From tonight 12 am , #Dorothy will be streaming globally in Netflix... Also it is still Successfully running in limited theatres withstanding Thalaivar's #Jailer2 Storm💥💥
Please do watch and/or rewatch the film in both Theatres and/or in Netflix... ❤️❤️
Kindly request to avoid posting any clips from the film that would spoil the experience of First time watchers... Please.. Please.. Please!! 🙏🏻
#DorothyAddicts
#DorothyonNetflix
#Dorothy4thWeek
நேற்று டோரதி படத்தைத் திரையரங்கில் மீண்டும் பார்த்தபோது மூன்று விஷயங்களைக் கவனித்தேன்.
- இந்தப் படம் விரைவில் OTT-யில் வரப்போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் அண்ணாநகர் VR மாலில் அரங்கு நிரம்பியிருந்தது. மகிழ்ச்சி.
- இந்தப் படத்தை நான் மூன்றாவது முறை அரங்கில் பார்க்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு காட்சி கூட கொஞ்சமும் சலிக்கவே இல்லை. மாறாக, முன்பு கவனிக்காத பல புதிய விஷயங்களை இப்போது புதிதாகப் பார்க்கமுடிந்தது. நல்ல விஷயம்.
- திரையரங்கில் எனக்குப் பக்கத்தில் இரண்டு நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அந்தப் படத்தை முதன்முறையாகப் பார்ப்பது அவர்களின் பேச்சிலிருந்து எனக்குப் புரிந்தது. படத்தில் சுப்பு தன்னை ஒரு மூன்றாம் பாலினத்தவராக வெளிப்படுத்திக் கொண்ட கணத்திலிருந்து, அவர்களின் கெக்கலிப்பும் பேச்சுகளும் எரிச்சலூட்டுவதாய் இருந்தன. கார்த்திக் சுப்புவைப் பேருந்து நிலையத்தில் புடவையில் பார்த்து, “ச்சீ” எனும்போது இருவரும் களுக்கென்று சிரித்தார்கள். அதன் பின் வந்த காட்சிகளிலும், கார்த்திக் கோபமாக முறைத்தபோதும், சுப்புவை அடிக்கக் கையோங்கியபோதும், பாராட்டினார்கள்.
ஆனால் படத்தின் கதை எங்கே போகிறது என்பது அவர்களுக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை என்று தெரிந்தது. மலைமீது சுப்புவின் தலைக்கு நேராக கார்த்திக் துப்பாக்கியை நீட்டுவான். பிறகு அந்தத் துப்பாக்கியைக் கீழே போடுவான். அந்தச் சமயத்தில், "நீயே எடுத்து சுட்டுக்கோ'ன்னு சொல்லப் போறான் பாரு," என்றார் அவர்களில் ஒருவர்.
ஆனால் அந்தக் காட்சி முடிந்த பிறகு அவர்களின் கேலிச் சிரிப்பு அடங்கிவிட்டது. எந்தப் பேச்சும் இல்லை. அவர்கள் பக்கத்தில் முழுமையான அமைதி நிலவியது.
படத்தின் கடைசிக் காட்சியில் சுப்புவை கார்த்திக் முத்தமிடும் கணத்தில், "சூப்பர்ல்ல?" என்றார் அவர்களில் ஒருவர்.
படம் முடிந்தது. அரங்கில் விளக்குகள் எரியத் தொடங்கின. இளையராஜாவின் குரல் "வனக் கிளியே" என்று ஒலிக்கத் தொடங்கியது. பார்வையாளர்களில் பலர் எழுந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நண்பர்களில் ஒருவர் இருக்கையை விட்டு எழுந்துகொள்ள, மற்றவர் "இரு, அப்புறம் போலாம்," என்றார்.
பாலினப் பாகுபாடு பற்றிப் பல கட்டுரைகள் செய்ய முடியாததை, அந்த அரங்கில் டோரதி எனும் இந்தக் கலைப்படைப்பு செய்ததைக் கண்ணாரக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள் #Dorothy #movie #society
#வாழ்வெனும்பயணம்
A heartfelt thank you to all the reviewers, filmmakers and cinema enthusiasts who have appreciated my work in #Dorothy. Your kind words and encouragement mean a lot to me.. grateful for all the love and support! ❤️
Honourable Minister Mr.Vanni Arasu sir felicitated team #Dorothy at Tamilnadu Government Secretariat and appreciated our film as an important Cinema that has started a healthy conversation and change in the Society. ❤️
He also took my request to implement strict rules and actions to curb Transphobia in any form and also to have a dedicated Helpline for Transgender community.
Thanks a lot sir.Your words of praise and endorsement to our film means a lot to us.. @VanniTamizhVCK 🙏🏻
#DorothyTheCinemaTheChange