"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.
விசிக-வின் முன்னணி பொறுப்பாளர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..
---------------------------------
அமைச்சரவையில் இரண்டு பிராமண அமைச்சர்கள் உள்ளனர். மேலும், முதல்வருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்பான தலைமைச் செயலாளர் பதவியிலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், முக்கிய அதிகார மையங்களில் பிராமண சமூகத்தினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அரசின் செயல்பாடுகள் காட்டுகின்றன என்பது என் அரசியல் மதிப்பீடு.
ஆனால், இதே அரசில் ஆறு தலித் அமைச்சர்கள் உள்ளனர் என்பதைக் காரணமாகக் காட்டி, ஆர்வமிகுதியில் சிலர் அரசுக்கு முழுமையாக முட்டுக்கொடுத்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூக பிரதிநிதித்துவம் என்பது அமைச்சர்களின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடப்படக் கூடாது; அதிகார மையங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் சமூக நீதியை உண்மையில் முன்னெடுக்கிறதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கூட்டணியில் இருப்பதால் தேவையான இடங்களில் ஆதரவு அளிக்கலாம். ஆனால் அதற்காக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாக நியாயப்படுத்துவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல. ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம்; விமர்சிக்க வேண்டியதைத் தயக்கமின்றி விமர்சிப்போம். அதுவே சுயமரியாதை அரசியலின் அடையாளம்.
லெனின் அன்பரசு.
விசிக மாநில இளைஞரணி துணை செயலாளர்.
திமுக ஆட்சி காலத்தில், கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமை இடமான வாடிகன் நகரத்தில் போப் அரண்மனை ஆலயத்தில் தமிழரான தேவசகாயம்பிள்ளை புனிதர் பட்டம் திருப்பலியில், திருப்பலிக்கு முன் தமிழ் தாய் வாழ்த்து எந்த சிரமம் இல்லாமல் பாடப்படுகிறது. ஆனால் இங்கே இருக்கும் ஆரிய கும்பலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?