அமைச்சர். தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மட்டுமல்லாது, மற்ற துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் முதல்வரே பதில் சொல்லலாம். அதற்கான எல்லா உரிமையும் அவருக்குண்டு. ஆனால், ‘வாய்ல நல்லா வந்துரும்’ என்று வாயில் வருவதற்கும் எழுதிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையிலிருக்கும் முதல்வரிடம் போய், அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தர்க்க ஆற்றல், சமயோசிதத்திறன் எல்லாம் பனையூரிலிருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால்தானே ஊடகங்களைக் கண்டாலே உதறல் எடுத்து, ‘மெர்சல்’ ஆகிறார் மாண்புமிகு ‘மக்கு’ முதல்வர். இதனால், முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில்சொல்கிறேன் பேர்வழியென அரைவேக்காடு அமைச்சர்கள் கிளம்பி வாய்க்கு வந்ததை அடித்துவிட, சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடும் அளவுக்கு விபரீதமாகிப் போனது சபையின் நிலை.
கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் பதில் சொல்வார் என முந்தைய நாட்களிலேயே அறிவித்துவிட, கேள்விகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்பே வைக்கப்பட்டுவிட வசதியாய் போனது ஆளுமையே இல்லாத ஆளுங்கட்சிக்கு. பதில்களை எல்லாம் பல பக்கத் தாள்களில் எழுதிக் கொடுத்துவிட, அதனை அள்ளிக் கொண்டு வந்து, அள்ளி அளந்து வாசித்தார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்.
அதிலாவது ஏதாவது உருப்படியாக, ஆக்கப்பூர்வமாகப் பேசினாரா? இல்லை!
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒன்றரை மாதத்தில் ஓராயிரம் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள். கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வன்முறை என சமூக அமைதி சகட்டுமேனிக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொறுப்பேற்று, சிக்கலின் வேர் முதல் தீர்வுவரை எதுகுறித்தாவது உருப்படியாகப் பேசினாரா? இல்லை!
மின்வெட்டு பூதாகரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இப்போதுவரை பிரச்சினைத் தீர்ந்தபாடில்லை. உழைத்துக் களைத்த மக்கள் இரவில் ஓய்வெடுக்க முடியாது, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். வெப்பத்தால் அழும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த முடியாது நள்ளிரவில் பெற்றோர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். எதனால் மின்வெட்டு? நியாயமானக் காரணத்தைச் சொல்ல முடிந்ததா? அமைச்சர் ஒரு பதில்! அதிகாரிகள் ஒரு பதில்! இப்போது முதல்வராவது பிரச்சினையைத் தெளிவுப்படுத்தினாரா? இல்லை!
நீட் தேர்வினால் இறந்த தங்கை அனிதாவைக் குறிப்பிட்டு, தன்னுடைய உடன்பிறந்த தங்கை வித்யா மரணம் அளவுக்குப் பாதித்ததாக விக்கிரவாண்டி மாநாட்டிலேயே மனமுருகினார் இன்றைய முதல்வர் விஜய். அணுகீர்த்தனா, கோபிகா, ரோஷினி, வெற்றியானந்தம் என 10 நாட்களுக்குள் நான்கு பிஞ்சுகள் கருகியிருக்கின்றன. அவர்களுக்கு இரங்கல் கூறவாவது வாய்திறந்தாரா? அவர்கள் இறந்தது தெரிந்தாவது மனமிரங்கினாரா? இல்லை!
பெரியப்பாளையம் அருகே, கன்னிகைப்பேரில் 9 பெண்கள் அமோனியா கசிவால் உயிரிழந்திருக்கிறார்கள். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். செய்தியைக் கேட்டதும் பதறித் துடித்து நேரில் செல்லத்தான் மனமில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை அளிக்கப் பணமுமா இல்லை? சுயவிளம்பரத்துக்காக காசைக் கரியாக்கும் முதல்வருக்கு இறந்துபோன தொழிலாளர்கள் மீது கரிசனம் வந்ததா? இல்லை!
‘விவசாயியாக அடுத்தப் பிறவியில் பிறக்க வேண்டும்’ எனப் பரப்புரைக் கூட்டத்தில் அள்ளி அளந்துவிட்டுவிட்டு, இப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடனைக்கூட தள்ளுபடி செய்யாது தட்டிக் கழித்து, விவசாயிகளை வேதனையின் விளிம்பில் தள்ளுகிறார் முதல்வர் விஜய். போதாதென்று, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் விவசாயிகள் போராடுவதாகக் கொச்சைப்படுத்தவும் செய்கிறார். அவர்களுக்கான உரிய தீர்வும், நீதியும் கிடைக்கச் செய்தாரா? இல்லை!
