The Young Democrats West Bengal State Youth Assembly has been officially launched!
A new chapter of youth leadership begins as young voices unite with a shared commitment to democracy, justice, equality, and people's politics.
#YoungDemocrats#WestBengal#StateYouthAssembly
சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய அரசுக்கு SDPI கட்சி கடும் கண்டனம்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
��ீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 29 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்தான் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக 89 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும்.
சமீபத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் பெருமளவு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வஞ்சரிக்கும் செயலாகும்.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களின் அடிப்படையில் தான் இந்த விலை உயர்வு என்று அரசு தரப்பில் வழக்கம்போல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறையும் காலங்களில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் விலையைக் குறைக்க மறுக்கும் அரசு, விலை உயரும் போது மட்டும் அந்���ச் சுமையை உடனடியாக மக்கள் மீது திணிக்கிறது.
மக்களுக்கு எவ்வித நன்மையும் தராத இந்த 'விலை நிர்ணயக் கொள்��ை' அப்பட்டமான மக்கள் விரோதப் போக்காகும். எனவே, ஏழை மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மண்டலம் சார்பில் நிர்வாகிகளுக்கான "அரசியல் பயிலரங்கம்" நிகழ்ச்சி இன்று பெரம்பூரில் உள்ள MA மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன்
The latest Rs 29 hike in LPG prices comes after increases totaling nearly Rs 89 since March. A family using one cylinder a month will now spend over Rs 1,000 extra annually. At a time of rising living costs, this is an unfair burden on ordinary people. SDPI demands an immediate rollback of the LPG price hike and measures to keep cooking gas affordable for all. #LPGprice #pricehike #SDPI
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு SDPI கட்சி வரவேற்பு! - நிலைப்பாட்டில் சமரசமின்றி உறுதியாக நிற்க வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
��ிருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் எந்தவொரு பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும் எனவும், மதவாத சக்திகள் உள்ளே வந்து அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில��, இந்த நிலைப்பாட்டில் தமிழக அரசு கடைசி வரை எவ்வித சமரசமுமின்றி உறுதியோடு நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் அங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபம் ஆகியவற்றில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாறாக, தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற இல்லாத ஒரு புதிய வழக்கத்தைத் திணித்து, அங்கு நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கச் சில மதவாத சக்திகள் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று வருகின்றன. இதுநாள் வரையில் அந்த மதவாத குரல்களைப் புறந்தள்ளி, வழக்கமான நடைமுறையையே முந்தைய அரசுகள் பாதுகாத்து வந்துள்ளன.
குறிப்பாக, கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை முன்வைத்து தர்கா அருகில் தீபம் ஏற்ற எத்தனித்த சக்திகளின் முயற்சியை முறியடித்து, சமூக நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் களத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய திமுக அரசு. நீதிமன்ற உத்தரவாகவே இருந்தாலும், அப்போதைய திமுக அரசின் உறுதியும், பின்விளைவுகள் எத��வாக இருந்தாலும் எதிர்கொள்வோம் (We Will Face the Consequences) என்று கூறிய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்களின் துணிச்சலான கள நடவடிக்கையுமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகளின் சதித்திட்டம் எடுபடாமல் முற்றுப்புள்ளி வைத்ததற்கு காரணமாக அமைந்தது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே, நீதிமன்ற உத்தரவுகள் என்ற பெயரில் வரும் நெருக்குதல்களைக் காரணம் காட்டி, பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து அரசு பின்வாங்கிவிடக் கூடாது என்பதை தற்போதைய தமிழக அரசுக்கு முதன்மையான கோரிக்கையாக ம���ன்வைக்கின்றோம்.
சமீபத்தில் குர்பானி விவகாரத்தில், "நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றிவிட்டோம்" என நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளித்து கைகழுவியது போன்றதொரு ஏமாற்றகரமான நிகழ்வு, இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மீண்டும் அரங்கேறிவிடக் கூடாது. நீதிமன்ற உத்தரவாகவே இருந்தாலும், பழைய நடைமுறையைப் பாதுகாப்பதிலும், சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் காப்பதிலும் தற்போதைய அரசு களத்தில் உறுதியாக நிற்க வேண்டும்; அதோடு நின்றுவிடாமல், சட்டக் களத்திலும் வலுவாகப் போராட வேண்டும்.
ஆகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் உயர்திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் நடவடிக்கையானது, தமிழகத்தின் மதச்சார்பின்மையையும், சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், செயலில் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் மத உரிமைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் குர்பானி தடை உத்தரவு விவகாரம்:
தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பக்ரீ��் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
இந்துத்துவ ஆதரவாளரால் தொடரப்பட்ட இந்த வழக்கில், பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் அன்று மாலை இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்பதை உணர்த்துகிறது. பண்டிகைக் காலத்தையும், அதற்குப் பிந்தைய சூழலையும் இலக்கு வைத்து இத்தடை அமலாக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும்.
