நைட் ரேஸ் அட்ராஸிட்டிஸ்
பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு இரவு 9 மணி அளவில் தங்கையின் வீட்டுக்கு எதிரே இருக்கும் வீட்டுக்காரருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த மெயின் ரோடை அடுத்து ஒரு குறுக்குத் தெரு உண்டு – அது இந்த மெயின் ரோட்டுடன் இணையும்
_____|_____ இது போல்
எதிர் வீட்டுக்காரருக்கு வயது 60. சமீபத்தில் ரிடையர் ஆனவர். கையில் பேரன். பையன் State Government-ல் கொஞ்சம் Powerful Post.
நான் அந்தக் குழந்தையை "வா " என்று கூப்பிட்டேன். ஆச்சரியப்படும் வகையில் என்னிடம் வந்தது
இப்போது நினைத்தால், அந்தக் குழந்தை என்னைத் தேடி வரவில்லை... யமனைத் தவிர்க்க Safe Zone-க்கு வந்திருக்கிறது போல! என்று நினைக்கிறேன்
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்தக் குறுக்குத் தெருவில் இருந்து மூன்று பைக்குகள் பாய்ந்து வந்தன.
சும்மா வரவில்லை... "Indian Grand Prix – Street Version" நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன் இன்னொருவனை முந்த வேண்டும் என்ற வெறியில், Physics, Chemistry, Balance எல்லாவற்றையும் மறந்துவிட்டான்.
அடுத்த நொடி...டமால்!!! டிரான்ஸ்பார்மர் வெடித்ததா என்று நினைக்கும் அளவுக்கு சத்தம்.
அந்த பைக் நேராக அந்த வீட்டுக்காரர் மீது மோதியது. அவர் நான்கு அடி தூரம் பறந்து விழுந்தார்.
பைக் ஓட்டிய பையனும் பக்கத்தில் இருந்த சலூன் போர்டில் மோதிக் கீழே விழுந்தான்.
அவனைப் பார்த்தால், இன்னும் பள்ளியில் "Leave Letter" எழுதிக் கொண்டிருக்கும் வயது. கால் கூட தரையில் சரியாக எட்டவில்லை. ஆனால் ரேஸ் மட்டும் 1000cc Bike Level! இப்போதுள்ள பல பையன்களைப் போலவே சுற்றி வர முடி இல்லாது, நட்டக் குத்தலான ஹேர் ஸ்டைல்
சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது மகன் வெளியே வந்தார்.
நிலையைப் பார்த்தவுடன் முகம்:
😳 ➜ 😨 ➜ 😡 என்று மூன்று ஸ்டேஜ்க்கு மாறிவிட்டது.
உடனே அந்தப் பையனைப் பிடித்துக் கொண்டார். போலீஸ் நண்பருக்கு போன். அவர்கள் தெரு முனையில் பிள்ளையாருக்கு கொசுக்கடியில் காவல் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரரைக் கூப்பிட்டுச் சொல்ல, 10 நிமிடத்தில் போலீஸ் ஸ்பாட்டில்.
லைசன்ஸ் இல்லை. வண்டிக்கு இன்ஷூரன்ஸ்ஸூம் இல்லை. கூட வந்தவர்கள் காணாமல் போனார்கள்
பையன் தனது அப்பாவை அழைத்தான். அவர் வந்தார். வந்து "மன்னிச்சுடுங்க சார் – ஏதோ நடந்திடுச்சு" என்று சொன்னால் கதையே முடிந்திருக்கும்.
ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிதா?
அவர் போலீஸிடம்: "சார்... பசங்க ஏதோ பண்ணிட்டாங்க... இதெல்லாம் எங்க ஏரியாவுல தினமும் நடக்குது... அவர் என்ன செத்தா போயிட்டார்?" என்று அலட்சியமாக சொன்னார்.
அடுத்த அரை விநாடியில்...வீட்டுக்குப் போக முடியாமல் (எரிச்சலில்) பிள்ளையாருக்கு காவல் இருந்த அந்தப் போலீஸ்காரர்
விட்டார் பொளேர்!!! என்ற ஒரு அறையை.
அந்த அறையின் Decibel Levelஐ மட்டும் தனியாக அளக்க வேண்டும்.
அறை வாங்கியவர் உடனே: "நான் யார் தெரியுமா?" என்று ஒரு கட்சியின் வட்டச் செயலாளர்/சதுரச் செயலாளர் என்ற வகையில் ஒரு முக்கியப் பிரமுகர் Mode-க்கு மாறினார்.
அதைக் கேட்ட போலீஸ்காரரின் BP: 📈📈📈
அடுத்த நொடி... பொளேர் Part-2
இரண்டாவது அறை. இது Dolby Atmos Version.
போலீஸ்காரர் கத்தினார்: "கையில குழந்தையோட இருந்திருந்தா என்னாயிருக்கும்?". பிறகு அந்த ரோட்டில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்து, அந்த ஆளை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
கேஸ் போட்டார்களா? விட்டார்களா? என்று எனக்குத் தெரியாது.
எனக்கு அந்த இரண்டு பொளேர்கள் போதுமானதாக இருந்தன
இதற்கிடையில் நான் யோசித்தது வேறு. அந்தக் குழந்தை என்னிடம் வராமல் இருந்திருந்தால்... அல்லது பைக் கொஞ்சம் இடப்பக்கம் திரும்பியிருந்தால்... ஐயோ!!! என் கையில் குழந்தை
அடிபட்டவரை அருகிலிருந்த Hospital-க்கு கொண்டு போனார்கள்.
மறுநாள் காலை கோவிலில் இருந்து திரும்பும்போது பார்த்தேன்.
வாசலில் நின்றிருந்தார். முதுகு முழுக்க Plaster. ஆனால் முகத்தில் வலியுடன் கூடிய ஒரு சிரிப்பு.
அவரைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது:
"மனுஷன் Accident-ல அடிபட்டிருக்கார்... ஆனா நேத்து அந்த நபருக்கு போலீஸ் கொடுத்த இரண்டு பொளேர்களை நினைச்சு இன்னும் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டு இருக்கார் போல!" 😄🏍️
Bottom of Form
ஒரு எலி உருவாக்கிய ஹார்ட் அட்டாக்
இப்போதிருக்கும் டிஜிட்டல் உலகத்தில் ஒரு அரை மணி நேரம் GPay, PhonePe, PayTM , இவ்வளவு ஏன் ஒரு Face Book அல்லது WhatsApp/Twitter வேலை செய்யலேன்னா, சேனல்களில் “நாடு முழுவதும் அதிர்ச்சி!”, “மக்கள் அவதி!”, என்று Breaking News ஓடும்.
இவ்வளவு பெரிய UPI சிஸ்டத்தின் பின்னால் எவ்வளவு infrastructure இருக்கவேண்டும் : Servers, Connectivity, UPS, Generator, Disaster Recovery Centre, Redundancy, Failover, Backup, Backup-க்கு Backup... என்று பட்டியல் நீளும்.
நான் சந்தித்த பிரச்சனை 15 வருடத்திற்கு முந்தியது - வங்கிகள் கணினி மயம் ஆகி ஓரளவு stabilise ஆன காலம்.
நான் மும்பை நரிமன் பாயிண்டில் இருந்த Bankன் Treasur-ல் Computer Section Incharge ஆக சேர்ந்திருந்தேன். மும்பையில் வேலை பார்த்தும் Electric Trainஐ தொடாத மிகச் சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன் – I was in Dadar East – அருமையான பஸ் வசதி இருந்தது எனக்கு
ஆபீஸில் சுமார் 15 சர்வர்கள். எல்லாமே கிரிட்டிகல் - RBI இணைப்பு, Treasury Operations, RTGS, NEFT என்று, ஒன்று படுத்தால் கூட சில மணி நேரத்தில் கோடிகளில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சர்வர்கள் – அவற்றின் Parallel Servers பெங்களூரில் Data Centre-லிருந்தன.
Server Room-க்குள் எப்போதும் Arctic Region மாதிரி குளிர் இருக்கும். 10 நிமிடத்துக்கு மேல் நாம் நின்றால், "சர்வரை காப்பாற்ற வந்தவன், ICU-க்குப் போனான்" என்ற நிலையில் குளிர் இருக்கும் - அந்த அளவுக்கு A/C முக்கியம். குளிர் ஒரு டெம்பரேச்சருக்கு மேலே கீழே போனால் Serverகள் தானாகவே Shutdown ஆகிவிடும்.
நன்றாகத் தான் வண்டி ஓடிக் கொண்டிருந்தது – சனிக்கிழமை அரை நாள் அப்போது. ஞாயிறு லீவ்
ஆனால் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும், கண்டிப்பாக ஒரு நபர் வந்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்ல வேண்டும் – அதை ரொட்டேஷனில் வைத்திருந்தோம் – Since I was staying nearby, I used to come most of the times. வந்து ஒரு அரை மணி நேரம் இருந்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, வீட்டுக்குப் போகலாம் – Pending Workஐப் பார்க்க மனம் இருந்தால் பார்க்கலாம்
அது போன்ற ஒரு ஞாயிற்றுக்கிழமையில், நான் 9 மணிக்குப் ரொம்ப கேஷுவலாக ஆஃபீஸ் புறப்பட்டேன் – திரும்ப வந்து எங்கெல்லாம் அன்று போகவேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது - ஆனால் நடந்ததோ வேறு
ஆஃபீஸ் வந்து, கதவைத் திறந்து உள்ளே வந்து பார்த்தால், சர்வர் ரூமில் இருந்து வரும் ''கர்'' என்ற மிஷின் சத்தங்கள் ஏதும் இல்லை – அந்த ஏரியாவே படு நிசப்தம் – சர்வர் ரூமைத் திறந்தால் 60 டிகிரி வெய்யிலில் நின்றால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு சூழல் – நிமிடத்தில் எனக்கு வியர்வை ஊற்று – என்னவென்று பார்த்தபோது, A/Cக்கு வரும் பைப்பை வெளியில் பெரிய எலி ஒன்று கடித்ததில் Short Circuit ஆகி ஸ்பிளிட் ஏசி, Window ஏசி என்று எல்லா ஏர் கண்டிஷனர்களும் அவுட் – நரிமன் பாயிண்டில் பெருச்சாளிகள் ஜாஸ்தி உண்டு
உள்ளே தாங்க முடியாத ஹீட் ஜெனரேட் ஆனதில், எல்லா சர்வர்களும் நாங்கள் ஜுட் என்று படுத்து விட்டன – சர்வர் ரூம் கதவுகளை நன்கு திறந்து ஒரு பெடஸ்டல் ஃபேனை வெளியில் இருந்து ஓடவிட்டேன்
படு நிசப்தம் – மணி காலை 10 – உள்ளே இருந்த சூட்டை விட, என் உடம்பினுள் படு சூடு பரவியிருந்தது
நரிமன் பாயிண்டில் உள்ள பெரிய பிளஸ் பாயிண்ட் எல்லா வெண்டர்களும் அங்கே ஒரு ஆஃபிஸ் வைத்து, ஒரளவு ஆட்களையும் வைத்திருப்பார்கள் – அதைவிட பெரிய ப்ளஸ் பாயிண்ட் கரண்ட் கட் என்பது அறவே கிடையாது
நான் ஏசி ஆட்களைக் கூப்பிட அவர்கள் 15 நிமிடத்தில் ஆஜர் – வந்த 2 பசங்களும் தமிழ் வேற – சீரியஸ்னெஸ்ஸைச் சொன்னேன் – உடனே வேலையை ஆரம்பித்தார்கள் – 1 மணி நேரத்தில் சரி செய்து விட்டார்கள் - இதனிடையே நான் Onsite Hardware Engineerஐ வரச் சொன்னதில் அவனும் (27 வயது) 30 நிமிடத்தில் ஆஜர்
Air Conditioners சரியாகி விட்டபடியால், பிரச்சனை பூதாகாரமாக ஆகாது என்ற எண்ணத்தில் ஒவ்வொரு Nodeஐயும் ஆன் பண்ண 15ல் 8 சர்வர்கள் உடனே பழைய நிலைக்கு வந்தன
மீதமிருந்த 7 தான் படு முக்கியமானவை. RTGS. NEFT. Treasury. அனைத்து VIPகளும் கோமாவில். Recovery Software, Diagnostics, Restart, முக்கியமாக Prayer, மீண்டும் Restart. என்னென்னவோ செய்தோம். பாதி வரை Boot ஆகி திரும்ப விழுந்தன.
