ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக��� கொள்வது என் பொறுப்பு🙏
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடு���். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
https://t.co/X8tomLvLbS
ரெண்டு அண்ணன் தம்பிக்கு பாட்டன் வச்சுப் போன நிலம் கிடைச்சது. மூத்தவர் நிலத்தைத் தொடாம வச்சார். இளையவர் ஒரு பகுதியை வித்து, பிள்ளைகளைப் படிக்க வச்சார்.
மூத்தவர் நிலம் ஒவ்வொரு தலைமுறையிலும் பிள்ளைகளுக்குப் பங்கு பிரிஞ்சு, துண்டு துண்டா சுருங்கி, நாலாவது தலைமுறையில் வீட்டுமனை அளவு தான் மிச்சம்.
இளையவர் பிள்ளைகள் படிச்சு ஆசிரியர், டாக்டர் ஆனாங்க. அவங்க பிள்ளைகளைப் படிக்க வச்சாங்க. பேரப்பிள்ளைகள் வெளிநாடு வரை போனாங்க. ஏழு தலைமுறை கடந்தும் அந்தக் குடும்பத்துல கல்வி விளக்கு அணையல.
நிலம் தலைமுறைக்குத் தலைமுறை குறையும். கல்வி தலைமுறைக்குத் தலைமுறை கூடும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
(குறள் 398)
#thirukural #tamilmotivation #education #கல்வி