ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்,
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
#VCK #VCKITWing #SocialJusticeMinister #VanniArasu #SCSTwelfare #ஆதிதிராவிடர்நலம்
#சமூகநீதித்துறை #PeopleFirst
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் முற்போக்குச் சிந்தனைகளையும், விசிகவின் கொள்கைகளையும் தடினமான வீடியோக்கள் மூலம் உலகறியச் செய்ய உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!
தேவைப்படும் திறமைகள்:
1. Alight Motion (Must)
2. After Effects & Premiere Pro
3. EFX, AI & Anime Video Creators
உங்கள் திறமையால் சமூக நீதிக்கான களத்தை வலுப்படுத்த வாரீர்! ✊🔥
📱 தொடர்புக்கு (WhatsApp Only): +91 86374 00486
#VCK | #VCK4TN| #vckitwing| #TholThirumavalavan |#VCKParty| #VCK_SOCIAL_MEDIA |#Thirumavalavan
23 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் வருகிறது.. 2 கோடிக்கும் மேலாக சொத்துகள் இருக்கிறது.. ஆனால் ஏழை எளிய பிள்ளையாம் இவர்!
அளவா உருட்டுங்க அமைச்சரே.. 😆
#TVKFails
#ஒரு_வாக்கும்_வீணாகக்_கூடாது
இந்திய ஜனநாயகத்திற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை அவசியமா?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா பெருமையாக கூறிக்கொள்கிறது. ஆனால் அந்த ஜனநாயகத்தின் தேர்தல் முறையில் மக்களின் அனைத்து வாக்குகளுக்கும் உண்மையான அரசியல் மதிப்பு கிடைக்கிறதா என்ற கேள்வி இன்று தீவிரமாக எழுகிறது.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள “First Past The Post” (FPTP) என்ற தேர்தல் முறையில், ஒரு தொகுதியில் அதிக வாக்கு பெறும் ஒருவரே வெற்றி பெறுகிறார். அவர் மொத்த வாக்குகளில் 30 அல்லது 35 சதவீதம் மட்டுமே பெற்றிருந்தாலும் கூட வெற்றியாளராக அறிவிக்கப்பட முடியும். இதன் விளைவாக, பெரும்பான்மையான மக்களின் வாக்குகள் எந்த அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பெறாமல் போகின்றன.
இது வெறும் தொழில்நுட்ப தேர்தல் பிரச்சனை அல்ல; ஜனநாயகத்தின் அடிப்படை நீதியையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு அரசியல் முரண்பாடு.
ஒரு தொகுதியில் 35 சதவீத வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுகிறார் என்றால், அவருக்கு எதிராக வாக்களித்த 65 சதவீத மக்களின் அரசியல் மனநிலை எங்கே பிரதிபலிக்கிறது? அவர்கள் அளித்த வாக்குகள் அனைத்தும் அரசியல் அர்த்தமற்றதாக மாறுகின்றன. தேர்தலில் தோற்றவர்களின் வாக்குகள் “வீணான வாக்குகள்” ஆக மாறுவது ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்துக்கு எதிரானதாகும்.
இதற்கான மாற்று வழியாகவே “விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை” குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையின் அடிப்படை என்னவென்றால், ஒரு கட்சி பெறும் மொத்த வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே. உதாரணமாக, ஒரு கட்சி 40 சதவீத வாக்குகள் பெற்றால், அதற்கு சுமார் 40 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் ஒவ்வொரு வாக்கும் அரசியல் மதிப்புடையதாக மாறுகிறது.
இந்த முறை வெறும் தேர்தல் கணக்கீட்டு மாற்றம் மட்டுமல்ல; அது ஜனநாயகத்தின் ஆழமான சமூக நீதிக் கோரிக்கையையும் உள்ளடக்கியது.
