வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கும் ஒருமித்த கருத்து உடையவர்களுக்கு மட்டும்.மாதா, பிதா, குரு, தெய்வம். இதுவே நான். RT Not Endorsed +91 98410 23545
நாம் யாரை ஆதரித்து பேசுகிறோமோ அதனால் ஒரு பிரச்சினை வரும் போது நமக்காக அவர்கள் குரல் கொடுக்காத போதுதான் தெரியும் இது ஒரு
“ஒரு வழிப்பாதை”என்று. அரசியல் வேறு நட்பு வேறு என்ற தெளிவு முக்கியம்.
இளைஞர்களிலுமே தன் அப்பாவைவிட புத்திசாலி என நினைக்கும் முட்டாள்கள் இருக்கும்வரை இந்த திருட்டு ஜாதி வெறியன் ஆட்டம் தொடரும். இவன் ஊழலை ஒழிப்பானாம். An unfit big mouth 🤮🤮🤮🤮
எளிய விவசாய குடும்பம்னு சொல்றான் ஆனா பூர்வீக சொத்து 52 ஏக்கர்னு கணக்கு காட்டுறான் , பால் கறக்க ஆசை அதுக்காக கோவையில் 50 கோடியில் நிலம் வாங்கியிருக்கேன் ஆனா மாடு வாங்கத்தான் காசில்லை 18 லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி மேய்க்கப்போறேன்னு சொல்றான் . கட்டாந்தரையில் படுத்துக்குவேன் வீட்டு வாடகையே நண்பர்கள் தான் கட்டுறாங்கன்னு சொல்றான் பெங்களுருவில் 900 கோடிகளுக்கு சொகுசு பங்களாக்களை கட்டி விற்பனை செய்யறான் , கேட்டா பொண்டாட்டியை வைச்சி சம்பாதிச்சேன்னு சொல்றான் , அந்தம்மா ஆண்டு வருமானத்தை எடுத்து பார்த்தா 25 லட்சம் தாண்டல , இவனையும் நம்பி ஒரு படிச்ச முட்டாள் கூட்டம் , காசு வாங்கிகிட்டு பில்டப் கொடுக்க ஒரு மீடியா மாபியா
அரவக்குறிச்சி திருட்டு ராஸ்கல் அட்ராஸிட்டீஸ்
செட்டில்மென்ட் ஆவண ஆதாரத்துடன் கோவில் நில மோசடி அம்பலம்!
கோவில் நிலங்களைப் பயன்படுத்தி,அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கை(Share) இறைவனுக்கு(Deity)தவறாமல் செலுத்துவோம் என்ற அசைக்க முடியாத நிபந்தனை மற்றும் வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த நிலங்கள் வழங்கப்பட்டன.இதற்கான தெளிவான ஆதாரங்கள் செட்டில்மென்ட் ஆவணத்தில் (Settlement Record)உள்ளன.ஆனால் இன்று,சில மோசடி சட்டங்களையும் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு"பட்டா கிடைத்து விட்டது"என்று கூறுவது அப்பட்டமான பச்சை துரோகம்! நமது முன்னோர்கள் உழைப்பில் இறைவனுக்காகக் கொடுத்த 'தேவதாயம்'நிலத்தை 'சர்வீஸ் இனாம்' என்று வாய்க்கூசாமல் பொய் சொல்லி அபகரிக்கப் பார்க்கிறார்கள்.இந்தத் துரோகத்திற்கும் மோசடிக்கும் துணைபோனவர்கள் யாராக இருந்தாலும்,அறநிலையத்துறை அமைச்சர் S.ரமேஷ் ஆக இருக்கட்டும் அல்லது முதலமைச்சர் C.ஜோசப்விஜய் அவர்களாக இருக்கட்டும்,அவர்கள் செய்த இந்த மகா பாவத்திற்கு கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,மீண்டும் தர்மமே வெல்லும்! #TempleProperty #JusticeForTemples #TamilNadu
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு அரசு என்று அறிவித்த தமிழக அரசே!
முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள் கோவை வரும்பொழுது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பால் சாதாரணமாக சந்தைக்கும், கடைகளுக்கும், வேலைக்கும் சென்ற அப்பாவி பொதுமக்கள் 58 பேர் பலியாகினர். பல பேர் காயமுற்றனர்! இவ்வாறு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு அரசு என்று அறிவித்த தமிழக அரசே!
முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள் கோவை வரும்பொழுது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பால் சாதாரணமாக சந்தைக்கும், கடைகளுக்கும், வேலைக்கும் சென்ற அப்பாவி பொதுமக்கள் 58 பேர் பலியாகினர். பல பேர் காயமுற்றனர்! இவ்வாறு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே அரசு ஊழியர்களின் சாதனையோ அல்லது அரசாங்கத்தின் பெருமையோ ஆகாது. மேலும் பல தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும்.
1. சென்னை மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சிலர்.. காலையில் டிபன் அல்லது மதியம் சாப்பாடு பார்சல் வாங்க.. கடையோரம்.. பேருந்தை நிறுத்தி விடுகிறார்கள்.
சில நேரம் டீ, காஃபி வாங்கவும் பேருந்து நிறுத்தப்படுகிறது.
பேருந்தினுள் ஏகப்பட்ட பயணிகள் இருந்தும் அதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
இதனால் பள்ளி, அலுவலகம், மருத்துவமனை என பல இடங்களுக்கு உரிய நேரத்தில் பயணிகளால் போக முடியவில்லை.
மக்கள் தரும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு மக்களை காக்க வைக்கும் ஆணவம் எப்படி வருகிறது?
ஒருவேளை இந்த மாநகர பேருந்துகளை மட்டும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெயரில் அரசாங்கம் எழுதி வைத்து விட்டதா?
அப்படியே அது அவர்களின் சொந்த பேருந்தாக இருந்தாலும்... பணம் தந்துவிட்டுதான மக்கள் பயணிக்கிறார்கள்?
இனி இதுபோன்று கண்ட இடத்தில்.. தங்கள் இஷ்டத்திற்கு சென்னை மாநகர பேருந்தை நிறுத்தும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
MTC இதற்கு நடவடிக்கை எடுக்குமா?
@CMOTamilnadu@TamilanParthib1@MtcChennai
என் ஆட்சியில் யாரும், எதுக்கும் லஞ்சம் தர வேண்டாம்" என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஒருபுறம் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் அவரது அரசின் முக்கியத் துறைகளில் லஞ்ச லாவண்யம் தங்கு தடையின்றி அரங்கேறி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளின் இந்தத் துணிச்சல், ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைப்பதாக உள்ளது.கால்நடைத் துறையின் முக்கியப் பெண் புள்ளி ஒருவர், தன் உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை ஏஜெண்டுகளாகப் பயன்படுத்திக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கணவன், மனைவி இருவரும் ஒரே கோட்டத்தில் (ஒரே வட்டத்தில்) இணைந்து பணியாற்ற விரும்பினால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கேட்கிறார்கள்.பணிமாறுதல் பெற நினைக்கும் கால்நடை மருத்துவர்களிடமும் லட்சக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளையும், குடும்பச் சூழ்நிலைகளையும் கூட காசாக்கப் பார்க்கும் இந்தத் துணிச்சல் யாருடைய ஆதரவோடு நடக்கிறது?அதைவிடக் கொடுமையாக, போக்குவரத்துத் துறையில் ஒரு தனியார் ஆம்னி பேருந்துக்கு (Omni Bus) அப்ரூவல் / அனுமதி வழங்க, ஒரு பேருந்துக்கு தலா ரூ. 2.65 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.
