புதுக்கோட்டை மாவட்டம்,
#நம்ம_விராலிமலை தொகுதிக்குட்பட்ட விராலிமலை ஊராட்சி
ஒன்றியம், தென்னம்பாடி ஊராட்சி, கூத்தக்குடி கிராமத்தில்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.17.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்ததோடு,
இராஜகிரி ஊராட்சி, குளக்காரன்பட்டி கிராமத்தில் 'நகரும் நியாய விலைக்கடை' அங்காடியை கொடியசைத்து மாண்புமிகு தொழிலாளர்
நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்!
இச்சிறப்புமிகு நிகழ்வில், பல்வேறு துறைசார் அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்! 🙏
கட்சி தொடங்கிய இரண்டரை
ஆண்டுகளில்,
கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய
ஒன்றரை ஆண்டுகளில்
#தமிழ்நாடு மட்டுமில்லாமல்
இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட மாற்றத்தின் மாபெரும் சக்தியான
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் நல்லாட்சி..
'100' நாள் மட்டுமல்ல நூறாண்டு பேசும் சாதனைகளின் தொடக்கமாக,
‘ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி'யாக என்றென்றும் தொடரும் என்பதை எடுத்துரைத்த #நம்ம_விராலிமலை
மாபெரும் பொதுக்கூட்டம்…🙏🔥💪
@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl
#CMJosephVijay
#CMVijayForTNRights
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
தமிழக வெற்றிக்
கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகவும்,
புதுக்கோட்டைமேற்கு மாவட்ட
செயலாளராகவும்
நியமிக்கப்பட்டதை தொடர்ந்தும்,
#புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயப் பெருமக்களின் வாழ்வாதார நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக ரூ.150
கோடி நிதி ஒதுக்கீடு செய்ததோடு, சட்டப்பேரவையில் ‘நிச்சயம் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம்’ என உறுதியளித்த..
தமிழக வெற்றிக் கழகத்தின்
பொதுச்செயலாளர் மாண்புமிகு
நீர்வளத்துறை அமைச்சர்
அன்பிற்கினிய @BussyAnand
அவர்களை,
புதுக்கோட்டை மத்திய மாவட்டச்
செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்,
கழக துணை பொதுச்செயலாளர்;
கரூர் மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை, நன்றியை பகிர்ந்த மகிழ்வான தருணம்..
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
#PudukkottaiWestTVK
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?
உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் அறந்தாங்கி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை மத்திய மாவட்டத்தின் மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. @Farvace_Offl அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நற்பணி மன்ற காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து மக்கள் சேவை செய்து வரும் உங்களுக்கு இந்த பதவி கூடுதல் பொறுப்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்டத்தின் மாவட்ட கழக இணைச்செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் தலைவர் தளபதி சார்பிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@tvkvijayhq
அன்பிற்குரிய திரு.@aloor_ShaNavas அண்ணன் அவர்களே.,
நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் திரு.அறிவு அவர்கள் பேசியதை கவனித்தீர்களா என தெரியவில்லை! அம்பேத்கர் அவர்களின் மறைவுக்கு பின்பு அவரது கருத்துகளை எழுத்து வடிவமாக்க பெருமளவு வாய்ப்பு இல்லாத கால கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் (பாடல், கூத்து),கலைஞர்கள் மூலமாக ஒவ்வொரு திண்னைக்கும் அவர் கொண்டு சேர்க்கப்பட்டார் என்று கூறினார்!
உங்கள் கட்சியின் வழிகாட்டியாக, அண்ணன் திருமாவளவன் இதயத்தில் சுமந்து நிற்கும் அம்பேத்கர் அவர்களை கொண்டு சேர்த்த பெருமை பாட்டுக்கும் கூத்துக்கும் இருக்கும் போது, அதே அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்று செயல்படும் எங்கள் தலைவரை "கூத்தாடி" என்று மிகவும் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை உங்கள் மீது ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்!
திமுக போல கொச்சையாக வசைபாடும் கட்சி விடுதலை சிறுத்தைகள் அல்ல என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்த நீங்கள் நிச்சயம் திரும்பப்பெற வேண்டும்!
உங்கள் மீதுள்ள மரியாதையும், அண்ணன் @thirumaofficial அவர்கள் மீதுள்ள மிகப்பெரிய மதிப்பையும் சீரழிக்க இங்கு திமுக இணைய கும்பல் உங்கள் பேச்சை பகடையாக பயன்படுத்துவதை நிறுத்த நீங்கள் முன்வர வேண்டும்!
ரமேஷ்.,
தமிழக வெற்றிக் கழகம்
நாள்: 07.12.2024
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
#புதுக்கோட்டை மாவட்ட தலைமை #தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் #தளபதியார் அவர்களின் கல்வி விருது வழங்கும் விழாவில் தங்கள் குடும்பத்துடன் #தளபதியார் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கலந்து கொண்டவர்களுக்கு புகைப்படம் வழங்கியபோது