மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.
Wishing a very happy birthday @iam_SJSuryah sir !
Eagerly looking forward to your directorial magic once again with #Killer. Wishing you success, happiness and blockbuster hits as always!
#HBDSJSuryah
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களை
நானும் மகன் மதன்கார்க்கியும்
முகாம் அலுவலகத்தில்
சந்தித்து மகிழ்ந்தோம்
அந்தவயதில் அவர் தாத்தா
அடைந்த நிதானத்தை
இந்த வயதில்
உதயநிதி அடைந்திருக்கிறார்
பதற்றப்படாத உடல்மொழி,
அவசரம் இல்லாத வாக்கியங்கள்,
புன்னகையில்
நனைந்துவரும் வார்த்தைகள்,
எதிராளியைப்
பேசவிட்டுக் கேட்கும்
பெருந்தன்மை,
சக மனிதர்மீது அக்கறை
இவையெல்லாம்
தலைமைப் பண்புகளின்
தனிக் குணங்கள்
வாய்த்திருக்கிறது
உதயநிதிக்கு
வாழ்த்தி
விடைகொண்டோம்
@Udhaystalin | @madhankarky
சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர் அவர்கள்.
மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் @arrahman அவர்களுக்கு என் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இசைபட வாழ்க! #HappyBirthdayARRahman
Very happy to be revealing the first look of dear @vikranth_offl next, #TheKillerMan the poster is striking and strong 💪🏼! Here’s wishing the entire cast crew and team all the very best only !!
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
@tnschoolsedu#SchoolReopen
நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்!
உங்களின் சமூக - பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்தான் நமது #DravidianModel அரசு எண்ணற்ற #WomenEmpowerment திட்டங்களைத் தீட்டி வருகிறது.
சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்!
#DMK4Women #IWD2024 #InspireInclusion #IWD24
கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
#தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய சகோதரி, அந்த விடுதிகளை #WellBeingCentre-களாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தார். அவரது இந்தக் கருத்து நிச்சயம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வோம்! தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்!
#NeengalNalama