மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தவரை கொண்டு வரமுடியாத நீட் தேர்வு, ஏழை, கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூகநீதிக்கு எதிரானது. தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது.!
#Neetexam#TNAssembly#PMK
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை .!
அரசு வேலை கானல் நீராக உள்ளது.
நீர்வளத்திட்டங்களுக்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.
--------------------
சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்த அரசுக்கு வாழ்த்துக்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற பாமக 13 வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது. வேளாண் துறைக்கு வெறும் ₹16,000 கோடி தான் ஒதுக்கி உள்ளீர்கள். இது மிகவும் குறைவு.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை. ரூ56,985 கோடி மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால் முக்கியமானதாக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்கிறது. 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் அவ்வாறு கட்டினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும்.
தருமபுரிக்கு இரண்டு டிஎம்சி நீரும், சேலத்திற்கு 5 டிஎம்சி நீரும் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 35 பெரிய ஆறுகள் இருக்கின்றன. அவற்றில் தடுப்பணை கட்டினால் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும். இதன் மூலம் 100 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.
தமிழ்நாட்டில் 42,000 ஏரிகள் இருந்தது. தற்பொழுது 27,000 ஏரிகள் மட்டும்தான் உள்ளது. இவற்றை தூர்வாரினால் மட்டுமே 150 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மாநிலங்கள் முறையாக விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என்று அரசு அதிகாரிகளின் மீதும் விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இல்லை. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வெளியே வருகிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பது அரசு வேலைகள்தான்.
3000 அரசுப் பணிக்கு, 30,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 10 ஆண்டுகளாக தேர்வு எழுதுகிறார்கள். இருப்பினும் வேலை கிடைக்கவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டபின்னும் வேலை கிடைக்கவிக்லை. அரசு வேலை என்பது கானல் நீராகத்தான் உள்ளது.
அரசானை 152 படி சென்னை மாநகராட்சி தவிர மீதி உள்ள 20 மாநகராட்சிகளில் பணிகள் இல்லை. அனைத்து பணிகளும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
479 பேரூராட்சிகளில் அவுட் சோர்சிங் (குத்தகை) மூலமாகத்தான் பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. 35,000 அரசு பணிகள் காலியாகி உள்ளது. கிட்டத்தட்ட 52,000 பணிகள் இந்த அரசாணை மூலமாக போய்விட்டது.
ஒப்பந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனை ஏராளம். உழைப்பு சுரண்டபடுகிறது. சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை. வேலைவாய்ப்பில் குத்தகை முறையை ஒழித்து விட வேண்டும். இவ்வாறு ஒழித்தால்தான் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் மனித உரிமை மீறல் பாதுகாக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான பாலிசி டெசிஷனை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் மாற்றம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபொழுது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
சமூக நீதி கணக்கெடுப்பு,
கூட்டுறவு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், டாஸ்மார்க் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் மகிழ்ச்சி உறுதி செய்ய வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.
காவிரி - தருமபுரி உபரி நீர் திட்டத்தை தயவு செய்து மறந்து விடாதீர்கள். தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீரை கொண்டு வாருங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள்.!
#TNAssembly | #PMK
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை.
காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.
தொழிற்சாலை உரிமம் வழங்கும் அதிகாரம் பறிப்பு: மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம்?
தமிழ்நாட்டில் சிப்காட் வளாகங்கள் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவதற்கும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்திருக்கும் தமிழக அரசு, அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்திருக்கிறது. உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டு எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் (Tamil Nadu Panchayats Act, 1994) செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில் இந்த அதிகார மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஏதேனும் ஒரு பகுதியில் புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டுமானால், அது குறித்து அப்பகுதியின் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் தான் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத் தான் தெரியும்; அந்த பாதிப்பை அனுபவிக்கப் போகிறவர்கள் அவர்கள் தான். அதனால், தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பறித்தது நியாயமல்ல.
1949-ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் மாநில தன்னாட்சி என்ற முழக்கத்தை தான் முன்வைத்து போராடி வருகிறது. ஆனால், 1967-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்காமல் உள்ளாட்சிகளிடம் இருக்கும் அதிகாரத்தைப் பறிப்பதைத் தான் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இது தான் திமுகவின் இரட்டை வேடம் ஆகும். அந்த வேடத்தைக் கலைத்து விட்டு, 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். தொழி்ற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
#SaveGrassrootsDemocracy
@CMOTamilnadu
திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று இதோ!
திமுக அரசு எப்போது திருந்தும், சேவை பெறும் உரிமை சட்டத்தை எப்போது கொண்டு வரும்?
தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து 8 ஆண்டுகளாக அலைந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான முதியவரின் குமுறல். ஏழை மக்களின் இத்தகைய குமுறல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும்.
எந்த ஒரு சேவையையும் குறித்த காலத்திற்குள் மக்களுக்கு வழங்குவதற்கான சேவை உரிமை சட்டம் கொண்டு வருவதன் மூலம் தான் இத்தகைய மக்களுக்கு நீதி வழங்க முடியும்.!
அன்று செம்பரம்பாக்கம்!
இன்று சாத்தனூர் அணை!
முன்னறிவிப்பின்றி 1.70 லட்சம் கன அடி நீரை நள்ளிரவில் திறந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை முழ்கடித்தது திமுக அரசு!
#CycloneFengal#DMKFloodDisaster#JusticeForNorthTN
Ennore Oil Spill: Fishermen are using mugs and a funnel to remove oil from the estuary instead of high-tech equipment. Former Fisheries Minister Jayakumar blames CPCL and demands that they take responsibility and assist the fishing community.
#ReporterDiary (@PramodMadhav6)
மழைநீர் தேங்கலை னு முதல்வரும் அமைச்சர்களும் பொய் சொல்ல
ரெட்லைட் மீடியாக்களும் சுத்தமா இருக்கும் சாலைகளையே திரும்ப திரும்ப காட்ட
அப்பாவி பொதுமக்கள் தான் உயிரை பணயம் வைத்து சென்னையில் நடமாடுகின்றனர்
உண்மையை சொல்லுங்க ஸ்டாலின்
#4000_கோடி_என்னாச்சு