மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, இசுலாமிய ஆயுள் சிறைவாசிகள் 22 பேரின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
தமிழ்நாடு அரசின் விடுப்பு விதிகள் [G.O. Ms. No.82 - Home (Prison-V) - Framing of Tamil Nadu Prisons - Release on Furlough Rules, 2026] மற்றும் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, விதி எண். 40-ன்படியும், 'சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்விடுதலை விவகாரத்தில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் அவர்கள் கட்டுப்பட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் 02.04.2026 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகளின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேற்று (17.06.26) சந்தித்து எமது சமூக நீதித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தேன்.
- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று ஆணவப்படுகொலையைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்
- அரசுப் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதியை நிலை நாட்ட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று அரசுப் பணியின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டினை பின்பற்றுவது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 16(4-A)யினை நடைமுறைப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
- பஞ்சமி நிலங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு பஞ்சமி நிலஉடைமை சட்டம் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்
- ஆதிதிராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேவையான தரவுகளை வழங்குவதற்கு ஆதிதிராவிடர் மக்களின் சமுக பொருளாதார கணக்கெடுப்பினை (Social Economic Census) நடத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம், 2024 கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தலைவராக கொண்டு மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்
- வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள வீடுகட்டி தரும் திட்டங்களின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 5000 கோடி செலவில் 1 இலட்சம் வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் உட்கட்டமைப்பு பணிகளை முழுமையாக நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றம் செய்வதற்கு கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்
- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து மாணாக்கருக்கும் உதவித்தொகை வழங்கிடும் வகையில் இத்திட்டத்திற்கு நிதி உயர்த்தி வழங்க வேண்டும்
- தகுதியுள்ள நிலமற்ற ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நிதிஒதுக்கீடு வழங்க வேண்டும்
மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொல்குடி திட்டம், தாட்கோ கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டம், பழங்குடியின மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகை வேறுபாட்டினை சரிசெய்தல், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டம் ஆகியவை தொடர்புடைய கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
எமது கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் எமது துறை சார்ந்த செயல்பாடுகளை குறிப்பிட்டு வாழ்த்தினார்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
@CMOTamilnadu
சாலை வசதி இல்ல, பஸ் வசதி இல்ல,தண்ணீர் வசதி இல்ல நடந்து போறதால ஸ்கூலுக்கு லேட் ஆகுது, உடல் சோர்வு ஆகுறதுனால பாடத்தை சரியா கவனிக்க முடியல. சாலை வசதி வேண்டி பள்ளி மாணவிகள் கோரிக்கை
@imrajmohan@TamilanParthib1
அடிப்படை வசதியே செய்யாம எதுக்குடா கடன் வாங்குன😡
மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை மீட்பு குழுவினர் நேற்று (17.06.26) தலைமை செயலகத்தில் சந்தித்து, மாஞ்சோலை மக்களின் மறுவாழ்வு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உரையாடினர்.
இச்சந்திப்பில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் திருமதி. அமுதா, திருமதி. ஸ்டெல்லா, திரு. ஸ்டாலின், திரு. ஜான்சன் சாந்தகுமார், திரு. விமல், திரு. சாமுவேல் அற்புதராஜ், வழக்கறிஞர் ராபர்ட் சந்திர குமார், வழக்கறிஞர் C.J.ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் இ.ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
நிதி நெருக்கடி காரணமாக முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுத்திருக்கோம் விரைவில் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்று முதல்வர் கூறினார் - @thirumaofficial
விவசாயிகளே கவலை வேண்டாம் ❤️
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி காட்டுமன்னார்கோவில் சாலை அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் மீது முறிந்து விழ காத்திருக்கும் பழமையான புளியமரம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
@TANGEDCO_Offcl@cudcollector
L decision by the Current Government..
Yes.. DMKs Clownery pushed it 70 days.
Now it's been 30 more days & HC has ordered.
New Government should have talks with his family & end the issue.
HC already ensured Strict punishment for the Guilty Police.
@MaduraiSBala@0092c4017d97413@actorvijay எடப்பாடி கூட நீங்க எப்படி இணைவு முறியற்சி மேற்கொள்ள எவ்வளவு rate ப்ரோ பேசுனீங்க ? அதை முதலில் சொல்லிட்டு அடுத்து எங்களை கேள்வி கேக்கலாம்
@Kalaignarnews விஜய் மக்கள் இயக்கம் என்று ஒண்ணு இருக்கு அது 15 வருடமா சொந்த காசை போட்டு நல திட்ட உதவிகள் பண்ணிட்டு இருக்கு இன்னைக்கு வரைக்கும் ஆட்சிக்கு வர அதோட பங்கு அதிகம் வெறும் ஊடகம் வைத்து எல்லாம் ஆட்சி பிடிக்க முடியும் என்று மூளை இல்லாதவன் பேசலாம் நீங்க பேசலாமா தலைவரே 😭😭😭😭
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
நீங்க 2020 ல அதிமுக அரசை கேள்வி கேட்ட மாதிரி தான உங்க ஊழலை இப்போதுள்ள அரசு கேள்வி கேட்டிருக்காங்க
உங்களுக்கு வந்தா ரத்தம்
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி யா
இதுல காமெடி என்ன னா அன்னைக்கு அதிமுக நிதி அமைச்சரா இருந்தவரு இன்னைக்கு உங்க கட்சி MLA யாருனு தெரியுதுங்களா ஸ்டாலின் சார்
ரெண்டு வருடமா நீங்க விஜய் மேல என்ன பாசம் பொழிஞ்சிட்டு இருந்தீங்களா ? இப்போ வரைக்கும் Abuse பண்ணிட்டு இருக்காங்க வாட போடா என்று இரண்டாம் கட்ட தலைவர் வரைக்கும் பெரிய யோக்கியன் மாதிரி பேசிட்டு திரிய கூடாது காசுக்கு பொறுக்கி திங்கிற கூடாரமா மாறிட்டு இருக்கு திமுக கூட்டம் 🤡🤡🤡
நீ விதவிதமா டோபா வச்சுக்கிட்டு ஊர் மேல போய் சைக்கிள் ஓட்டுன , கையில செங்கோல் மாதிரி ஒரு குச்சியை வச்சிக்கிட்டு வாக்கிங் போன, ஊட்டில போய் புட்பால் விளையாண்டு வெட்டி விளம்பரம் பண்ணியே அதெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு எப்படி இருந்துருக்கும்......🫠
அப்பனுக்கு சோசியல் மீடியா மேல குத்தும் சொல்றது , மகனுக்கு சோபா மேல பழிய போடுறது, வேற எதுவும் பேசி அரசியல் செய்ய வரமாட்டேங்குது....
எப்படிப்பட்ட தத்திகளாய் இருக்கானுங்க 😁😁
சரி அதெல்லாம் இருக்கட்டும் என்ன ஒப்பாரி வைக்கும் ஒரு பக்கம் இழுக்குது, ஏதாவது விசேஷமா..... 😜