இந்தத் தொகையைத் துறை சார்ந்த ஒரு உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியே, "அமைச்சருக்கும் சேர்த்துத்தான்" என்று கூறி வெளிப்படையாகக் கேட்பது நிர்வாகத்தின் உச்சகட்ட அவலமாகும்.மேடைகளில் தூய்மையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி என்று பேசுவது வெறும் விளம்பரத் தானா? "லஞ்சம் தர வேண்டாம்" என்று முதல்வர் சொல்வதை அவரது சொந்தத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களுமே மதிக்கவில்லை என்றால், இந்த ஆட்சியில் யாருக்குத் தான் அதிகாரம் இருக்கிறது?முதல்வர் விஜய் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள கால்நடைத் துறைப் பெண் புள்ளி மற்றும் போக்குவரத்துத் துறையின் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...@SavukkuOfficial@CMOTamilnadu@CTR_Nirmalkumar@imrajmohan https://t.co/KC9rIg7KN3
கோவில் நிலம் கோவிலுக்கு மட்டுமே சொந்தம்..
இது பல தீர்ப்புகள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
இப்போது இந்த கூறு கெட்ட அரசும் இந்த விவகாரத்தில் நீதி மன்றத்தில் உதை வாங்க போவதும் உண்மை.
உங்கள் கருத்து படி பார்ப்போம்.
"இனாம் நிலங்கள் அனைத்தும் ரயத்வாரி பட்டா வழங்கப்பட்டதால் தனிநபர் சொத்தாகிவிட்டன" என்ற உங்களின் புரிதல் ஒரு தவறான புரிதல்.
1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் (Act 30/1963), நிலத்தை சாகுபடி செய்யும் உரிமை அல்லது அனுபவ உரிமையை (Occupancy Rights) மட்டுமே தனிநபருக்கு வழங்கியது.
ஆனால், அந்த நிலத்தின் மேல்நிலை உரிமம் (Melvaram/Dominium) கோவிலுக்கே சொந்தமானது.
பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள், இனாம் நிலங்கள் கோவிலின் அறக்கட்டளைச் சொத்துகளே (Endowment properties) என்று உறுதிப்படுத்தியுள்ளன.
நீங்கள் குறிப்பிடும் "பூஜ்ஜிய மதிப்பு" (Zero Guideline Value) என்பது, அந்த நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டது.
இது விவசாயிகளின் உரிமையை பறிப்பதற்காக அல்ல; மாறாக, பொது அறக்கட்டளை சொத்துகள் (Public Trust Property) களவு போவதைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை அகற்றுவது, கோவில் நிலங்களை விற்பனை செய்வதற்கும், பெரிய நிறுவனங்கள் அவற்றை அபகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
ரயத்வாரி பட்டா என்பது விற்பனை உரிமை அல்ல
சட்டப்படி ரயத்வாரி பட்டா பெற்றவர்கள், அந்த நிலத்தில் பயிர் செய்ய மட்டுமே உரிமை பெற்றவர்கள்.
அவர்கள் அந்த நிலத்தின் முழு உரிமையாளர்கள் (Absolute Owners) அல்ல. எனவே, இந்த நிலங்களை விற்பனை செய்வதற்கோ அல்லது பத்திரப்பதிவு செய்வதற்கோ அனுமதிப்பது, கோவில் சொத்தை ஒரு தனிநபர் சொத்தாக மாற்றும் சட்டவிரோதச் செயலாகவே அமையும்.
நீதிமன்றங்கள் பலமுறை, "கோவில் நிலங்களை பட்டா பெற்றிருந்தாலும், அவற்றை விற்பனை செய்ய உரிமையாளர்களுக்கு அதிகாரம் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளன.
ஆக்கிரமிப்பு மற்றும் வாழ்வாதாரம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் கடமைதான், ஆனால் அதை கோவில் சொத்துகளைப் பறிப்பதன் மூலம் செய்யக்கூடாது.
குத்தகைதாரர்களாக இருப்பவர்கள், முறையான குத்தகைத் தொகையை கோவிலுக்குச் செலுத்தி தங்கள் விவசாயத்தைத் தொடரலாம்.
ஆனால், சொத்துரிமையையே மாற்ற முனைவது என்பது, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த கோவில் வழிபாட்டுத் தேவைகளுக்கான நிதி ஆதாரத்தையே அழிப்பதாகும்.
அரசுக்கு இருக்கும் பொறுப்பு
அரசின் முதன்மையான கடமை அறநிலையத்துறை சட்டத்தின்படி கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதே.
ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் வசதிக்காக அல்லது அரசியல் காரணங்களுக்காக, சட்டப்பூர்வமான வழிமுறைகளைத் தவிர்த்து, கோவில் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பது "சொத்து கையாடல்" (Asset Stripping) என்றே கருதப்படும். இது கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையாகவே அமையும்.
முடிவாக
இனாம் நிலம் என்ற பெயரில் கோவிலின் சொத்துகளைத் தனிநபர் சொத்துகளாக மாற்றி, பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.
ரயத்வாரி பட்டா என்பது நிலத்தைப் பயிர் செய்யும் உரிமைதானே தவிர, விற்பனை செய்யும் உரிமை அல்ல. அரசின் இந்த நடவடிக்கை கோவில் சொத்துகளின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய அறநிலையத்துறையின் கடமைக்கு எதிரானது.
எனவே, பட்டா பெற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி அல்லது மானியங்கள் வழங்கலாமே தவிர, கோவில் சொத்துகளின் உரிமையையே மாற்றக் கூடாது.
ஒன்றே ஒன்று தான்.
நீங்கள் அரசியல் செய்ய நம்முடைய கோவில் நிலங்கள் தான் கிடைத்ததா?
மன்னர்கள் காலத்தில் கோவில்களுக்கும், அங்கு பணிபுரிபவர்களின் ஊதியத்திற்குப் பதிலாகவும் 'இனாம்' (மானியம்) நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்கள் கோவிலுக்கே சொந்தமானவை. பணியாளர்களுக்கு இதில் தற்காலிக 'அனுபவ உரிமை' மட்டுமே இருந்தது; 'சொந்த உரிமை' கிடையாது.பணி நிறைவடைந்ததும் அல்லது பணி செய்யாத பட்சத்தில், அந்த நிலங்களை மீண்டும் கோவிலிடமே ஒப்படைக்க வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும், அதற்குப் பிறகும் கொண்டுவரப்பட்ட சில நிலவரித் திட்டங்களைச் சாதகமாக்கிக்கொண்டு, பலர் இந்த நிலங்களைத் தங்களின் சொந்தப் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்துகொண்டனர்.
பொதுப் பயன்பாட்டிற்காகவும், ஆன்மீகக் கடமைகளுக்காகவும் முன்னோர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களைத் தனிநபர்கள் தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது அறநெறிகளுக்கு எதிரானது.
ஒருமுறை கோவில் சொத்து என்றால், எப்போதும் அது கோவில் சொத்துதான்.
எத்தனை ஆண்டுகள் தனிநபர்கள் கையில் இருந்தாலும், ஆவணங்களின்படி அது கோவில் நிலம் என்று நிரூபிக்கப்பட்டால், அதை அரசு மீட்டெடுக்க வேண்டும்.
தவறுதலாகவோ அல்லது முறைகேடாகவோ தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்ட இனாம் நிலங்களை, "நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வருகிறோம்" என்று கூறித் தங்களுக்குரியதாக நியாயப்படுத்துவது சட்டத்தின் முன் செல்லுபடியாகாது.
@tskrishnan
கருர் கோவில் சொத்துக்கள் விவகாரத்தில், @annamalai_k அவர்கள், @jothims அவர்கள் உள்ளிட்டோர், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். அது கோவில் நிலங்கள் அல்ல என்றும், அதை பராமரித்த மனிதர்களுக்கு மன்னர்களால் வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள். அவை ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
அது தனியாருக்கு வழங்கப்பட்ட இலவச நிலங்கள் என்றால் இன்று வரை ஆவணங்களில் அது ஏன் கோவில் பெயரால் குறிப்பிடப்பட்டு வருகிறது என்கிற முக்கிய கேள்வி எழுகிறது. இதை சுயஅறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
எப்போதும் ஒரு கோவில் கட்டப்படுகிறது என்றால் மன்னர்கள் அதுசார்நத பராமரிப்பிற்காக சில ஏற்பாடுகளை செய்வார்கள். யாரெல்லாம் அந்த கோவிலை பராமரிக்கிறார்களோ அவர்கள் குடும்ப ஜீவனத்திற்கென்று ஒரு சில நிலங்கள் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அந்த பராமரிப்பை மேற்கொள்ளும் வரை அந்த நிலத்தை உபயோகித்துக்கொள்ளலாம். அவர்கள் அந்த கோவில் பராமரிப்பு பணிகளை கைவிட்டுவிட்டால் அந்த நிலத்தை உரிமைகொள்ள தகுதி இல்லை. அடுத்து அந்த பராமரிப்பு பணிகளை யார் மேற்கொள்கிறார்களோ, அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிலம் ஒப்படைக்கப்படும். இதுவே அப்போதைய நடைமுறை!
