சொந்த சமுதாயம் என்றும் பாராமல்,
கட்சியில் ஒன்றாக பயணித்தவர்கள் என்று கருதாமல்...!
மருத்துவர் அய்யாவின் பக்கம் நின்ற ஒரே காரணத்திற்காக...
மிரட்டினார்கள்,
வழக்கு கொடுத்தார்கள்,
வீடு புகுந்து தாக்குதல்
நடத்தினார்கள்,
சாலையில் மறித்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்,
வேலை செய்யும் இடத்திற்கு புகார் கொடுத்து அவன் வாழ்வாதாரத்தை கொடுத்தார்கள்,
அம்மா மனைவி என அனைவரின் புகைப்படங்களையும் சமூகவளைதளங்களில் பதிவேற்றி அவதூறு பரப்பினார்கள்.
இத்தனை அசிங்கங்களையும் செய்த பண்ணையார் தரப்பு... ஒன்றிணைவோம் வா என அழைக்க மானமுள்ள வன்னியன் போவானா...?
ஆதாயம் வேண்டும் என நினைக்கும் சுயநலவாதி செல்வான்..!
மானமுள்ளவன் மாற்றுக்கட்சிக்கு கூட செல்வானே தவிர துரோகியிடம் சரணடைய மாட்டான்.
அப்படி மாற்று கட்சிக்கோ, அமைப்பிற்கோ செல்பவர்களை விமர்சனம் செய்வது முதிர்ச்சியான செயல் அல்ல...!
கடந்து செல்லுங்கள்..! 🙏
வி சி க வாக்கு வங்கி மொத்தமாக கரைந்து த வெ க வுக்கு சென்றுவிட்டது . விஜய் தலித் சமூகத்தை சேர்த்தவர் என்று பரப்புரை வலுவாக தென் மாவட்டங்களில் எடுத்துச் செல்லப்பட்டது . முக்கியமாக தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் விஜய் ரசிகர் மன்றங்கள் அதிகமாக வேரூன்றி வளர்ந்தது . கடந்த ஐந்தாண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை தட்டிக்கேட்க திருமா தவறிவிட்டார் . விஜய் திருமாவின் வாக்குகளை எடுத்துக்கொண்டுவிட்டார் . இப்பொழுது தலித் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள் என்று இருக்கின்ற நிலையில் , விஜையுடன் பயணிப்பதை தவிர்த்து வேறு வழியே இல்லை என்கிற உண்மையை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் உருட்டிக்கொண்டிருக்கிறார் திருமாவளவன்
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
@RameshOffcl அடுத்த மாநிலத்தில் பக்தர்களுக்கு தரிசன முறை அரசுக்கு அல்லது கோயில் நிர்வாகத்துக்கு வருவாய் வரும்படி நிர்வாக நடைமுறை சிறப்பாக உள்ளது. ஆனால் நம்ம ஊரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக சேருவது திருச்செந்தூர், திருவண்ணாமலை இரண்டில் மட்டுமே. அதில் ஏன் இத்தனை நிர்வாக குளறுபடிகள் இடைத்தரகர்கள
பெற்று வளர்த்த பெண்ணையும் பறிகொடுத்து, ஆணவப்படுகொலை, சாதிவெறி என பொய்யான பழிகளையும் சுமந்து, இப்போது வீடு வாகனம் என சொத்துக்களையும் இழந்து நிற்பது என்பது இந்த பாழ்பட்ட சமூகத்தின் அவலநிலை...!
இறந்தவர்கள், இதனால்தான் இறந்தார்கள் என நிரூபணம் ஆவதற்குள் பல அரசியல் பிழைப்புவாதிகளால் குறிப்பிட்ட சமூகத்தின் மீது பூசப்படும் பொய்யான கரையானது துடைக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
பிணக்கூறு ஆய்வறிக்கை தற்கொலை என வெளியிட்ட பிறகும், சில சமூக விரோதிகள் இதை ஆணவக்கொலை என்று திசைதிருப்ப பார்ப்பதும், சமூகத்தில் ஆசாதாரண சூழ்நிலையை உண்டாக்க நினைப்பது மிகவும் கண்டனத்துக்குரியது..!
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்பக்கலைக்குத் தன்னை அர்ப்பணித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூத்த சிற்பி ராஜஸ்தாபதி திரு.காளியப்ப கவுண்டருக்கு ராஷ்டிரபதி பவனில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
#Salem#PadmaShri#PadmaAwards
மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களிடம் பத்மஶ்ரீ விருது பெற்றுள்ள சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த அன்பு சொந்தம் அண்ணன் சிற்பி பத்மஶ்ரீ ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர் அவர்களுக்கு நெஞ்சம்வாழ்த்துக்கள்.