நீதியரசர் அவர்களின் உத்தரவின்படி, அரசு அனுமதி பெற்ற இடங்களைத் தவிர பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி, தனி நபர��களின் சொந்த இடங்களிலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு கால்நடையையும் பலியிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு, இஸ்லாமியர்களின் 'குர்பானி' கடமையை முடக்குவது மட்டுமல்லாமல், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும், அனைத்து சமூக மக்களின் பாரம்பரிய உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய ஆபத்தான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் ��ெல்ல வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை மேல்முறையீடு செய்யாமல் மௌனம் காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயன்றுள்ளன. அதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குர்பானி கொடுப்பதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளும், இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து காவல்துறை மாடுகளைப் பறிமுதல் செய்த கண்டனத்திற்குரிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. காவல்துறையின் கண்காணிப்பை மீறி, இத்தகைய கும்பல்கள் மாடுகளைக் கைப்பற்றும் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவான போதிலும், தமிழக அரசோ அல்லது தமிழக முதல்வரோ இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது சரியல்ல. முக்கியமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சமூக நீதித்துறை அமைச்சரும் தங்களுக்குரிய பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில���, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஷாஜகான் அவர்கள் துறை சார்ந்த எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அச்சத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குத் தைரியம் அளிக்கும் வகையிலான உடனடி ஆறுதல் நடவடிக்கைகளை அவர் அரசுடன் இணைந்து மேற்கொண்டிருக்க ��ேண்டும். எனவே, இந்த குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வெறும் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல; இது கால்நடைகளை பலியிடும் பாரம்பரிய வழக்கம் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானது என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்ட��ம். இதன் மூலம், தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வரும் மதச் சடங்குகளையும், பண்டிகைக் கால வழிபாட்டு உரிமைகளையும் மக்கள் வழக்கம்போல அச்சமின்றித் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#SDPI #TNgovt #TNGovernment #vijaytncm
``இது எங்கள் இறுதி எச்சரிக்கை’’
``முதலில் திமுக, பின் விசிக, அதற்கு பிறகு அதிமுகவில் சேர முயற்சி ��ன பல கட்சிகளில் இருந்து தாவி கடைசி புகலிடமாக விஜய்யின் தவெகவில் இணைந்த அமைச்சரே, அதிமுகவை அழிக்க நினைக்கும் உங்கள் செயல், யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டு கொள்வதை போன்றது. உங்களை நீங்களே அழித்து கொள்ளும் செயல். இனியும் இந்த ஆள் பிடிக்கும் வேலையை தொடர்ந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. இது இறுதி எச்சரிக்கை’’
• முன்னாள் அமைச்சர் RB உதயகுமார்
#EdappadiPalaniswamy #ADMK #RBUdhayakumar #AadhavArjuna #TVK #ThanthiTV
எரிபொருள் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்
சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே, பொதுமக்களை ஏமாற்றும் சுயநலத் தேர்தல் அரசியலை வெளிப்படுத்தும் வகையில், மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதையும், அதைத் தொடர்ந்து உடனடியாக மேலும் 90 காசுகள் உயர்த்தியதையும் எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காலங்களிலும், கடந்த பல ஆண்டுகளாக எரிபொருட்களுக்கு அதிக வரி விதித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ, இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவோ அல்லது புவிசார் அரசியல் அபாயங்களுக்கு எதிராக எரிசக்தித் துறையை வலுப்படுத்தவோ ஒன்றிய அரசு தவறிவிட்டது. மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைப்புகள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மே��ும் பாதிப்படையச் செய்துள்ளது.
இந்த விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றத்தைத் தூண்டி, தினக்கூலிகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
பொதுமக்களின் செலவில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நீண்டகாலக் கொள்கை தோல்விகளை, இத்தகைய தற்காலிக நடவடிக்க���கள் மறைத்துவிட முடியாது.
ஆகவே, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், கட்டுப்பாடற்ற விலை நிர்ணய முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் மற்றும் வலுவான அரசாங்க ஒழுங்குமுறையைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
- பி. அப்துல் மஜீத் ஃபைஸி,
தேசிய பொதுச் செயலாளர், SDPI.
சென்னையில் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி! தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்*
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்ச��புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில�� ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டி��்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மி���் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும்.
புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்பு��்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம�� தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சம��கங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் ��ெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்றாண்டுகளுக்கான SDTU தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
உங்கள் பணி தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் மேலும் வலிமை சேர்க்க��்டும்.
S. அகமது நவவி
மாநில பொதுச்செயலாளர்
SDPI – தமிழ்நாடு
SDPI held its “Plenary for Revival and Outreach” at the Central Office in Delhi under National President M.K. Faizy. GSOs and outreach in-charges from North India discussed organisational strengthening, cadre-building, outreach, and leadership development. #SDPI
Repeated NEET paper leaks expose deep-rooted corruption, the growing influence of the education mafia, and the government’s failure to protect exam integrity. NEET also disadvantages rural & poor students, making medical education inaccessible for many deserving aspirants. #SDPI
India’s democratic foundations face a grave threat from divisive and communal politics, misuse of agencies, and electoral manipulation. Secular and democratic forces must unite beyond regional lines to defend the Constitution, democracy, and social harmony. #SDPI
717 மதுக்கடைகள் மூடல்: தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு! - படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது.
மது உள்ளிட்ட போதை அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களையும், அதன் விளைவாகச் சீரழியும் ஏழைக் குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் உன்னத இலக்கை நோக்கி இந்த அரசு உறுதியுடன் நடைபோட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
போதையற்ற தமிழகத்தை உருவாக்கி, வருங்காலத் தலைமுறையினரின் வாழ்வை ஒளிரச் செய்யத் தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், சமூக நலன் சார்ந்த இத்தகைய முடிவுகளுக்குத் எஸ்டிபிஐ கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
#Tngovt