எனக்குள் இருந்த பதட்டத்தைச் சொல்லி மாளாது – வயிற்றுக்குள் பயங்கர படபடப்பு – நாளை பரீட்சை எனும்போது, முக்கியமானவற்றை நாம் படிக்கவில்லை என்றால் வருமே ஒரு படபடப்பு, vomiting sensation – அது போல
இவை சரியாகாவிட்டால், மறுநாள் பெங்களூரில் உள்ள சர்வர்களின் துணையில் வேலை நடக்க வேண்டும் – அது ஒரு பெரிய பிராஸஸ் – எனினும், பெங்களூரைக் கூப்பிட்டு, திங்கட்கிழமையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு, இங்கு தேவையான Recovery Softwareஐ ரன் பண்ணினோம்
ஓரளவு பலன் கிடைத்தாலும் முழுப் பலன் கிடைக்கவில்லை – இதற்குள் மணி 3 ஆக பதட்டம் ஜாஸ்தி ஆனது – நாளைய நாளை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற திகில் – அது நாள் வரை பெங்களூரில் உள்ள சர்வரகள் மூலம் மும்பை வேலைகளை நாங்கள் பார்த்ததேயில்லை – அது எவ்வளவு தூரம் சரியாக வரும் என்றும் தெரியாது – இதற்குள் அந்தக் கம்பெனியில் இருந்து சீனியர் ஹார்ட்வேர் இஞ்சினியர் இருவர் வந்தனர் – அவர்களும் என்னென்னவோ செய்தார்கள் – சரியாகவில்லை – மணி 6
அந்த நேரம், அந்த 27 வயது Hardware Engineer அவனுக்குத் தெரிந்த ஒரு சீனியரைக் கூப்பிட்டான். அந்த நபர் தான் இங்குள்ள சர்வர்களை 5 வருடங்களுக்கு முன் இன்ஸ்டால் பண்ணியவர். எங்களுடைய போதாத நேரம் – அவர் ஹைதராபாத்திற்குப் போக ஒரு டிரையினில் இருந்தார் – இருந்தபோதிலும் அவர் அங்கிருந்து ‘’நீங்கள் சொல்லும் சர்வர்கள் High End. Abruptஆக க்ளோஸ் ஆகும் போது, அதன் பின்னால் ஒரு ஸ்விட்ச் கீழே போயிருக்கும் – அதை மேலிழுத்துவிட்டு, சர்வரை ஆன் பண்ணுங்கள் – இப்போதிருக்கும் புதிய மாடல்களில் இந்தப் பிரச்சனை இல்லை’’ என்றார்
நான் எல்லாக் கடவுள்களையும் ஒரு முறை வேண்டிக் கொண்டேன்
அதை மேலே தூக்கி Server On பண்ணினோம். அதிசயம். ஒன்றன் பின் ஒன்றாக எல்லா சர்வர்களும் உயிர்த்தெழுந்தன.
RTGS வந்தது.
NEFT வந்தது.
Treasury வந்தது.
எங்களுக்கும் உயிர் வந்தது
இந்தப் பையனுக்கு எப்படி அவர் ஞாபகம் வந்தது என்பது தான் எனக்கான ஆச்சரியம் – அவர் மட்டும் சொல்லாதிருந்தால், நாங்கள் என்னென்னவோ செய்து கொண்டிருந்திருப்போம் – இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரமாயிருக்குமோ – Login செய்து எல்லாம் கனெக்ட் ஆகிறதா என்று பார்த்தோம் – God was Great!!!!
அன்று நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம்: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள Infrastructure கூட சில நேரங்களில் இது போன்ற எதிர்பாராத காரணங்களால் முடங்கிப் போகலாம் .
இரவு 8 மணிக்கு பிரச்சனை தீர்ந்தது. I was totally exhausted - நானும் அந்த Hardware Engineer-ம் பக்கத்து ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டோம்.
அதற்குப் பிறகு நான் பிடிவாதமாக ஒரு விஷயத்தை நடை முறைப்படுத்தினேன். பெங்களூரிலிருக்கும் Backup Servers மூலமாகவே ஒரு நாள் இங்கு வேலை செய்ய வேண்டும் என்று. முதலில் ஏகப்பட்ட எதிர்ப்பு. மார்க்கெட்டுக்கு விடுமுறையான ஒரு சனிக்கிழமையில் ஆரம்பித்தோம். சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தன. பிறகு அது Routine ஆனது. பயம் போனது.
அன்றைய சம்பவம் ஒரு முக்கிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது:
மிஷின்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி... Backup அவசியம். "இவரைத் தவிர யாராலும் முடியாது" அல்லது "இந்த சிஸ்டம் இல்லாமல் எதுவும் ஓடாது" என்ற நிலை உருவானால், அது திறமை அல்ல... அது வருங்கால பிரச்சனைக்கான Advance Booking!
RAID – SPECIAL NIGHT DUTY
ரெய்ட் என்ற அஜய் தேவ்கன் நடித்தபடம் படம் Zee Thiraiயில் அடிக்கடிப் போடுவான்
அதைப் பார்த்தபோது, என்னுடைய டெல்லி ரெய்ட் அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது
அந்த நேரத்தில் (1996) வங்கிகளுக்கு சனிக்கிழமை அரை நாள். ஞாயிறு விடுமுறை
ஒரு அருமையான சனிக்கிழமையன்று, நான், ஷஷாங் மிஷ்ரா, மற்றும் Mr. Rao மூன்று பேரும் சுமார் 3.30 மணி அளவில் வீட்டுக்குப் போகும் முன்பு ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்
அப்போது கதவைத் திறந்து கொண்டு, யூனிபார்மில் ஒருவர் – ஒரு கவரைக் கொடுத்தார் Mr.Raoவிடம் – படித்தால் ‘’இன்று இரவு ஒரு ரெய்ட் இருக்கிறது – உங்கள் வங்கியில் இருந்து 2 officerகள் witnessக்கு வரவேண்டும்’’ என்று லெட்டர் – Requestலாம் கிடையாது – ஆர்டர் தான்
Mr. Rao உடனே என்னையும் ஷஷாங்கையும் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம்: "என் வயசுல இந்த மாதிரி நைட் டியூட்டிலாம் முடியாது... நீங்க போயிட்டு வாங்க!"