இந்தியாவைப் போன்ற பல மொழிகள், பல இனங்கள், பல சமூகங்கள் கொண்ட நாட்டில், தற்போதைய தேர்தல் முறை பெரும்பாலும் பெரிய கட்சிகளுக்கே ஆதரவாக செயல்படுகிறது. சிறிய அரசியல் இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல்கள், நிலவியல் அடையாள மக்கள், மொழிவாரி சமூகங்கள் ஆகியவை பெரும்பாலும் சட்டமன்ற பிரதிநிதித்துவமாக மாற முடியாமல் போகின்றன.
குறிப்பாக:
- தலித் மக்கள்,
- பழங்குடியினர்,
- மொழி சிறுபான்மையினர்,
- தனித்துவமான இன – பண்பாட்டு அடையாள மக்கள்கள்
போன்ற பல்வேறு மக்களின் அரசியல் குரல்கள் வாக்குகளாக இருக்கின்றன; ஆனால் அவை அதிகார அமைப்புகளுக்குள் செல்வதில் தோல்வியடைகின்றன.
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வந்தால், மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சட்டமன்ற அமைப்பில் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் சமூக பிரதிநிதித்துவமும் விரிவடையும்.
மேலும் தற்போதைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையில் பணபலமும், சாதி ஆதிக்கமும், வாக்கு பிரிப்பும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் விகிதாச்சார முறையில் மொத்த வாக்கு சதவீதமே முக்கியமாக இருப்பதால் கொள்கை அடிப்படையிலான அரசியல் வளர்ச்சிக்கும் வாய்ப்பு உருவாகும்.
இந்த முறைக்கு எதிராக சிலர் நிலையான அரசுகள் உருவாகாது, கூட்டணி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிடுகின்றனர். ஆனால் உலகின் பல முன்னேறிய ஜனநாயக நாடுகள் விகிதாச்சார முறையை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன. ஜெர்மனி, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் மனநிலை சட்டமன்றத்தில் அதிக துல்லியத்துடன் பிரதிபலிக்கிறது.
ஜனநாயகத்தின் நோக்கம் வெறும் ஆட்சியை அமைப்பது மட்டுமல்ல; மக்களின் அரசியல் விருப்பத்தை நேர்மையாக பிரதிபலிப்பதும் ஆகும். அந்த அடிப்படை நோக்கமே தற்போதைய தேர்தல் முறையில் பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று கோடிக்கணக்கான வாக்குகள் அரசியல் அர்த்தமின்றி மறைந்து போகின்றன. இந்த நிலை தொடரும் போது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான நம்பிக்கை இடைவெளி அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, “ஒவ்வொரு வாக்கும் மதிப்புடையது” என்ற ஜனநாயகக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து ஆழமான தேசிய விவாதம் தொடங்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது வெறும் தேர்தல் நடத்துவதல்ல; ஒரு வாக்கும் வீணாகாமல் பாதுகாப்பதே ஆகும்.
_ ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
இந்தியாவில் 3600 அய்.ஏ.எஸ் அதிகாரிகளில் 2750 பேர் பார்ப்பனர்கள் ; திட்டமிட்டு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ் அதிகாரிகளை பதவி ஏற்க விடாமல் குறுக்கு வழியில் சதி செய்து தடுத்து நிறுத்தி வைத்திருந்தது மோடி ஆட்சி.
இந்த முறைகேடான சதியை எதிர்த்து 10-ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக கடந்த மார்ச் 12 தங்களுக்கான நீதியை பெற்றிருக்கிறார்கள் 60 பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு ஒன்றிய ஆட்சியின் சமூக நீதி துரோகத்தை தகர்த்து. இந்த மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது.
அதிர்ச்சியூட்டுகிறது மோடி ஆட்சியின் இந்த துரோகம்.
1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரை கிரிமி லேயர் என்ற பொருளாதார வரம்புக்குள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டு உரிமைகளை முடக்கியது.
இதன் காரணமாக அரசு ஊழியர்களை பெற்றோர்களாகக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள். பெற்றோர்கள் பெரும் அரசு ஊதியத்தை ஆண்டு வருமானத்தில் இணைத்து ரூ 8 லட்சத்திற்கு மேல் வருவாய் வருகிறது என்று காரணம் கூறி பணி நியமனங்கள் மறுக்கப்பட்டன.
உண்மையில் 1993-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆட்சியில் கிரீமிலேயருக்கு அரசு ஆணை மூலம் ஒரு விளக்கம் தரப்பட்டது; அதாவது பெற்றோர்கள் பெரும் மாத ஊதியமும் விவசாயத்தில் வரும் வருமானமும் பொருளாதார வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்று தெளிவாகக் கூறியது அந்த அரசாணை.
அந்த அரசாணையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு பெற்றோர்கள் வருமானத்தையும் முறைகேடாக சேர்த்துக் கொண்டது மோடி ஆட்சி.
இந்த முறைக்கேட்டை எதிர்த்து பாதிக்கப்பட்ட 60 பேரும் அரசு தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு, டெல்லி, கேரளா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள்.
தீர்ப்புகள் மாணவர்களுக்கு சாதகமாகவும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராகவும் வந்தன. ஆனாலும் ஒன்றிய ஆட்சியின் பிடிவாதம் தளரவில்லை; உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தது.
மோடி ஆட்சியின் சமூக நீதி அமைச்சகம் பெற்றோர்கள் ஊதியத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்; இந்த மாணவர்களுக்கு பணி நியமனம் செய்யவே கூடாது என்று மனுதர்ம பார்வையில் பிடிவாதம் பிடித்தது.
இப்போது உச்ச நீதிமன்றம் மோடி ஆட்சியின் பார்ப்பனிய மனுதர்மத்தின் மண்டையில் அடித்து இந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் வருமானத்திலிருந்து விதிவிலக்கு தந்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கிறது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவு செய்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அரசின் சார்பில் கடிதம் ஒன்று வெளிவந்தது. அந்த கடிதம் ஏற்கனவே அரசியல் சட்டப்படி வெளியிட்ட அரசு ஆணைக்கு எதிராக பெற்றோர்கள் வருமானத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியது.
அரசு ஆணையை குப்பைத் தொட்டியில் வீசியது இந்த கடிதம். கடிதத்தை யார் எழுதியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை ; எந்தத் துறையில் இருந்து வந்தது என்பது தெரியவில்லை.
ஏதோ ஒரு உயர்மட்ட "மனு தர்ம புத்திரன் "கடிதத்தை வெளியிட்டு அதன் வழியாக ஏராளமான பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறான்.
மோடி ஆட்சி இந்த சதிக்கு உடந்தையாக நின்று பிற்படுத்தப்பட்ட மக்களின் முதுகில் குத்தி வந்திருக்கிறது.
இதே போல் தான் இட ஒதுக்கீடு கொள்கையால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று 1951 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செண்பகம் துரைராஜ் என்ற பார்ப்பன மாணவி மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடவில்லை என்ற உண்மை உச்ச நீதிமன்றத்தில் அம்பலமானது.
சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழ்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற வருகிறது மோடியின் பாஜக.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்வு குறைந்து வருவதை கவனத்தில் கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் வழியாக நிதிஉதவி; உண்டு உறைவிடம் வாய்ப்புகளை வழங்கி இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 56 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை திராவிட மாடல் ஆட்சி அய்.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவியில் அமர வைத்திருக்கிறது.
எனவேதான் இந்த தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கும் உரிமைப் போராட்ட களம் என்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.
விடுதலை இராசேந்திரன்
16.03.2026
@arivalayam@DMKITwing@KanimozhiDMK@Udhaystalin@Manothangaraj
முதலாவது மொழிப்போரும் நேர்செய்யப்பட வேண்டிய வரலாறும்
சனவரி 15: மொழிப்போரின் முதல் களப்பலி நடராசன் நினைவு நாள் தமிழ் உணர்வாளர்களால் புறக்கணிக்கப்படுவது ஏன்? இந்தக் கட்டுரையைப் படியுங்கள் (1/2)
தமிழ்நாடு அரசின்2025 ஆம் ஆண்டுக்கான 'அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு'த் தேர்வாகியுள்ள நமது கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் @sinthanaivck அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..
மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களுக்கு எமதுநெஞ்சார்ந்த நன்றி.@thirumaofficial