முதல்வர் சி. ஜோசப் விஜய் ஏன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையை தன்னிடம் வைத்துக்கொண்டார்?
அண்மைய ஆலோசனைக் கூட்டங்களில் கிடைத்த தகவலின்படி, குடிமை நிர்வாகம் (Civic Governance) மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய், அந்தத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையை தன்னிடமே வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிக நெருக்கமாக தொடர்புடையவை குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, சாலை மற்றும் உள்ளாட்சி சேவைகள் என்பதால், இந்தத் துறைக்கு நேரடியாக கவனம் செலுத்த விரும்புவதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை நகரில் வளர்ந்ததன் காரணமாக, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு ஆகியவற்றை முழுமையாக சுத்தப்படுத்தி மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது நீண்டகால பார்வையையும் அவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், சிறிய உள்ளாட்சி அமைப்புகள் வரை எந்த மட்டத்திலும் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறக் கூடாது என வலியுறுத்திய முதல்வர், விதிமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவையான இடமாற்றங்களைச் செய்யவும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Why chief minister C Joseph Vijay chose the MAWS department which no CM in the past had held?
Sources part of recent meetings said the CM informed he was passionate about civic governance personally and wanted to bring a change in that, resulting in him taking the MAWS dept for himself. He said civic issues were the most connected to people on a daily basis and hence, he wanted direct attention on that. Further, he had also told that being brought up in Chennai, he had a vision to see Cooum, Buckingham Canal and Adyar River cleaned fully. He had informed officials to ensure there was no bribery in any of the lower most levels too, in any small local body, and gave officials a free power to transfer or take action on officials who may cause irregularities at any level.
கடந்த வாரம் தவெக மாவட்ட செயலாளர் அப்புனுவை பேட்டி எடுப்பதற்காக தி.நகர் சென்றிருந்தேன், மதிய நேரம் என்பதால் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்,அதனால் உடன் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் நானும் பேட்டி எடுக்க சிறிது நேரம் காத்திருந்தோம். வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு உள்ளே வந்தவரிடம்,ஒரு சில பெண்கள் ஏதோ உதவி கேட்பது போல் தெரிந்தது, தூரத்தில் இருந்து அதை பார்த்துவிட்டு அருகில் சென்றோம். தனியார் பள்ளியில் படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்த உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்ட அப்புனு அலுவலகத்தில் இருந்த உதவியாளர் ஒருவரை அழைத்து அவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி தரச்சொல்லி பெற்றுகொண்டு அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என்னுடன் வந்த தம்பி, மனுவெல்லாம் வாங்குறாங்களே ஹெல்ப் பண்ணுவாங்களா ணா என்று சந்தேகத்துடன் கேட்டார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மெல்லிய சிரிப்போடு பேட்டி எடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் எனக்கும் அதே சந்தேகம் இருந்தது.ஆனால் அது தவறு என்று இந்த புகைப்படத்தை பார்த்த பின் உணர்ந்தேன். அன்று உதவி கேட்டு வந்த பெண்கள் இன்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் உதவி பெறுவதை இந்த படங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். என்னை படிக்க வைக்க அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, ஏதோ வீட்டில் உள்ள ஒரு குழந்தையின் படிப்பிற்கு ஏதோ ஒரு வகையில் கிடைத்த உதவி நிம்மதியளிக்கிறது.
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி,
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N .ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன்
தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்த பிரியா பெருமாள்சாமி தம்பதியினரின் இரண்டாவது பெண்குழந்தைக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சைக்கு பண உதவி தேவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி சந்தோஷ் அவர்களிடம் உதவி கோரியிருந்தார்.. MLA அவர்கள் தனது முதல்மாத ஊதியத்தை இறைபணிக்காக செலவிட இருந்த நேரத்தில் இந்த கோரிக்கை மனு வந்ததால் சற்றும் தாமதிக்காமல் முதல்மாத ஊதியத்தை குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்காக முழுவதுமாக செலுத்தினார். குழந்தைக்கு சிகிச்சை நடைபெறுகிறது. குழந்தையின் பெற்றோர்கள் இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என நன்றி தெரிவித்தனர்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி.கனிமொழி சந்தோஷ் MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
@S_A_T_H_I_S_H_S@SHarish3553 இப்போ இல்லையாம் போன வெள்ளிக்கிழமை நடந்ததாம் அதுக்கு இப்ப கண்டனம் தெரிவிக்கிறாராம் ஆடு
சிங்கப்பெண் அதிரடிப்படை மக்களிடையே வரவேற்பு பெற கூடாதாம் அதுக்கு மடைமாற்றம் செய்கிறாராம்
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த 5 குடும்பங்கள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அளித்த மனுக்களை பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கல்வி உதவித்தொகை வழங்கினார்.