எனக்கும், ஷஷாங்கிற்கும் Officialஆக லெட்டர் அடித்துக் கொடுக்கப்ட்டது – வந்தவரும் எங்கள் அட்ரஸை வாங்கிக் கொண்டு ‘’இரவு 9 மணிக்கு வருகிறோம் – தயாராக இருங்கள்’’ என்று சொல்லிப் போய் விட்டார்
நானும் அவனும் ஒரே Quarters – We were ready by 8.30 – கரெக்டாக 9 மணிக்கு ஒரு ஜீப் வந்தது – எங்கள் இருவரையும் ஏற்றியது – 30 நிமிட பயணம் – நானும் ஏதோ பிஸினஸ்மேனை ரெய்ட் பண்ணப் போகிறார்கள் என்றிருந்தேன்
ஜீப் ஒரு பங்களா முன்பு நின்றது – வாசலில் இருந்த Boardஐப் பார்த்ததும் படு ஷாக் – அது டெல்லியில் மினிஸ்டராக இருந்த ஒருவரின் பங்களா (அவர் வேறு ஒரு மாநிலத்தில் முதல்வராகவும் இருந்தவர்) - எனக்கு அப்போது BP இல்லாவிட்டாலும் இரண்டு பாயிண்ட் ஏறியிருக்கும் என்று நினைக்கிறேன்
எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு இன்ஸ்டிரக்ஷன் தரப்பட்டது – ‘’நீங்கள் இருவரும் உங்களுக்குள் சத்தமில்லாது பேசிக் கொள்ளலாம் – ஆனால் உள்ளே இருக்கும் யாருடனும் பேசக்கூடாது’’ என்பது மட்டுமே
இன்னொரு ஜீப்பில் வந்த Officerகள் முதலில் உள்ளே போனார்கள் – நாங்கள் வெளியே நின்றிருந்தோம் – 5 வது நிமிடம் நாங்களும் உள்ளே
‘’எங்க வீட்டுப் பிள்ளை’’ படத்தில் வருவது போல் பங்களா – எங்கள் இருவரையும் பக்கத்துப் பக்கத்தில் ஒரு தனித் தனி ஸோபாவில் உட்கார வைத்தார்கள் – ஆபீஸர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் எங்களைக் காட்டி ஏதோ சொன்னார்கள் – அடுத்த நொடி எங்கள் ஸோபாவின் முன் சின்ன டேபிள் போடப்பட்டு, ஒரு ஜூஸ் பாட்டில், தண்ணீர், வறுத்த முந்திரி கொண்டு வந்து வைக்கப்பட்டது
எனக்கு இருந்த மனநிலையில் நான் எதையுமே தொடவில்லை – நான் என்ன நடக்கிறது என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்க, ஷஷாங்க் ஏதோ சினிமா இன்டர்வெல்ல இருப்பது போல, எதிரில் வைக்கப்பட்டிருந்ததை நிமிடத்தில் காலி செய்திருந்தான் – திரும்ப வேற ஏதோ கேட்டான்
10 மணிக்கு ஸ்டார்ட் ஆன ரெய்ட் காலை 3 மணி வரை போனது
ஒரு பீரோவில் ரூ.17.75 லட்சத்திற்கு பணம் (அது மிகப் பெரிய தொகை அப்போது)
ஒரு சூட்கேஸ் முழுவதும் வாட்ச்கள் – அத்தனை மாடல் வாட்ச்களை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை (மோதிரத்தில் வாட்ச்)
ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ்
எங்கள் இருவருக்கும் பணத்தை எண்ணும் வேலை தரப்பட்டது – பெரிய டினாமினேஷன் என்பதால் அரை மணி நேரத்தில் முடிந்தது
நாங்கள் விட்னஸ் கையெழுத்துப் போடும் போது, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் போல இருந்த அமைச்சரும் எங்களைப் பார்த்தார் – அந்த பார்வையில் ‘’படவா ராஸ்கல்களா’’ என்ற கோபம் இருந்தது
4.30க்கு திரும்ப எங்களை பேங்கில் இறக்கி விட்டனர். Entrance + Safe Key எங்களிடம் இருந்தது – பணத்தை Safeல் வைத்தோம் – (இந்த கேஸ் முடியும் வரை அது Current Accountலேயே இருக்கும் – ‘’எப்ப முடியறது’’ – இது போல் அப்போதே ரூ.25 கோடி வரை இருந்ததாக ஞாபகம்)
எங்களை திரும்பவும் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள் – மறுநாள் ஞாயிறு என்பதால் பிரச்சனையில்லை
நான் இந்த ரெய்டை கனவு போல் completeஆக மறந்து விட்டேன்
பின் நான் டிரான்ஸ்பரில் எங்கெங்கோ சுற்றி, மும்பையில் இருக்கும் போது, 2014ல் எனக்கு Summon
மீண்டும் டெல்லி - நான் காலை 10 மணிக்கு ஆஜர். 10.30க்கு என்னைக் கூப்பிடுவார்கள் என்று சொன்னார்கள் – தண்ணீர் குடிக்கும்போது கூட, கூப்பிட்டுவிடுவார்களோ என்ற பதட்டத்திலேயே குடித்தேன்
கூப்பிட்டது மதியம் 4.30க்கு – அது வரை சாப்பிடவில்லை
என்ன கேட்கப் போகிறார்களோ என்று பதபதைப்புடன் கூண்டில் ஏறினேன் – Advocate வந்தார் – ஒரு பேப்பரைக் காட்டினார் – இது உங்க கையெழுத்தா என்றார் – ‘’ஆம்’’ என்றேன்
‘’ நீங்கள் போகலாம்’’ என்றார் – 15 விநாடியில் முடிந்தது - இதுக்காடா காலைலேந்து சாப்பிடாமா வைச்சிருக்கீங்கன்னு மனசிற்குள் நினைத்துக் கொண்டேன்
வெளியில் வந்தபின் ‘’திரும்ப கூப்பிடுவீங்களா’’ என்றேன் – இல்லை உங்கள் Portion முடிந்து விட்டது என்றார்கள்
எதிரில் அந்த அமைச்சர் வீல் சேரில் வந்து கொண்டிருந்தார் காலம் தான் எவ்வளவு கொடியது – நான் பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் போல் இருந்தவர் 30 வயது கூடியதைப் போல் இருந்தார்
2016ல் அந்த அமைச்சர் கேஸ் முடியும் முன்னரே இறந்தும் விட்டார்
கேஸ் முடிந்ததா இல்லையா என்று தெரியவில்லை
அமர்நாத் ஹேர் ஸ்டைல்
காலை கோவிலுக்குப் போகும்போது சலூன் வாசலில் அமர்நாத் நின்றிருந்தான். "Good Morning Sir!"
