தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டி இரண்டு நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வரும் நிலையில்,
இன்று நேரில் அவர்களை பார்க்க சென்ற திமுக எம்.பி கனிமொழி அவர்களை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!
2 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறோம்,
உடனடியாக வராமல் இன்று மட்டும் வந்தது ஏன் என ஆவேசம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய விடியா திமுக ஆட்சியின் ஆட்சியாளர்களை நோக்கி மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய,பெண்கள் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் இப்படிபட்ட கொடூர ஆட்சி தொடர வேண்டுமா?
#Can_SHE_LiveInTN
#DMKFailsTN
இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார்கள்.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமே இல்லை என்பதையே அதிகரிக்கும் குற்றச் செயல்கள் சொல்லும் செய்தி.
சட்டம் ஒழுங்கைக் காப்பது என்பது ஒரு அரசின் தலையாயக் கடமை. அந்த கடமையை மறந்த ஸ்டாலின் அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நேரம் வந்துவிட்டது.
மக்களே- சிந்திப்பீர்! உங்களைக் காக்கும் @AIADMKOfficial அரசை நிறுவிடுவீர்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
Welcoming Hon’ble Annan @EPSTamilnadu as our Chief Minister in 2026!
Hon’ble Prime Minister @narendramodi arriving in Madurai for the NDA campaign meeting.
Eagerly awaiting the grand welcome along with @DrVpb#EPSfor2026
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
#EPSfor2026
வேஷங்கள் கலையும் நேரம் வந்துவிட்டது...
இனி எந்த வேடம் போட்டும் எந்த பயனும் இல்லை பொம்மை முதல்வரே!
உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை, உங்கள் வீழ்ச்சிக்கான தொடக்கவுரையை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள்.
உங்கள் அலங்கார அரசியலின் முகத்திரை கிழியும் நேரம் இது!
@mkstalin
விடைபெறத் தயாராகுங்கள்!
#ByeByeStalin
#Reject_DMK
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia@MEAIndia@AIADMKOfficial
எடப்பாடியார் ஆட்சி செய்யட்டும்
"மண்ணிலிருந்து எழுந்து மக்களுக்காக நின்ற ஒரு தலைவர்."
“அனுபவம், நிலைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு - அதுதான் இபிஎஸ்.”
“ஒழுக்கத்துடன் கூடிய வளர்ச்சி.”
“விவசாயிகளுக்கான குரல், தமிழ்நாட்டிற்கான வலிமை.”
#AIADMKForTN#EPSFor2026#TamilNadu
அதிமுகவை பிடித்திருந்த சனி இன்றோடு போய்விட்டது. அதிமுக தொண்டர்களுக்கு இன்று தான் தீபாவளி!!
- மாநிலங்களவை உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள்
கூச்சமே இல்லையா @OfficeOfOPS...??!!
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை,
ஆளாக்கி,
அமைச்சராக்கி,
ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.
அம்மா வளர்த்த இயக்கத்திற்கு
A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொடுத்து
அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.
ஆனால் நீங்களோ,
உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்!
எம்ஜிஆர் மாளிகையில்
கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல்,
வளர்த்த இயக்கத்தின்
வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக,
இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட
கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு
நீங்க நடத்திய நாடகமெல்லாம்
அம்பலப் பட்டு நின்றதும்,
வேறு வழியே என்றதும்,
ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?
இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
அம்மா எல்லாம் சும்மா தானே?!
"உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
(பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)
இன்றைய தினம், பல்வேறு அரசியல் செய்திகளுக்கு இடையே புதைக்க முயற்சிக்கப்படும் ஒரு கொடூரமான செய்தி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்ற SIR-ஆல் 2 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது.
தமிழ்நாட்டில், இந்த விடியா திமுக ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முழுமுதற் பிரச்சனையை மறைக்க எத்தனையோ சித்துவேலைகளை திமுக செய்து வருகிறது...
ஆனால், பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு, தங்களின் பாதுகாப்பு தொலைந்திருப்பது தெரியாதா? அல்லது இதற்கு காரணம் இங்கு ஆளக்கூடிய விடியா திமுக அரசும், அதன் கையாலாகாத பொம்மை முதல்வரும் தான் என்று தெரியாதா என்ன?
திமுக மறைக்க முயலலாம்...
மக்கள் மறக்க மாட்டார்கள்...!!
#DMKFailsTN
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை, இன்று (27.02.2026), சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நேரில் சந்தித்து, தாய்க் கழகமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் .