வன்னியர் சங்க தலைவர் பெரியவர் திரு.பு.தா.அருள்மொழி அறிக்கை..!
வன்னியர் சமூகத்தின் தியாக வரலாறும், இடஒதுக்கீட்டு உரிமைப் போராட்டமும் – உண்மைகளை பலர் உணர வேண்டிய நேரம்
தமிழகத்தின் மிகப்பெரிய சமூகக் குழுக்களில் ஒன்றாக விளங்கும் வன்னியர் சமூகம், வடதமிழகம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் வன்னியர் சமூக மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
பெரும்பாலான வன்னியர் மக்கள் விவசாயம், விவசாயக் கூலி வேலை, கட்டுமானத் தொழில் உள்ளிட்ட உடல் உழைப்பை நம்பிய தொழில்களிலேயே ஈடுபட்டு வாழ்ந்து வருகின்றனர். இன்று கூட தமிழகத்தின் பல கிராமங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றன.
1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள், மருத்துவர் ச.இராமதாஸ் அய்யா அவர்கள், பல்வேறு வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து வன்னியர் சங்கத்தை உருவாக்கினார். சமூக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியிருந்த வன்னியர் மக்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
அதன் உச்சகட்டமாக, 1987-ஆம் ஆண்டு தனி இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அந்தப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வன்னியர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அந்தத் தியாகத்தின் விளைவாகவே 1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவு உருவாக்கப்பட்டு, வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த 20% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக போராட்டம் நடத்தி உயிர்த் தியாகம் செய்தது வன்னியர் சமூகமே. ஆனால் அந்த உரிமையின் பலனை பிற சமூகங்களும் பெற வேண்டும் என்ற சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் வன்னியர் மக்கள் இதுவரை சகோதரத்துவ உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர்.
பின்னர், மக்கள் தொகை மற்றும் சமூகப் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு வன்னியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மருத்துவர் ச.இராமதாஸ் அய்யா அவர்கள் தொடர்ந்து போராடினார். அதன் விளைவாக 10.5% உள் ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. பின்னர் சட்டரீதியான காரணங்களாலும், போதிய புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லாத காரணத்தாலும் அது நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இது வன்னியர்கள் முன்னேறிய சமூகமாகிவிட்டார்கள் என்பதற்கான சான்று அல்ல; மாறாக தரவு சேகரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளின் விளைவாகும்.
இன்றும் உயர்நிலை அரசு அலுவலர்கள், தலைமைச் செயலகப் பதவிகள், அனைத்திந்திய சேவைகள் போன்ற உயரிய பொறுப்புகளில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தின் பல கிராமங்களில் வன்னியர் குடும்பங்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்கு அருகில் வாழ்ந்து வருகின்றன.
எனவே, வன்னியர் சமூகத்தை "முன்னேறிய சமூகம்" என்று சித்தரிப்பதும், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறுவதும் சமூக நிதர்சனங்களுக்கு முரணானதாகும்.
மருத்துவர் ச.இராமதாஸ் அய்யா அவர்கள் வன்னியர் சமூகத்திற்காக மட்டுமல்லாமல், தமிழகத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதற்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அருந்ததியர் உள் ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு, 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
வன்னியர் சமூகம் யாருக்கும் எதிரியான சமூகம் அல்ல. தங்களது உரிமைகளை ஜனநாயக வழியில் போராடிப் பெற்ற சமூகமாகும். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கமும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே வன்னியர் சமூக மக்களின் விருப்பமாகும்.
எனவே, எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலோ, ஒரு சமூகத்தின் உரிமைகளை மறுக்கும் வகையிலோ, சமூக மோதல்களை உருவாக்கும் வகையிலோ யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக வன்னியர் சமூகம் மக்கள் பற்றி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்துகள் வேதனையை அளிக்கக் கூடியவை அது கண்டனத்திற்குரிய கருத்துகள் ஆகும்.
அனைத்து சமூகங்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். சமூகநீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அதை எங்களது மருத்துவர் அய்யா தலைமையிலான வன்னியர் சமூகம் கடைப்பிடித்து வருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பை முழு முயற்சியோடு நிறைவேற்றி மக்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். @TVKVijayHQ@CMOTamilnadu@vinothravi11
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்
மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு ஆகும்!!
மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எஃகு தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, மின்சாதனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடைந்திருக்கும்.
குறிப்பாக கடலோர மாவட்டங்களை மையமாகக் கொண்டு புதிய தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். மாநில அரசுக்கு வரி வருவாய் அதிகரித்திருக்கும். துறைமுக வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும்.
ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தற்போது ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வந்த நிலையில், இவ்வளவு பெரிய திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பது அரசின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்காக மாநில அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது? மத்திய அரசுடன் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? திட்டத்திற்கு தேவையான நிலம், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதற்கான விளக்கத்தை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக தொழில்துறை அமைச்சர், அரசு செயலாளர்கள் இந்த விவகாரத்தில் போதிய அக்கறை செலுத்தினார்களா? தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய இந்த முக்கிய முதலீட்டை தக்கவைத்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டனவா? என்ற சந்தேகங்கள் இயல்பாக எழுகின்றன. திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்ற பின்னர் வருத்தம் தெரிவிப்பதை விட, ஆரம்ப கட்டத்திலேயே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
எனவே, மசாகான் டாக் திட்டம் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு மாறியதற்கான முழுமையான காரணங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், இனி இதுபோன்ற பெரிய முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தொழில் முதலீட்டு கொள்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் முதன்மை பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
*சங்கத்தமிழனை வைத்து ஷாநவாஸை ஒருமையில் பேசவைத்தது!(திமுக தலைவர்களையும் கூட்டணியில் இருந்துகொண்டே)
*பிறகு ஷாநவாஸுக்கு புதிய பொறுப்பை வழங்கியது!
*நானே கட்டுமன்னார்குடியில் போட்டி!
*அடுத்தநாள் நான் போட்டியிடவில்லை!
*இளையபெருமாள் மகன் என்பதால் போட்டியிட வைத்தோம்(வாரிசு பிரச்னை இல்லை)
*KV குப்பத்தில் வேற ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாய (சொந்த சாதி) தலைவர் நிற்பதால் போட்டியிடவில்லை!
*திருவிக நகரில் போட்டியிடும் அக்கா பொற்கொடிக்கு வாழ்த்து!
*தேர்தல் முடிந்த பிறகு ஒரு நேரலையில் -நம்ம கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை!
*தேர்தல் முடிவு வந்த பிறகு - நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்!
*திமுக தலைவர் ஒப்புதலுடன் தான் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு!
*கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு!
*திமுக அதிமுக கூட்டணி என்றும் ,என்னை முதல்வர் என்றும் தகவல் சொன்னார்கள்!?
*அது கிசுகிசு தான் உண்மையல்ல!
*அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் -திமுக கூட்டணி தொடரும்!
*விஜயின் ஆலோசகர், ஜோதிடர் என்ற முறையில் இல்லாமல், கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற தகுதியின் அடிப்படையில் அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்!
*சோபா நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்தது!
*பக்ரீத் பெருவிழா நாளில் மாடு வெட்ட தடையை,எதிர்த்து இன்றுவரை பேசவில்லை!
*அரியலூர் கட்சிக்காரர்களை வைத்து ராசாவுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி ,ரௌடியைகளை வைத்து திமுக பெண்களை ஆபாசமாக பேசவைத்தது!
*கரூர் சம்பவத்தின் பொழுது -ஆதவ் க்கு தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதாக சொல்லியது -பழைய காணொளியில் விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டது!
*விஜய் rss பெற்றடுத்த பிள்ளை என்று பேசியது -கூட்டணிக்கு பிறகும் அந்த கருத்தில் மற்றம் இல்லை என்றது -பிறகு விஜயுடன் அதே நாள் கைகுலுக்கி கூட்டணி அமைச்சரவையில் இணைந்தது!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசானை பற்றி -இனி அவரை பேசுவது வீண்!
ஒன்றே ஒன்று : சொல்லி கொள்கிறேன்!
விசிக தோன்றுவதற்கு முன்பே திமுக மூன்று முறை ஆட்சியில் இருந்திருக்கிறது -ஆனால் திமுக தயவு இல்லாமல் திருமாவளவன் சட்டமன்றமோ மூன்று முறை பாராளுமன்றமோ போனதே இல்லை !
நன்றி ஆசானே!
முரணின் முழுவுருவம் thiruma!