உதாரணமாக, சில நாட்களுக்கு முன் ஆனைமங்கலம் செப்பேடுகளை பாரத பிரதமர் @narendramodi அவர்கள் நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அந்த ஆனைமங்கலம் சூடாமணியில் இருந்த அந்த ஆலயத்தை பராமரிப்பதற்காக ராஜராஜசோழனால் தரப்பட்டது. அதாவது அந்த ஊரின் வருமானம், சூடாமணி ஆலயத்தை பராமரிக்க பயன்படுத்தப்படவேண்டும். ஆனைமங்கலம் ஊரை அந்த கோவிலுக்காக எழுதிவைக்கிறான் சோழன்.
இப்படித்தான், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, கோவில் பராமரிப்பு, பூஜை, விளக்கு போன்ற பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக, கோவிலை பராமரிக்கும் குடும்பங்களுக்கு தரப்பட்டது. கோவிலை பராமரிக்கும் வரைதான் அந்த குடும்பங்கள் அந்த நிலத்தை பயன்படுத்தவேண்டும். பின்பு அந்த நிலம் கோவிலுக்குத்தான் சொந்தம்.
1963 இனாம் abolition act கொண்டுவரப்பட்டதும் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டதும் வெறும் கோவில் சொத்துக்களுக்காக அல்ல. அது ஜமீன்களால் வழங்கப்பட்ட இனாம்களுக்காகவே முக்கியமாக கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மேல்வாரம் நிலங்கள் எத்தனை?! குடிவாரம் எத்தனை?! ரயத்துவாரி கோவில் பட்டா எத்தனை? ஆக்கிரமிப்பு நிலங்கள் எத்தனை? என்று முழுமையான எந்த விவரமும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆளுக்கொரு விதத்தில் அவரவர் கருத்தை பேசுகிறார்கள். ஆனால் பறிபோவது என்னவோ இந்து கோவில்களின் சொத்துக்கள்!
கருர் விவகாரத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்ட கோவில் நிலங்களும் அடங்கியுள்ளன. இந்த நிலங்களில் எவை எவை எந்த வகைப்பாட்டில் உள்ளன என்பது கூட அரசால் சர்வே செய்யப்படவில்லை. எதோ இவையெல்லாம் அரசு சொத்துக்களைப் போல, அரசு முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு நாளில்!
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ப் சொத்துக்களை இப்படி கையாளுவதை கனவில் கூட நினைக்கமுடியுமா இவர்களால்?!
ஆகவே, இப்போதும் மீண்டும் சொல்கிறேன். கோவில் நிலங்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல @RameshOffcl!, தமிழக அரசு @TVKVijayHQ இந்த முடிவை திரும்ப பெறவேண்டும்.
@blsanthosh@NainarBJP
ஒரு வீடு கட்ட துவங்கும் போது அதன் பேஸ்மென்ட் உயரத்தை சாலையில் இருந்து கணக்கிட்டு கட்டுவார்கள். கார் நிறுத்தும் பகுதியை சாலையில் இருந்து சுமார் 1’6” உயரத்திலும் அதில் இருந்து 1’ உயரத்தில் வீட்டின் தரையையும் கட்டுவார்கள். ஒரு வேளை சாலை அமைக்காத பகுதியாக இருந்தால் இன்னும் சற்று உயரத்தை அதிகரிப்பார்கள்.
