பிறந்த மண்ணில்
அடக்கம் செய்யப்பட்டார்
பாரதிராஜா
83 ஆண்டுகளுக்கு முன்னே
தமிழர்கள் பெற்ற
ஒரு புதையலைக்
குழிதோண்டி மீண்டும்
புதைத்துவிட்டோம் பூமிக்குள்
மேற்குத்தொடர்ச்சி மலைகளே
கள்ளிக்காடே கரடே நதியே
பச்சைத் தாவரங்களே
பாடும் பறவைகளே
வைகை அணைமீது மோதும்
வருசநாட்டுக் காற்றே
உங்கள் மகனை
உங்கள் மடியில்
ஒப்படைத்துவிட்டோம்
உடைந்த சொற்களின்
கதறல்கள்,
வட்டார வழக்கில் புலம்பல்கள்,
கண்ணாடிப் பெட்டியைக்
கட்டிக் கொண்டு
கண்ணீர் விட்ட மாதரார்,
ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே
தங்கள் மகனைத்
தூங்க வைத்துவிட்டார்கள்
தாய்மார்கள்
நாங்கள் யாரும்
கோரிக்கை வைக்காமலே
அரசு மரியாதையளித்த
தமிழ்நாட்டு முதலமைச்சர்
விஜய் அவர்களுக்கு
எங்கள் மண்ணின் நன்றி
துணையிருந்த தோழர்களை
என்னால் மறக்க முடியாது
மாண்புமிகு அமைச்சர்கள்
நிர்மல் குமார், வன்னியரசு
ஆட்சியர் வைத்தியநாதன்,
காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன்,
கண்காணிப்பாளர் சினேகப்பிரியா,
செந்தமிழன் சீமான்
மற்றும்
காலம் தூரம் பாராமல் ஓடிவந்த
கலைக் குடும்பத்தார்
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்நாள் முன்னாள்
நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள்
சந்திரசேகர் ஐ.பி.எஸ்
சிவனாண்டி ஐ.பி.எஸ்
ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்
தொழிலதிபர் வணங்காமுடி,
வெற்றி திரையரங்குகளின்
உரிமையாளர்
மதுரை ஐ.வெற்றிவேல்,
கல்வியாளர்
திண்டுக்கல் ரத்தினம்,
வசந்தபவன் ரவி,
பொறியாளர் பழனியப்பன்
போன்ற
நட்பு வட்டாரங்களுக்கும்
வெற்றித் தமிழர் பேரவை
உறவுகளுக்கும் நன்றி
அஞ்சலியில் விழுந்த
ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
இறுதி மரியாதையை
ராஜ மரியாதையாக்கிய
காவல் துறைக்கு
ஒரு கைகூப்பு
ஊடக நண்பர்கள்
அத்துணை பேருக்கும்
எங்கள் தலை வணக்கம்
ஓய்வுகொள் இமயமே!
உன் அடக்கம் முடிந்த
அதே தருணம்
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசிச்
சிறு தூறலிட்டுச் சென்றது
ஏன் தெரியுமா?
உன் குழியில் தள்ளப்பட்ட
பச்சை மண்ணிலிருந்து
உனக்கு
மண்வாசனை வீசத்தான்
#பாரதிராஜா | #Bharathiraja
கோட்டக்குப்பம் பிரச்சினையில் சமூகநீதி துறை அமைச்சர் ஒரு தரப்பை மட்டும் சந்தித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சரும் மீனவர் மக்களை சந்திக்கவில்லை.
மீனவர் மக்களை அனைவரும் புறக்கணிக்கிறார்களா?
@CMOTamilnadu , @VanniTamizhVCK , @srinathtvk
கடலூர் பெரியகுப்பத்தில் தினமும் 5-10 முறை மின்வெட்டு.
இது மின்சார பற்றாக்குறையா? மின் திருட்டா? அல்லது பராமரிப்பு குறைபாடா?
காரணத்தை விளக்கி, உடனடி தீர்வு வழங்க அதிகாரிகளும் MLA அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@EPerumbakkam@CMOTamilnadu#Cheyyur#KoovathurTNEB
நான் இதுவரை.. தமிழ்நாட்டு மக்களுக்கு வேட்பாளர் யார் என்று தெரியாது என்று நினைத்தேன்.
ஆனால் இன்று தான் தெரிகிறது..
வேட்பாளருக்கே தொகுதி மக்கள் யார் என்று தெரியாதாம்!
அப்படியென்றால்.. இவர் வெற்றி பெற்றது தேர்தலிலா? அல்லது லக்கி டிராவிலா? 🤔
#TamilNadu#TVKVijay#TVKVijayFails
தமிழக முதலமைச்சர் என்பவர் அறிவும், முற்போக்கு சிந்தனையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
முற்போக்கு தமிழ்நாட்டை, பிற்போக்குச் சிந்தனைகள் வழிநடத்தக் கூடாது.
தலைவன் எவ்வழியோ... தொண்டனும் அவ்வழியே...
@DMKITwing@dmk_youthwing@arivalayam#TamilNadu#CMJosephVijay
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
🚀 Testing Android 17 reminded me of one thing:
Never assume old features will work the same on a new Android version.
Early testing, crash monitoring, and reviewing behavior changes save countless hours later.
What's your biggest Android 17 challenge?
#Android17#AndroidDev
“5 ஏக்கர் வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி” என்று வாக்குறுதி…
இன்று வருமான அடிப்படையில் நிபந்தனை சலுகை!
வாக்குறுதியில் முழு தள்ளுபடி,
நடப்பில் துண்டு துண்டு உதவி!
இது விவசாயிகளுக்கான நிவாரணமா?
அல்லது தேர்தல் மோசடியா?
#TVKVijayFails#TVKVijayHQ
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம் என்று கூறிவிட்டு, தற்போது 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அவசர அனுமதி வழங்குவது ஏன்?
இது மருத்துவத்துறையின் தனியார்மயமே தவிர மக்கள் நல ஆட்சி அல்ல!
முதலில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்!
@CMOTamilnadu@TVKVijayHQ#HealthCare#TamilNadu
தேசிய கீதத்தை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்ன பாட சொன்னதுக்கு, அதெல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாதுன்னு சொல்லி ஆளுநரையே ராக்கிங் பண்ணி ஓட விட்டோம்.😭
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
தவறிய முதல் வாக்குறுதி!
“மாதந்தோறும் 200 யூனிட் இலவசம்” என்று சொல்லிவிட்டு, இப்போது “2 மாதங்களுக்கு 200 யூனிட்” என்றும், அதுவும் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்பதும் மோசடி!
இது இலவச மின்சாரம் அல்ல, மறைமுக மின் கட்டண உயர்வு
@TVKVijayHQ#TVKFails#Tamilnadu
தமிழ்நாட்டின் கடன் நிலை பிப்ரவரியிலேயே தெரிந்தது. அதற்குப் பிறகும் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றவர்கள், இன்று மீண்டும் “கடன் பிரச்சனை” என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தெரிந்த நிலையை காரணமாக காட்டி வாக்குறுதிகளை மறக்கக் கூடாது. @TVKVijayHQ
60 ஆண்டுகள் முன்னேற்றம்…
அதை தக்க வைக்குமா?
அல்லது புதிய பாதை காட்டுமா?
மாற்றத்தை தேர்ந்தெடுத்த மக்களின் தீர்ப்புக்கு மரியாதை... 🙏
வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் &
@TVKVijayHQ அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
5 ஆண்டுகள்- பதில் சொல்லும் காலம் 🔥
#TVKVijay