இது அதுல்ல?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி MLA-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அங்கீகரிக்கின்றார்.
Sounds familiar?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து, தூயசக்தி த.வெ.க. நடத்திய ஜனநாயகக் கேலிக்கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை.
இது மேற்கு வங்கத்தில் அவர்களது "கொள்கை எதிரி" பா.ஜ.க. செய்த செயல். தமிழ்நாட்டில் த.வெ.க. ஒருபடி மேலே சென்று MLA-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர்.
பா.ஜ.க. - த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப்.
மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் மண்டியிடத் தயார் என்ற சிக்னலை டெல்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு.
மொத்தத்தில், ஜனநாயக - மதச்சார்பற்ற - மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியைப் பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்.
#TVKFails
கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்துள்ள சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் பெற்று சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@arivalayam@DMK_Chennai@ThamizhachiTh
ஆடுதுறை, கிருஷ்ணகோயில் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63) இவரது மகன்கள் பாலசுப்பிரமணியன்(38), பிரபாகரன்(32). இவர்கள் ஆடுதுறை ரயில் நிலைய சாலையில், பாத்திரம், பர்னிச்சர்கள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்களை கடந்த 27 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், அந்த இடத்திற்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மற்றும் சிலர், தந்தை மகன்களை தாக்கி, அவர்கள் வைத்திருந்த ரூ. 68,700 ரொக்கத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையறிந்த கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான சாக்கோட்டை க.அன்பழகன், அவர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகன்களை பார்வையிட்டு, ஆறுதல் கூறி மருத்துவரிடம் தக்க சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.
அவருடன், துணை மேயர் சு.ப.தமிழழகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், மருத்துவ நிலைய அலுவலர் பிரபாகரன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் கமரூல் ஜமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி, கூத்தாநல்லூர் நகராட்சி, பெரிய தெரு, சின்னப்பள்ளி தெரு பகுதியில் எனக்கு வாக்கு அளித்து வெற்றி பெறசெய்த அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களுக்கு நேரில் சென்று நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்.
உடன் நகர கழக செயலாளர் திரு.S.V பக்கிரிசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@DMKTiruvarur
#DMK4TN
#திருவாரூர்_மாவட்ட_திமுக
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுடன் திருவாரூர் நகராட்சியில் அமைந்துள்ள
மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் தலைவர் #கலைஞர் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்
இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் திரு.வாரை.எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@DMK_Updates@dmk_en@DMKTiruvarur@Dmk_Thiruvarur
#வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #DMK4womens
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுடன்
திருவாரூர், முத்தமிழறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள #தந்தை_பெரியார் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்
இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் திரு.வாரை.எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@DMK_Updates@dmk_en@DMKTiruvarur@Dmk_Thiruvarur
#வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #DMK4womens