நெற்றியில் விபூதி, நடுவில் குங்குமப் பொட்டு. அமர்நாத்தின் சிரிப்பு தான் அவனுக்கு Trademark. விபூதி-குங்குமமே Logo.
1990களில் அந்த சலூனுக்கு எதிர் வரிசையில் குடியிருந்தோம். அப்போது கடையின் பெயர் வேறு. கடையை நடத்திக் கொண்டிருந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும்.
2001-ல் நெல்லூரில் இருந்து 15 வயது பையனான அமர்நாத்தை அழைத்து வந்தார். அவரோட தங்கை பையன் - "சொந்தக்காரப் பையன், கொஞ்சம் உதவியா இருப்பான்" என்று நினைத்திருப்பார். ஆனால் அவர் அழைத்து வந்தது உதவியாளரை இல்லை; எதிர்கால ஓனரையே!
கடை அமைப்பு எப்படி இருக்கும் என்றால், தமிழ் எழுத்து "ப"-வை தலைகீழாகப் போட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான். முதலில் கடை, அதன் முடிவில் ஒரு பாதை, இடது பக்கம் ஒரு சின்ன ரூம், பக்கத்தில் குளியலறை.
அமர்நாத் அங்கேயே தங்கி வேலை பார்த்தான். அவன் வந்த பிறகு கடை மாற ஆரம்பித்தது. சலூன் என்பதற்கான மரியாதை கடைக்கு கிடைத்தது. ஒரு செவ்வாய்க் கிழமை முழுக் கடையையும் தனியாக வெள்ளையடித்தான். சில மாற்றங்கள் செய்து கடையை பளிச்சென்று மாற்றினான். எப்போதுமே கடையில் ஊதுபத்தியின் வாசம் மிச்சம் இருக்கும்
மாமா வீடு தொலைவில் இருந்ததால், அந்தக் கடையில் இருந்த ரூமிலேயே ஸ்டவ் அடுப்பில் அவருக்கும் சேர்த்து சமையல் செய்து விடுவான் - அவன் வெளியில் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. "வெளில சாப்பிட்டா பைசா சேக்க முடியாது சார்!" (இந்த ஒரு வரியில் CA, Financial Planner, Mutual Fund Advisor எல்லோரும் சேர்ந்து சொல்லும் அறிவுரை அடங்கியிருந்தது). வாரத்தில் ஒரு நாள் அங்கிருக்கும் ராகவேந்திரா ஹோட்டலில் ஆசைக்கு ஏதாவது சாப்பிடுவான்
பெரியவர் முடி வெட்டத் தயாராக இருந்தாலும், பல இளைஞர்கள்: "இல்லை... அமர்நாத் வந்த பிறகு வெட்டிக்கிறேன்!" என்று சொல்லி காத்திருக்கும் நிலை வந்தது
ரஜினியின் தீவிர ரசிகன். ஆனால் ரசிகர் மன்ற வகை அல்ல. பால் அபிஷேகம், கட்-அவுட் ஏறுவது, First Day First Show என்று எதுவும் இல்லை. கடையில் ஓடும் டிவியில் படம் பார்த்தாலே போதும். ரஜினி படத்தைப் பார்க்க தியேட்டருக்குப் போக மாட்டான்; ஆனால் ரஜினி பட ஹீரோ மாதிரி உழைப்பான். அந்த நேரத்தில், வருடம் முழுவதும் கடைக்கு லீவு கிடையாது.
வருடத்தில் மூன்று நாள் மட்டுமே கடைக்கு விடுமுறை
சபரிமலை. கடை வாசலில் ஒரு போர்டு: "3 நாள் லீவு – சபரிமலைக்குப் போகிறேன்."
இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் அந்த கடையை ஓனர் அவன் பெயரிலேயே எழுதி வைத்தார். அவர் நினைத்திருக்க மாட்டார்..."கடையை எழுதி வைக்கிறேன்" என்று ஆரம்பித்த கதை, Packaging Offer போல "மகளையும் எழுதி வைக்கிறேன்" வரை போய்விடும் என்று! ஆம்.
அவர் கொஞ்சம் முடியாது இருந்தபோது, இவன் கவனித்த கவனிப்பைப் பார்த்து, பெண்ணையும் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். வாழ்க்கை சில நேரங்களில் ஒரு திரைக்கதையை விட நல்ல Script எழுதிவிடுகிறது. அவர் சொன்னது ‘’இவனை விட நல்ல பையனை நான் தேடினாலும் கிடைக்க சான்ஸ் இல்லை சார்’’ என்று
கொரோனா காலத்தில் கடையின் எதிரில் ஒரு போர்டு: "வீட்டில் வந்து முடி வெட்டப்படும்" கீழே Mobile Number. அப்போது மக்கள் முடி வெட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் கொரோனா பயம். மறுபக்கம் கண்ணாடியில் தெரியும் நம் காட்டு மனிதனின் தோற்றம்.
He went with full precautions during those period. "டெய்லி யாராவது கூப்பிட்டுட்டே இருந்தாங்க சார்!" என்றான் சிரித்தபடி. நானும் பலருக்கு அவன் நம்பரைக் கொடுத்திருந்தேன்.
இப்போது என் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டான். மனைவி, மகளுடன் செவ்வாய்க் கிழமைகளில் கோவிலுக்குப் பைக்கில் போவதைப் பார்க்கிறேன் (இப்போது செவ்வாய் கடை விடுமுறை).
