அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் முடிவடைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கலங்க செய்துவிட்டது. மிகுந்த மன அழுத்தத்துடன் இந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.
திராவிடர் கழக காலத்தில் இருந்து பெரியார் கொள்கையை தனது வாழ்க்கையாக சுமந்து கொண்டு பயணித்த தீவிர பெரியார் தொண்டர்.
என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் உறவு கொண்டவர்; மாதத்திற்கு இருமுறையாவது அலைபேசியில் அழைத்து என்னிடம் பேசுவது அவரது வழக்கம்; அந்த உரையாடல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்;
அத்தனையும் இயக்கத்தில் பழைய வரலாறுகள் தொடர்புடையதாகவே இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு இயக்கத்தில் எனக்கு கிடைத்த ஒரே தோழர் அவராகவே இருந்தார்.
அவரோடு உரையாடி இயக்க வரலாறுகளை மலரும் நினைவுகளாக பேசுவதில் மிகுந்த மன ஆறுதலும் உற்சாகமும் இருவருக்குமே கிடைக்கும். இயக்கத்தின் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரோடு நெருக்கமாக பழகியவர். மன்னார்குடியில் பெரியார் நடத்திய தமிழ்நாடு விடுதலை மாநாட்டில் அவர் பங்கேற்றதை நினைவு கூறுவார். அந்த மாநாட்டில் நானும் இளைஞனாக பங்கேற்றேன். கடந்த கால பெரியார் இயக்க வரலாறுகளோடு
பயணித்த பெருமைமிக்க பெரியார் தொண்டர்களின் மிச்சமாக அவர் ஒருவர் தான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருந்து வந்தார்.
பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தில் இந்த தீவிர பெரியாரியவாதி தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களோடு தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். அண்மையில் அவரது மகனின் அகால மரணம் மிகப் பெரும் துயரம் அதில் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளானார். ஆனாலும் அதிலிருந்து மீண்டு வந்து வருவதற்கு கொள்கை உணர்வுகளே ஆறுதல்களை வழங்கியது.
பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்தபோது மேட்டுப்பாளையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார்.
கொள்கை எதிரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றினார். இந்து முன்னணிகளிலின் சலசலப்புகளை எதிர்கொண்டு மேட்டுப்பாளையத்தில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தை
இப்போதும் மறக்க முடியாது!
மேட்டுப்பாளையத்தில் அனைத்து கட்சி தோழர்களாலும் மதிக்கப்பட்டவர். அவருக்கான நட்பு வட்டாரம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். நிறைய நூல்களைப் படிப்பார் படித்துக் கொண்டிருக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பகிர்ந்து கொள்வார்.
சேலத்தில் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொண்டார். எனக்கு இப்போது வயது 80; அவரது வயது 83. மாணவப் பருவத்தில் இருந்து இயக்க உணர்வோடு நான் வளர்ந்தவன். அந்த உணர்வுகளையும் வரலாறுகளையும் எனது வயதை ஒத்த அவரோடு பகிர்ந்து கொள்வதிலும் உரையாடுவதிலும் உற்சாகமும் மன அமைதியும் கிடைத்தது.
இனி அந்த உணர்வுகள் இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறேன்
எனது புகழ் வணக்கத்தை கண்ணீரோடு அர்ப்பணிக்கிறேன்!
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
17.05.2026
@dvkcoimbatore
பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை.
ஆனால் இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ் நாட்டிற்கு இது புதிது.
அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது என ஏன் சொல்கிறோம் என்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த திருமதி.ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக் குள்ளானது.
IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம்.
அமைச்சரின் போலி கல்வித்தகுதி??
என்னடா இது ஒன்னுமே இல்லை என்று நினைக்காதீர்கள்..இது தான் நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிப்ளோமா வாங்கிய institute. Indian institute of management and technology chennai. இந்த கல்விநிலையத்தின் website போனால் இதுக்கு UGC, AICTE குறைந்தபட்சம் TNDOTE அங்கீகாரம் கூட இல்லாத ஒரு கல்வி நிறுவனம்.அதாவது காசு கொடுத்தா டிகிரி கொடுக்குற ஒரு போலி நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் டிப்ளோமா வாங்கி இருக்கார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அதுவும் 7 வருஷம் கழிச்சு +2 முடிச்சு. காரணம் பொறியியல் அரியர் என்று தகவல்.
இப்படி போலி நிறுவனத்தில் படித்தவர் தான் இன்றைய கல்வித்துறை அமைச்சர். விளங்கும் டா தமிழ்நாடு..
இதுல எதுவுமே படிக்காமல் டிகிரி வாங்கலாம் நீங்க..
பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பேருந்துகளில் கேமராவுடன் கூடிய அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் கடந்த 2022 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தபட்டு விட்டன.
பேனிக் பட்டனை அழுத்தியதும், MTC தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் வழியாக கண்காணித்து, காவல்துறை உதவி எண்ணுக்கு (100) எச்சரிக்கை அனுப்பப்படும்.
இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் தான் அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் பேருந்துகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது போன்று தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/2zTbUta8dq
ராஜ்மோகன் டிப்ளமோ பெற்ற கல்வி நிறுவனத்தின் வலைத்தளம், facebook page மற்றும் Google Maps location இதோ
https://t.co/KS20qPllwh
https://t.co/SmGwQuQqz7
Location link https://t.co/CYshcT9NUG
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் Indian Institute of Management and Technology என்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றதாக தனது affidavit-இல் கூறியுள்ளார். அந்த கல்வி நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதாகவே தெரியவில்லை!
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
ராஜ்மோகனை அறிமுகப் படுத்துபவர் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாக கூறுகிறார். ராஜ்மோகனும் ஆம் என்று தலையாட்டுகிறார். ஆனால் ராஜ்மோகனின் affidavit-இல் அவர் அந்த கல்லூரியில் படித்ததாக குறிப்பிடவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கல்வித் தகுதியே மர்மமாக இருக்கிறது!
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
ரூட் மாபியாவை வெச்சு, SM influencers எல்லோரையும் ரீல்ஸ் போட வெச்சு ஆட்சியை புடிச்சாச்சு..
~அடுத்தது என்ன
இப்போ செலவு மிச்சம்....இனி நம்ம அரசு உயர் அதிகாரிகளே, ரீல்ஸ் போடுவாங்க. 🤗
மேடம் தான் ஈரோடு RDO வாம்..
BGM சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👏👏
#தற்குறிகள்