என் உடன்பிறவா அண்ணனாய் இருந்து
என்னை நேர்வழியில் அதாவது தளபதி வழியில் அழைத்து செல்லும் என் அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!
என்றும் உங்கள் அன்பின் வழியில்!உங்களின் தம்பியாய்!!
#2026_Madurai_is_Ours#2026_Cm_Thalapathy@VijayAnban_offl
😍🥰❤️
#Love u anna❤️
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.
அவரது Road Show பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாமண்டூர்
புக்கத்துறை சந்திப்பு
படாளம் சந்திப்பு
ஜானகிபுரம் சந்திப்பு
மேலவலம்பேட்டை சந்திப்பு,
கருங்குழி சந்திப்பு,
கருங்குழி பேரூராட்சி அலுவலகம்,
மதுராந்தகம் North By Pass Entrance,
மதுராந்தகம் South By Pass,
அய்யனார் கோவில் சந்திப்பு,
மோச்சேரி,
தண்டலம்,
பெரும்பாக்கம்,
கிளியாநகர்,
செம்பூண்டி,
கீழாமூர்,
பசுவங்கரணை,
ராமாபுரம்,
மோகல்வாடி,
எலப்பாக்கம்,
பொற்பணங்கரணை,
அணைக்குன்றம்,
கீழ்அத்திவாக்கம்,
மின்னல் சித்தாமூர்,
பெரும்பேர்கண்டிகை,
கடமலைப்புத்தூர்,
தென்பாக்கம் சந்திப்பு,
சோத்துப்பாக்கம்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு,
சரவம்பாக்கம்,
பெருவெளி,
முதுகரை,
வில்லவராயநல்லூர்,
மாம்பாக்கம்,
மதுராந்தகம்
காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
மாமதுரை மண்ணை ஆளும் அன்னை மீனாட்சி அம்மன் வேடமிட்ட மழலைச் செல்வங்களோடு நேரில் நின்று, நமது மதுரை வடக்கு தொகுதிக்குள் வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களை ஆரவாரத்தோடு வரவேற்ற பொழுது!
தாய்மார்கள், இளைஞர்கள் என ஆர்ப்பரித்துத் திரண்ட பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் பேராதரவில், மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து வந்தார் தலைவர் தளபதி.
ஒட்டுமொத்த மதுரை மாநகரமே குலுங்கும் வண்ணம் மக்கள் அனைவரும் அளப்பரிய மகிழ்ச்சியோடு கொண்டாடித் தீர்த்த வரலாற்றுத் தருணம் இது!
@CMOTamilnadu | @VijayAnbanMLA@TVKITWingMaduri | @BussyAnand
#MLAMaduraiNorth #TVKVijay
#மதுரை #தமிழகவெற்றிக்கழகம்
இன்று (29.09.2026) தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே. ஜி. அருண்ராஜ் அவர்கள் மற்றும் அண்ணன் திரு. விஜயபாஸ்கர் ஆகியோருடன் இணைந்து தீவிர களப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது!
@CMOTamilnadu | @BussyAnand@KASengottaiyan | @arunraajkg@Vijayabaskarofl | @TVKITWingMaduri
#DharapuramByElection #TVKCampaign
#TVKVictory #MaduraiNorthMLA
திமுகவின் பணத்தை வைத்து தவெகவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகள்!
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையை தடுக்க முயன்ற "அதிமுக-திமுக" கூட்டு சதிக்கு கடும் கண்டனங்கள்.
நேற்றைய தினம் (செப்டம்பர் 26) மாலை தாராபுரம் ஒன்றியம் பொட்டிக்காம்பாளையம், பொட்டிநாயக்கனூர் பகுதியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி திருமதி சத்தியபாமா பொன்னுசாமி @Sathyabamatvk அவர்களுடன், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு N. ஆனந்த் @BussyAnand அவர்களின் தலைமையில், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் அண்ணன் திரு செங்கோட்டையன் @KASengottaiyan அவர்கள் முன்னிலையில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றிருந்தோம்.
அப்பகுதி மக்களும் கையில் ஆரத்தி தட்டு மற்றும் பூமாலைகளுடன் எங்களை வரவேற்க தயாராக இருந்தனர்.