சிலரின் வாழ்க்கையைப் பார்த்தாலே போதும் - நமக்கு பெரிய Google Motivational Quotes தேவையில்லை.
15 வயதில் ஒரு சின்ன ரூமில் தங்கி வேலை ஆரம்பித்த பையன்... இன்று சொந்த வீடு, நல்ல குடும்பம் என்று அமைதியாக வாழ்கிறான்.
அவனுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டால், பெரிய Management வார்த்தைகள் எதுவும் கிடையாது.
சுத்தம்.
சிக்கனம்.
நேர்மை.
உழைப்பு.
சுருக்கமாகச் சொன்னால், அமர்நாத் Hair Cutting மட்டும் செய்யவில்லை
தன்னுடைய வாழ்க்கையையும்...ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக "Layer Cut"... "Step Cut"... "Trimming"... செய்து... இறுதியில் "Perfect Finish" கொடுத்திருக்கிறான்
"24 மணி நேர சைக்கிள் சரித்திரம்!" 🚲😄
திருநெல்வேலியில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்தவுடனேயே, புது ஊரில் Two Wheeler ஒன்றை வாங்கிவிட்டேன்
ஆனாலும் சைக்கிள் மேல் எனக்கிருந்த ஆசை தீர்ந்தபாடில்லை – ஒரு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல நாள் நினைத்து (வாங்குவதைத் தள்ளிப்போட்டு), திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு HERCULES CYCLE ஒன்றை வாங்கினேன் – அதில் ஒரு 1 மணி நேரத்திற்கு மேல் அங்கிங்கும் ஊரைச் சுற்றினேன்
மறு நாள் காலை ஆஃபீசிற்கு சைக்கிளில் போகலாம் என்று முடிவெடுத்து 10 மணி OFFICEக்கு 9 மணிக்கே சைக்கிளில் போய் விட்டேன் – 9.15க்கு ஆஃபீஸ் வந்த Part-time Sub Staff சைக்கிளைப் பார்த்துவிட்டு, ‘’சார், புது சைக்கிள் ஓட்டி ரொம்ப நாள் ஆச்சு - உங்க சைக்கிளைக் கொடுங்க சார் – போஸ்ட் ஆஃபீஸ் போய் தபால் எடுத்துட்டு வரேன்’’னு கேட்க, நானும் சைக்கிள் சாவியைக் கொடுத்தேன்
போனவன் ரொம்ப நேரம் கழித்து திரும்பி வந்தான் – சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ‘’சார்!! சைக்கிளை எவனோ திருடிட்டு போயிட்டான் சார் – போஸ்ட் ஆஃபீஸ் போயிட்டு வெளிய வந்தா, சைக்கிளைக் காணும் சார் – அங்கே, இங்கன்னு எல்லா இடமும் தேடிட்டு வரேன் – கிடைக்கலை சார்’’-னான்
நான் அவனை ஒன்றுமே சொல்லவில்லை – ‘’என்ன பண்ணுவது நம்ம நேரம்’’ என்று மட்டும் சொல்லிவிட்டு விட்டு விட்டேன் – வாங்கிய அன்றே தொலைத்தது (நல்ல தொகை) மட்டும் மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது – இரவு சென்னையில் இருக்கும் தங்கையை STD Boothல் இருந்து வழக்கம்போல் கூப்பிட்டபோது, மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு, சைக்கிள் வாங்கியதையும், மறுநாளே தொலைந்ததையும் சொன்னேன்
நான் இந்த விஷயத்தை அடுத்த நாளே மறந்து விட்டேன் – 2 நாள் கழித்து, சீரியஸாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, காலை 11 மணிக்கு ஆஃபீஸிற்குள் ஒரு கான்ஸ்டபிள் – என் பெயரை சொல்லிக் கேட்கிறார் – நேராக என்னிடம் வந்தார் – ‘’ஐயா உங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொல்றார்’’ என்று சொன்னார் – அவர் குரலில் அதிகாரமில்லை
எனக்கு ஒன்றும் புரியவில்லை – சீனியர் மேனேஜரிடம் சொல்லிவிட்டு அவருடன் போனேன்
ஸ்டேஷனில் நான் உள்ளே போனவுடன், சப்-இன்ஸ்பெக்டர் எழுந்தார் – ‘’சைக்கிள் தொலைஞ்சு போயிடுச்சுன்னு எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே – பிறகு சைக்கிள் திருடர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பற்றி ஒரு சிறிய செமினார் நடத்தினார்.- இப்பல்லாம் சைக்கிள் பின் டயரில் சின்னப் பசங்க சைக்கிள்ல உள்ளது மாதிரி ஒரு பாலன்ஸிங் வீலை (Skating Wheel) வைச்சு, சைக்கிளை உருட்டிட்டு போயிருவாங்க – அவங்க இடத்திற்கு போனபின் பூட்டை உடைப்பாங்க - இப்பத் தான் DGP Officeல இருந்து நீங்க சைக்கிளைத் தொலைச்சது பத்திச் சொன்னாங்க’’ என்றார்
எனக்குப் புரிந்து விட்டது - My brother-in-law was in DGP Office that time. என் தங்கையிடம் நான் சொன்னதை அவர் தன்னுடைய கணவரிடம் சொல்ல, அவர் ஆஃபீசில் யாரிடமோ சொல்ல, யாரோ ஒருத்தர் இங்கு ஃபோன் பண்ணியிருக்கிறார்
Sub-Inspector என்னை வாங்க என்று கூட்டிப் போனார் – ஒரு ஏரியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் - சில சைக்கிள்களைப் பார்த்தால், அவை சுதந்திரப் போராட்ட காலத்தில் பயன்படுத்தப் பட்டவை போல இருந்தன – காந்தி கூட ஓட்டியிருக்கலாம் – இன்னொரு ஏரியாவில் நல்ல சைக்கிள்கள் மற்றும் TVS 50கள்
‘’இதில எது பிடிச்சிருக்குன்னு பாத்து செலக்ட் பண்ணுக்கோங்க, நாளைக்கு காலைல arrange பண்ணிக் கொடுத்துருவேன்’’ என்றார்
அந்த நிமிடத்தில் சைக்கிள் தொலைந்ததை விட, மன நிம்மதி மிக முக்கியமாகப் பட்டது
இப்படி அங்கிருந்த திருட்டு சைக்கிளை எடுத்துப் போவதெல்லாம் நான் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் – ஒரு மத்தியதர வர்க்கத்தால் முடியாத விஷயமும் கூட - இருக்கும் பிரச்சனை போதாமல் புதுப் பிரச்சனையை இழுக்க வேண்டாம் என்றெண்ணி, நான் வேண்டாம் என்பதை நாசூக்காகச் சொல்லி மறுத்துவிட்டேன்
ஒரு பேப்பரில் மட்டும், சைக்கிள் தொலைந்த விவரத்தை கம்ளெயின்ட்டாக எழுதிக் கொடுத்துவிட்டு, முடிந்தால் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்
தவறிக் கூட போலீஸ் ஸ்டேஷன் வாசல்படி மிதிக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான் – சைக்கிளைத் தொலைத்த விவகாரத்தில் ஸ்டேஷனையும் பார்த்தாகி விட்டது
அந்த போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஹோட்டலில் தான் தினமும் நான் மதியம் சாப்பிடுவேன்
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அங்கே சாப்பிடவே பயம்! எங்காவது Sub-Inspector என்னைப் பார்த்துவிட்டு, "சைக்கிள் கிடைச்சுருச்சு... வாங்க..." என்று மீண்டும் கூட்டிக் கொண்டு போய் விடுவாரோ என்று நினைத்து, ஒரு மாதம் எனக்குப் பிடிக்காத வேறு ஹோட்டலில் தான் சாப்பிட்டேன்!