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கிறது கர்நாடகா. அதனை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமெனத் தீர்மானம் இயற்றுகிறார் முதல்வர் விஜய். நடுவர் மன்றம் என்பது நயவஞ்சக முடிவெனத் தனக்குத் தெரியவில்லை என்றால், எழுதித் தருபவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சுயபுத்திதான் இல்லையென்றால், சொல்புத்திகூடவா இல்லை? கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போரிட போர்க்குணம்தான் இல்லை; சட்டமன்றத்தில் ஒழுங்காக ஒரு தீர்மானம் இயற்றவாவது திறன் இருந்ததா? இல்லை!
மொத்தத்தில், முதல்வரின் பேச்சில் சுரத்தும் இல்லை; சரக்கும் இல்லை. முதல்வரைக் குறைசொல்வதா? எழுதிக் கொடுத்தவரைத் திட்டித் தீர்ப்பதா என இரட்டைக்குழப்பம்!
முதல்வரின் உரையில்,
சமகால மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இல்லை. ஆனால், ‘Theme Music’ போடும் அளவுக்கு வசனங்களுக்குக் குறைவில்லாது இருந்தது.
மாநில உரிமைகள் சார்ந்த பொறுப்புணர்வுக்குரல் இல்லை; ஆனால், பொறிபறக்கும் அளவுக்கு ‘Herioc Mannerism ’ இருந்தது.
விமர்சனங்களுக்கு உரிய விளக்கம் இல்லை; ஆனால், வில்லனைத் மிரட்டும் கதாநாயகனின் ‘Body Language’ இருந்தது.
கேள்விகளுக்கு உரிய பதில்கள் இல்லை; ஆனால், ‘Catchy’ வார்த்தைகள் மட்டும் உரை முழுமைக்கும் விரவிக் கிடந்தது.
ஆக்கப்பூர்வக் கருத்துகள் இல்லை; ‘Audience Engaging’ அம்சங்கள் அளவில்லாது இருந்தது.
மொத்தத்தில், .OTTயில் ஓசியில் படம் போட்டதுபோல, பேரவையை நேரலையில் ஆக்கியிருக்கிறார் வரலாறு கண்டிராத விசித்திர முதல்வர்!
‘வெட்டிக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே’ என்று நினைத்தால், கடைசியில் குட்டிக்கதை வேறு! அதுசரி! ‘Vulgar warriors ’ Goosebumbs ஆகவும், Fire விட்டு Reels போடவும் ‘Content’ தேற்ற வேண்டாமா?
‘அப்பாவைக் காணும்’ என்று யாரையோ தேடுகிறார். அதுசரி! உங்கள் கதையில் அப்பாவைக் காணாதது போல, சபையில் உங்களிடம் ஆளுமை என்பதையே காண முடியவில்லையே, ஏன் முதல்வரே? சொந்தத் துறையைச் சார்ந்தக் கேள்விகளுக்கும் சொந்தமாகப் பதில் சொல்ல வக்கற்று நிற்கிறீர்களே? தமிழ்நாட்டுச் சட்டமன்றம் காணாத கந்தர்வக்கோலமாக அல்லவா இருக்கிறது! யாரோ எழுதிக் கொடுத்ததை ஏற்ற இறக்கமாக வாசித்து, உடல்மொழி காட்டுவதில் மட்டும்தானே வீரம் இருக்கிறது உங்களிடம்! மற்றபடி, ‘ A4 Paper’ இல்லையென்றால், முதல்வரே! நீங்களே Waste Paperதானே!
ஆளுவதென்பது குற்றமில்லை; ஆளுமையே இல்லாதிருப்பதுதான் குற்றம்!
அறியாமை குற்றமில்லை; அறிந்துகொள்ள நினையாமைதான் குற்றம்!
எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் பேசுவதுப் குற்றமில்லை; எழுதிக் கொடுத்தால் மட்டும்தான் பேசுவேன் என்பதுதான் குற்றம்!
புரிந்துகொள்ளுங்கள் முதல்வரே! கொஞ்சமாவது திருந்திச் செயல்படுங்கள். ஆட்சியைப் பிடிக்க Reels போட்டிருக்கலாம். ஆட்சியைப் பிடித்தப் பிறகும், Reels மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கு?