ஆனால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சாலை உயரங்களை தமிழக அரசுகள் முட்டாள்தனமாக உயர்த்திக் கொண்டே வருவதால் அதற்கு பயந்து வீடுகளின் பேஸ்மென்ட் உயரத்தை 6’ வரை வைத்து கட்டுகிறார்கள். இதனால் வீடுகளுக்கு உள்ளே செல்லும் படி மற்றும் ramp ஆகியவை சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இது போல சாலையில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் வீடுகளும் சாலையை ஆக்கிரமித்து ramp அமைப்பதால் சாலையின் அகலம் குறைகிறது. நடந்து செல்பவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
சாலை உயரங்கள் மீதான் மக்களின் பயம் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். இந்த பயத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. பழைய சாலை உயரத்தை விட புதிய சாலைகள் உயரத்தை அதிகரித்தால் அந்த சாலை ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தரவேண்டும். சாலை உயரங்களால் குழிக்குள் தள்ளப்பட்ட வீடுகளை உயர்த்த முழு செலவையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். இந்த செலவுகள் அனைத்தையும் அந்த ஒப்பந்ததாரர்களிடம் அரசாங்கம் வசூலித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் https://t.co/ybX0o0gohd பகிர்ந்து கொள்ளுங்கள்.
சாலை உயர பிரச்சனைக்காக வேலை செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
மக்களின் பயத்தை போக்குவீர்களா?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@tnmaws@MawsTamilNadu@chennai_Highway
@annamalai உங்களுடன் நான் முற்றிலும் உடன்படவில்லை. பொது கோவில் நிலத்தை தனியார் நபருக்கு மாற்றுவது சமூக நீதி அல்ல, அது ஒரு மோசடி செயல். ஏன் என்று சொல்கிறேன்.
அரசியலுக்குள் போவதற்கு முன், ஒரு அடிப்படைக் குறை இருக்கிறது. இனாம் நிலங்கள் என்பது வரி விதிக்கப்படாத பொது கோவில் நிலங்கள். பொது நிலத்தை தனியார் ஒருவருக்கு மாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியுமா, அதுவும் சமூக நீதி என்ற பெயரில்?
இதைவிட ஆழமான கேள்வி, இது உண்மையில் யாருக்குப் பயன்பட்டது என்பதுதான். "உழுதவருக்கே நிலம்" என்று சொல்லும்போது, அது உண்மையில் அவர்களை சென்றடைந்ததா? இந்த நிலங்களில் நிஜமாக உழைத்தவர்கள், வியர்வை சிந்தியவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சீர்திருத்தத்தின் பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? 1% கூட கிடைக்கவில்லை. நிலத்தை இழந்த கோவிலுக்கும் இல்லை, உழைத்த தொழிலாளிக்கும் இல்லை. நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பலன் பெற்றார்கள். கோவிலும் பயனடையவில்லை, உண்மையான உழைப்பாளியும் பயனடையவில்லை என்றால், இது எப்படி சமூக நீதி ஆகும்?
இனி, இது நிர்வாக ரீதியாக எப்படி நடந்தது என்று பாருங்கள். 09.07.2026 அன்று ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். அதே நாளில், சட்டத் துறை இணை ஆணையர் உடனடியாக ஒரு கடிதம் எழுதுகிறார். அதே நாளில் ஆணையர், ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவு கூட இல்லாமல், ஒரு பரிந்துரையை மண்டல இணை ஆணையருக்கு அனுப்புகிறார். மூன்று வெவ்வேறு அலுவலகங்கள், மூன்று வெவ்வேறு நடவடிக்கைகள், எல்லாம் ஒரே நாளில். இது வழக்கமான நிர்வாகம் அல்ல, இது திட்டமிட்ட நாடகம். மேலும், இது நடந்தது முதலமைச்சரின் வருகைக்கு சரியாக ஒரு நாள் முன்பு, அதாவது 10.07.2026 அன்று முதலமைச்சர் வருகை தரவிருந்த நிலையில். இந்த நேரம் தற்செயலானது இல்லை, இதற்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் இருப்பதைக் காட்டுகிறது.