அதன் பின் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையும் போய் விட்டது – அந்தக் காலத்தில் இருந்த பெரிய சைக்கிள்களும் இப்போது நடைமுறையில் இல்லாமல் காணாமல் போய்விட்டன – ஏன் இப்போது குட்டி சைக்கிள்கள் மட்டுமே இருக்கின்றன என்பது எனக்கு புரியாத விஷயம்
உண்மையைச் சொன்னால், நான் வாங்கிய சைக்கிள் ஒரு நாள்தான் என்னுடன் இருந்தது. ஆனால் அதன் நினைவுகள், பல வருடங்கள் கழித்தும், இன்னும் Lifetime Warranty-யுடன் இருக்கின்றன
பூஜை ரூம்ல இருந்து மணி எடுத்துவந்து அதை ஆட்டி ஆட்டி சிரிப்பு...
அத கையில வச்சிக்கிட்டே நாள் எல்லாம் விளையாட்டு...
அப்புறம் எப்டியோ தூங்கிட்டா...
பெட்ல இருந்து மணி எடுக்கிறேன் சவுண்ட் வந்துருச்சு 🤷
தூக்கத்துலயும் சிரிப்பு 🥹🥹🤌
#மகள்
புதிய Top up மருத்துவ காப்பீடு Tata AIG Medicare Reserve பற்றிய முழு விவரம்.
பாலிசி எடுக்க வயது:
பெரியவர்கள் 18-55
Floater பாலிசியில் குழந்தைகள் 0-25
காப்பீடு தொகை:
5 லட்சம் முதல் 5 கோடி
கழிவு (Deductible)3 லட்சம் முதல் 50 லட்சம் வரை
அடிப்படை கவர் (inbuilt Cover )
அறை வாடகை வரம்பு
Room Single ac room
Rider மூலம் any room வசதி
மருத்துவமனைக்கு முந்தைய செலவுகள் (Pre-Hospitalization): 90 நாட்களுக்கு, மற்றும்
மருத்துவமனைக்குப் பிந்தைய செலவுகள் (Post-Hospitalization): 90 நாட்களுக்கு கவர் உள்ளது
பகல் நேர சிகிச்சை முறைகள் (Day Care Procedures): அனைத்து பகல் நேர சிகிச்சைகளும் காப்பீட்டுத் தொகை வரை கவர்
உறுப்பு தானம் செய்வோர் செலவுகள் (Organ Donor Expenses): காப்பீட்டுத் தொகை வரை கவரேஜ் உண்டு.
வீட்டிலேயே சிகிச்சை (Domiciliary Treatment): காப்பீட்டுத் தொகை வரை கவரேஜ் உண்டு.
ஆயுஷ் சிகிச்சை (AYUSH treatment): சித்த மருத்துவ முறைகளுக்கான (AYUSH) செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை கவர்
ஆம்புலன்ஸ் கவர் (Ambulance Cover): காப்பீட்டுத் தொகை வரை கவர்
Modern treatment: காப்பீடு தொகை வரை கவர்
Pocket Protect : 7 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கினால் 10000 கிளைம் செய்யலாம்.
அதிகபட்சம் ஆண்டுக்கு 5 முறை இந்த வசதி.
Waiver of Aggregate Deductible: பாலிசி எடுத்து 5 ஆண்டுகள் கழித்து எப்போது வேண்டுமானாலும் கழுவு இல்லாத நார்மல் பாலிசியா மாற்றும் வசதி.
Restore benefit 100% நார்மல் பாலிசியா மாற்றிய பிறகு கிடைக்கும்
போனஸ்:50-100% நார்மல் பாலிசியா மாற்றிய பிறகு கிடைக்கும்
விருப்பக் கவர் மற்றும் ரைடர்கள் (Optional Covers and Riders)
Consumables Benefit மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கையுறைகள், மாஸ்க் கிருமி நாசினி கவர்
TransiCare Wallet :
வேலை இலக்கும் போது 90 நாட்கள் வரை 3 லட்சம் வரை கழிவு இல்லாமல் கிளைம் செய்யும் வசதி ( அலுவலக மருத்துவ காப்பீடு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி)
Inbound Emergency Hospitalization:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரும் நிலை விபத்து மூலம் கிளைம் செய்யும் போது எந்த வித கழிவும் இல்லாமல் கிளைம் செய்யும் வசதி
காத்திருப்பு காலம்
பொதுவாக 30 நாள்
குறிப்பிட்ட அறுவை சிகிச்சை 3 வருடம்
முன்பே இருக்கும் நோய்கள் 3 வருடம்
35 வயது வரை உள்ள 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் பிரிமியம் consumables rider உடன்
( Rest of India zone)
25 லட்சம் காப்பீடு 5 லட்சம் கழிவு பிரிமியம் ரூபாய் 6593
(Zone மாற்றி சிகிச்சை பெற்றால் co pay 10% உண்டு எனவே பாலிசி எடுக்கும் போது சரியான zone தேர்வு செய்வது நல்லது)
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்யவும் மற்றவர்களுக்கு இந்த தகவல் சென்று சேர
💯 விமல் நடித்த களவானி படத்தில் அந்த பட இயக்குனருக்கும் அந்த நடிகருக்கும் ஆஸ்காரே குடுக்கனும். ஓவியா ஓவியமா தெரியும் படம் முழுவதும்,
ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருப்பார். அந்த படத்தின் பெயருக்கு 200% பொருந்திய ஒரு நடிகர்.