ஆச்சர்யக்குறி ஆட்சியாளரே! மாண்புமிகு ‘மக்கு’ முதல்வரே!
‘சுறா’ படத்தையும் ‘Super’ எனும் சொல்லுமளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், சுமாருக்குக் கீழான உங்களது படுபாதக ஆட்சியையும் ‘Blockbuster’ எனப் பாராட்டுமளவுக்கு தமிழ் மக்கள் ரசிக மனப்பான்மையிலேயே மூழ்கிக் கிடக்க மாட்டார்கள் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!
பள்ளி வகுப்பறையில் குத்துப்பாடல் பாடுதல்..
நடிகைகளில் கால்ஷீட் மேனேஜர் முதல்வரின் தனி செயலாளர்..
தூய்மை பணியாளர்கள் நியமனத்தில் தனியார் மயம்..
முதல்வரின் பிறந்தநாளுக்கு பக்கம் பக்கமாக பகட்டு விளம்பரங்கள் ஊர் முழுக்க போஸ்டர்கள்..
இதுவா மாற்றம் மக்களே??
தவெக ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புணர்வோடு எந்தப் பதிலும் கூறவில்லை முதல்வர் விஜய்.
தனக்கு வாக்குச் செலுத்திய கூட்டத்தைத் திருப்திப்படுத்த எந்தத் தோரணையில் பேச வேண்டுமோ, எந்த உடல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்.
அதனைப் பின்னணி பாடலோடும், இசையோடும் போட்டு பரப்ப Galatta, Behinwoods யூடியூப் சேனல்களும், News Tamil, Polimer காட்சி ஊடகங்களும் இருக்கின்றன. அவை அதனைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.
பொதுச்சமூகத்துக்கும், அறிவுச் சமூகத்துக்கும் விஜய் எப்போதும் பதில் சொல்வதில்லை அல்லது விஜய்க்கான பதிலை எழுதிக் கொடுப்பவர், எழுதுவதில்லை.
தனக்கு வாக்குச் செலுத்தியவர்களின் எதிர்பார்ப்பின் தேவையை அறிந்து, அவர்களின் மனநிலை அறிந்தே தோரணை, உடல்மொழி, வசனங்கள், ஏற்ற இறக்கத் தொனி, நையாண்டிப் பார்வை என ஜனரஞ்சகமாகக் கொடுத்திருக்கிறார் விஜய்.
மொத்தத்தில், சட்டசபை சர்க்கஸ் கூடாரம் போல ஆகியிருக்கிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எப்போதும் அரைவேக்காடுதான். பணம் என்ற ஒன்றை மட்டுமே மூலதனமாய் வைத்து வெளிச்சத்துக்கும், உயரத்துக்கும் வந்த பேர்வழி.
பொதுக்கூட்ட மேடையில் வீரவசனம் பேசுவது, வாய்ச் சவடால் விடுவது, வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விடுவது!
அதேபோல, சட்டமன்றத்தையும் அணுகியதால், சொந்தக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகரே காறித் துப்பியிருக்கிறார்.
துடைத்துக் கொள்ளுங்கள் அமைச்சரே! @AadhavArjuna
பெண்களின் பாதுகாப்புக்கென சிங்கப்பெண் படை அமைத்துவிட்டோம் என அங்கலாய்க்கிறார் முதல்வர் விஜய். அந்தப் படை அதிகாரங்கள் ஏதும் இல்லாத அலங்காரப்படை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
வேலுநாச்சியாரின் பெயரில் பெண்களை மட்டுமே கொண்ட 500 கண்காணிப்புக்குழுக்கள் உருவாக்கப்படும். அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சாதாரண உடையில் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருப்பார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியது தவெக.
அந்தக் குழுக்கள் என்னாச்சு முதல்வரே? இப்படி ஒரு படை அமைப்பதாகச் சொன்னதாவது நினைவிருக்கா?
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
அவரிடம் அந்த ஆக்சன் மாடுலேசன் நையாண்டி எல்லாம் கில்லியில் இருந்து தியேட்டரில் பார்த்து வந்தோம் இப்பொழுது சட்டமன்றத்தில் பார்க்கவேண்டிய
துர்ப்பாக்கியம் தமிழக மக்களுக்கு...
முதல்வரின் பதில் ரெம்போ செயற்கையா தரும் கம்மியா அ இருக்கிறது..
-சே.பாக்கியராசன்
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி