என்ன எவனும் FOLLOW பண்ணல , நான் ஒரு பதிவு போட்டா சீண்ட கூட மாட்டானுவ .. எதையாச்சும் RE TWITTE பண்ணோம் நா ரெண்டு பேரு அதை RE TWITTE பண்ணுவானுவ . இந்த எதை பதியும் எனக்கு கவலை இல்லை .. நான் திமுக காரன் .. திமுக காகத்தான் பேசுவேன். என் பாட்டன் அப்பன் நான்னு தலைமுறையா திமுக காரன் டா.
#WATCH | "போராடினால் எதுவும் கிடைக்கும் என உறுதியாக நம்பியவர் ஐயா நல்லகண்ணு.. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் முறைகேடு போராட்டம்.."
-த��ழர் நல்லகண்ணு சிலை திறப்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #UdhayanidhiStalin | #Nallakannu
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இ��்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம��� பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த��து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட���டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மே���்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆ��்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
2017 ல் இந்தியாவே நீட் தேர்வில் அமைதியாக இருந்த போது
முதல் முதலில் நீட் தேர்வு எதிர்த்து நீட் விலக்கு கேட்ட ஒரே கட்சி திமுக 🔥🔥
10 வருடம் கழித்து Fair Neet கேட்கிறது பிற மாநிலம்
இன்றும் அதே நீட் விலக்கு முழக்கம் தரும் ஒரே கட்சி
திமுக 🔥🔥
கருப்பு சிவப்பு 🖤❤
லண்டனில் இருந்து சென்னை வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்..
வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவே��்பு!
#MKStalin | #DMK | #Chennai | #PolimerNews
ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் திமுக செய்ய வேண்டியதை செய்யும்.. மீண்டும் முதல்வராக ஆட்சியில் அமர்வார் ��ு.க.ஸ்டாலின் - வாகை சந்திரசேகர் பேச்சு
Actor Vagai Chandrasekar | MK Stalin
#Newstamil24x7 #VagaiChandrasekar #DMK
“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர���
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்திகள்
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 15 இந்தியர்கள் உயிரிழந்த துயர்மிகு செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
உயிரிழந்தோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
இசைக்குயில் ��ிருமிகு எஸ். ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
மெல்லிசை மன்னர் எம்.��ஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.
இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.
அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!
#தென்காசி #மலையடிப்பட்டி
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வள���்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர��.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.