நடித்தார் என்பதை விட அந்த கேரக்ட்டராகவே வாழ்ந்திருப்பார் என்பது தான் உண்மை. அந்த வேட்டியை கட்டுற தோரணையாக இருக்கட்டும், கட்டிக்கிறேனு சொல்லுனு யகத்தாளமா கேட்குறதா இருக்கட்டும், அந்த பைக்கை ஓட்டுவதாக இருக்கட்டும் அல்லது அதிலிருந்து இறங்குவதாக இருக்கட்டும் எல்லா செயலிலும் களவானித்தனம் தெரியும். அந்த கேரக்ட்டர் அப்படித் தானே?
அந்த பட இயக்குனர் எவ்வளவு நுணுக்கமா ஒவ்வொன்றையும் கவனித்திருக்கிறார் என்பது தெரியும்.
அந்த கூரையிலிருந்து (ஓலை) சரண்யா பொன்வண்ணன் அவர்கள் செருப்பை எடுத்து தரையில் போட்டு காலில் அணிவது எல்லாம் இன்னமும் கிராமத்தில் நடக்கும் செயல் தான்.
ப்பா.. மனுசன் இப்படியா ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தையும் உன்னிப்பாக கவனித்து செதுக்கியிருப்பார் என்று வியந்து இருக்கேன். நான் ஒவ்வொரு முறையும் வியப்பாக பார்க்கும் ஒரு படம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக களவானி படம் தான்.
ரெளடிசம் வேறு களவானித்தனம் வேறு. சினிமாக்கள் பெறும்பாலும் ரெளடிசத்தை தான் காண்பித்திருக்கும். ஆனால் இந்த படத்தில் அதிகம் கவனிக்கப்படாத களவானித்தனம் என்ற ஒரு சின்ன கேரக்ட்டரை எடுத்து அதில் ஒவ்வொரு சீனிலும் அதை காண்பித்து கொஞ்சம் கூட கேரக்ட்டரில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அந்த கேரட்டரை அப்படியே அச்சு பிசறாமல் ஸ்கிரீனில் நிறுத்தியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது.
#vimal #kalavani #oviya
பயணம் செய்வது வேறு..
சுற்றுலா செல்வது வேறு...
பயணம் என்பது உலகை
அறிந்து கொள்ளும் வழி.
சுற்றுலா என்பது பொழுதை
போக்குவதற்கான வழி.
____ எஸ் ராமகிருஷ்ணன்.
As promsied:
ரிலையன்ஸ், டாடா மாதிரி பெரிய பங்குகளை எல்லாரும் பேசுறாங்க.
ஆனா இந்தியாவில் பல மடங்கு வளர்ந்த பல பங்குகள் ஆரம்பத்தில் யாரும் கவனிக்காத small caps தான்.
நான் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்த
அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி தரக்கூடிய 12 பங்குகள் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன்.
முழு analysis இங்கே 👇
RT for reach friends Its my multiple days effort and study
https://t.co/wIgMbbqYVG
படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
இந்த post உங்களுக்கு useful என்று தோன்றினால் RT செய்து மற்றவர்களுக்கும் share செய்யுங்கள் 🙏
#StockMarketIndia #SmallCaps #Investing
குடும்ப பாரத்தை சுமக்க வேலை வெட்டிக்கு போனதில்லை,படிச்சுட்டு இருக்கப்பவே கல்யாணத்தை பண்ணியாச்சு.பீரியட்ஸ் வந்து பத்துநாள்ல கேப்பிட்டல் V மாதிரி காலை விரிச்சா பத்தாவது மாசம் ஒரு குழந்தை கைல இருக்கும்.மொட்டை வெயில்ல பச்சை புள்ளைய தூக்கிட்டு ரோட்ல ஓடுற இந்த முண்டைக்குலாம் IUI, IVF, ICSI, ART லாம் என்னனு தெரியுமா?குழந்தை இல்லாம CARAல ரிஜிஸ்டர் பண்ணிட்டு டெய்லி சீனியாரிட்டி செக் பண்ற லட்சம் பெண்கள் இருக்க நாட்ல ஒரு தெருதேவுடியாபயலுக்காக பிஞ்சு குழந்தைய காவு குடுக்க நினைக்குற இவளுகளாம் மனுஷ ஜென்மம் தானா?
@ramk8060 ப்ரோ ப்ளீஸ் வீட்டு அட்ரஸ் அனுப்புங்க என் சொந்த காச போட்டு நாலு மூட்டு அரிசி வாங்கி அனுப்புறேன் அத சாப்பிடுங்க, காசு இல்லன்னு பீய தின்னுட்டு இப்படிலாம் பேசாதீங்க
டோமர் இடைவெளி என்பது பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் கடன் வட்டி விகிதத்திற்கு இடையிலான வித்தியாசம். நேர்மறை மதிப்பு கடன் நிலைத்தன்மையைக் குறிக்கும்.
தமிழ்நாடு: +7.39% (மிக வலுவானது)
இந்தியா: +3.32%
அமெரிக்கா: +1.52%
இங்கிலாந்து: +1.94%
தமிழ்நாட்டின் வளர்ச்சி கடன் செலவை விட அதிகம், எனவே நல்ல நிலையில் உள்ளது.