இது ஒரு சிறிய நிர்வாகக் குறைபாடு அல்ல. நடந்த ஒவ்வொரு இனாம் உத்தரவையும், இதில் ஆணையரின் பங்கையும் நீதித்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பொது நிலத்தை தனியாருக்கு மாற்றுவதை சமூக நீதி என்று அலங்கரிப்பது அதை நீதியாக்கிவிடாது. அது மோசடிக்கு அணிவிக்கப்பட்ட ஒரு சிறந்த உடை மட்டுமே.
*சர்ச்சுகள் கிறிஸ்தவர்களிடம் இருந்து பெறும் தசம பாகம் அரசுக்கு வருவது இல்லை.*
அப்படியானால்,
*இந்துக்கள் வரிப்பணத்தில் கிறிஸ்தவர்களுக்கு நல வாரியம் அமைத்து பணம் தருவது தெளிவாகிறது...*
*ஏமாளி இந்துக்கள் இருக்கும் வரை*
*இது தொடரும்...*
😡😡😡😡
தேசிய SC கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில்தான் வேலை தரப்படுகிறது!
41 உயிரிழந்தவர்களில் 15 பேர் SC பிரிவை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பெரும்பாலும் MBC வகுப்பை சேர்ந்த மிகவும் ஏழ்மையான மக்கள்.
NCSC எனும் National Commission for Schedule Caste கரூர் துயரத்திற்கு பிறகு வந்து பாதிக்கப்பட்ட 15 SC குடும்பங்களில் 12 பேரை சந்தித்தனர்.
தேசிய SC கமிஷன் தலைவர் திரு கிஷோர் மக்வானா அவர்களே வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விட்டு - பெரும்பாலும் மிகவும் ஏழ்மையானவர்கள் , பல குடும்பங்களில் அவர்களின் ஒரே சம்பாதிக்கும் நபரை அந்த குடும்பம் இழந்து விட்டது.மோசமான திட்டமிடல் மற்றும் கூட்டத்தை அரசு சரியாக நிர்வாகிக்காத அரசாங்கம் உயிரிழப்புக்கு காரணம் - என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் நிர்வாக குறைபாட்டால் உயிரிழந்ததற்கு அரசு பொறுப்பேற்று வீட்டிற்கு ஒரு அரசு வேலை தர வேண்டும் என்று தேசிய SC கமிஷன் பரிந்துரை செய்தது!
அதன் அடிப்படையிலேயே தற்போது தமிழக அரசு உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருகிறது. மேலும் அவரவர் கல்வி உள்ளிட்ட தகுதி அடிப்படையில் தான் தரப்படுகிறது. தகுதியற்ற யாருக்கும் தரப்படவில்லை, தகுதியுள்ள இன்னொருவரின் வேலை வாய்ப்பு பறிக்கப்படவும் இல்லை.
தவெக அரசு இல்லை என்றாலும் தேசிய SC கமிஷன் பரிந்துரைப்படி எந்த நியாயமான அரசாக இருந்தாலும் இவர்களுக்கு அரசு வேலை தந்திருக்கும்.
அரசாங்கத்தில் நிரப்பப்படாத பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும் போது , குறிப்பாக SC இட ஒதுக்கீடு வேலை அதிகமாகவே முந்தைய அரசால் நிரப்ப படாமல் இருக்கும் போது இந்த 30, 40 வேலை வாய்ப்பை ஊதி பெரிதாக்கி, முதல்வர் தனது ரசிகர்களுக்கு அநியாயமாக கொடுத்து விட்டதாக திமுக விடும் சவுண்டை யாரும் Echo செய்ய வேண்டாம்.
இந்த விஷயத்தில் எந்த அநியாயமும் நடக்கவில்லை. மீள இயலா துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு சட்டபூர்வமான நியாயபூர்வமாக நமது தலைமுறையால் முடிந்ததை செய்கிறோம். முடிந்த அளவு அவர்களின் மன வலியை பகிர்ந்து கொள்வோம். தவறாகவும் கொச்சையாகவும் பேச வேண்டாம்.