என்னுடைய எழுத்துக்களெல்லாம்
மஞ்சள்க் கைரேகையில் தோய்ந்து தடிக்க
மடி மீதும் தலையணை மீதும் அயர்ந்து தூங்கியிருக்கிறேன்
எழுத்துக்களின் மீது படியும் அழுத்தங்களை உணரமுடியுமாயின்
உன் விரல்களை நானும்
என் இதழ்களை நீயும் ஸ்பரிசித்திருக்கக் கூடும்
நகத்தால் ஆழக் கீறி
சதைக்குள் விதையைப் பதித்து
வளர்ந்த பூவைப் பார்த்து
மெய் சிலிர்த்துக் கொண்டான் அவன்
அந்த மலரை சிலாகிக்க முடியாது
கையை அறுத்துக் கொண்டேன்
கையோடு எடுத்துப் பதியம் போட்டுக் கொண்டான்
நட்பு