அப்பொழுது அதிமுக கட்சி துண்டுடன் சுமார் பத்து நபர்கள் இடையிட்டு, அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க கூடாது என்று கோஷமிட்டதுடன், எங்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், கழக நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்று ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சனையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது... போலீஸ் விசாரணையில் இதற்கு பின்னால், திமுகவின் சில பக்கத்து மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
"திமுக-அதிமுகவின் கள்ளக் கூட்டணி" தற்பொழுது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளது.
மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை.
தேர்தல் களத்தில் கருத்துகளால் மோதாமல், தோல்வி பயத்தால் தங்களது குண்டர் படையை களம் இறக்கி மக்களை அச்சுறுத்த முயல்கிறார்கள்.
இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் கழகத் தலைவரும் சரி, கழகத் தொண்டர்களும் சரி, தமிழக மக்களும் சரி ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.
அச்சுறுத்தலால் ஜனநாயகக் குரலை ஒடுக்க முடியாது.
இந்த ஜனநாயக விரோத-வன்முறை "அதிமுக-திமுக" கும்பலுக்கு தாராபுரம் மக்கள், தங்கள் வாக்கின் மூலம் உரிய பதிலை வழங்குவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl
#திமுக_அதிமுக_கூட்டுச்சதி | #திமுக_அதிமுக_எதிர்ப்பு | #தாராபுரம்
StartupTN மற்றும் Transgender Resource Center இணைந்து மதுரை அழகர்கோவில் சாலை Hotel Tamilnadu Pandian-ல் நடத்திய "Transpreneur Summit 2026 & Business Expo" நிகழ்வில் இன்று (25.09.2026) கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்த பொழுது.
சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாகத் திருநங்கை சொந்தங்கள் சுயமாக முன்னேறி வெற்றிகரமான தொழில்
முனைவோராக உருவெடுக்க நமது மக்களின் முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் ஆட்சியில் முழு ஆதரவும் என்றும் உண்டு!
@CMOTamilnadu | @VijayAnbanMLA@TVKITWingMaduri | @BussyAnand
#TranspreneurSummit2026 #StartupTN #TransgenderResourceCenter #InclusionAndEquality #MaduraiNorth
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களுடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொழுது.
வாக்குச்சாவடி அளவிலான பணிகள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களையும் தாய்மார்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் வியூகங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
@CMOTamilnadu | @VijayAnbanMLA@TVKITWingMaduri | @BussyAnand
#DharapuramByPoll #ElectionCampaign #TVKFieldWork #MLAMaduraiNorth
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகப் பெருமானின் அருளால், நம் வாழ்வில் தடைகள் நீங்கி, புதிய நம்பிக்கைகளும் நல்வாய்ப்புகளும் மலரட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருகி, மக்கள் அனைவரின் எண்ணங்களும் நிறைவேறட்டும்.
தொடங்கும் ஒவ்வொரு நற்செயலும் வெற்றியுடன் நிறைவேறி, அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் நிலைத்திருக்கட்டும்!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
-
On the auspicious occasion of Vinayagar Chaturthi, I extend my warmest greetings and best wishes to everyone.
May the divine blessings of Lord Ganesha remove all obstacles from our lives and bring new hope, opportunities and prosperity. May every family be blessed with happiness, peace and well-being, and may everyone’s aspirations be fulfilled.
May every good endeavour we undertake succeed and lead us towards a brighter and more prosperous future.
Happy Vinayagar Chaturthi!
@CMOTamilnadu | @TVKVijayHQ
கடல் கடந்து வாழும் நமது தமிழ் சொந்தங்களின் நலன் காக்க, "தமிழ் தொழிலாளர் பாதுகாப்பு வளையம்" (TWPN) அமைப்பை மலேசியாவின் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் @ramasamydcm முன்னிலையில் இன்று அறிமுகம் செய்கிறேன்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் வட்டார நாடுகளில் பாதிக்கப்படும் தமிழ் தொழிலாளர்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டும் அரணாக இந்த அமைப்பு செயல்படும்.
🗓️ நாள்: இன்று (13.09.2026)
🕔 நேரம்: மாலை 5:00 மணி
📍 இடம்: தாயகம்
#Vaiko #mdmk #TWPN #TamilWorkers #Thayagam #tamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.
தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா @mkstalin ?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா @mkstalin?
குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!”
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார் அவர்கள்.
சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!