என்ன மெக்காலே எல்லாரையும் english படிக்கலாம்னு சொல்றான், பொதுக்கல்வின்னு சொல்றான்னு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டவானுக 200 வருஷம் கழிச்சு கூட அதே மாதிரி அடிச்சுகிட்டு இருக்காணுக மெக்காலே, பிரான்சிஸ் எல்லிஸ் கால்டுவெல், ஜான் மார்ஷல் இவங்க பேரக் கேட்டாலே ஒப்பாரி தான்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட தமிழி கல்வெட்டு!
இராமநாதபுரம் மாவட்டம், ஆப்பனூர் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி எழுத்துப் பொறிப்புடனான நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் திரு. முனியசாமி அவர்களால் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டினைப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும், தொல்லியல் அறிஞருமான திரு. சாந்தலிங்கம் அவர்களும் அவரது உதவி ஆய்வாளர் திரு. உதயகுமார் அவர்களும் நேரில் பார்வையிட்டுக் கல்வெட்டுச் செய்தியினைப் படித்தறிந்துள்ளனர்.
"ஆபன்னூர் ஏறி ய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்" என்ற வரலாற்றுத் தகவல் இன்று காலத்தால் அழியா ஆவணமாகியுள்ளது. பாண்டிய மண்டலத்தின் மையப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பொ.யு.மு முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்ததாகக் கருதப்படும் இந்த நடுகல் கல்வெட்டு , தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கால எழுத்து மரபை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
இந்த அரிய கண்டுபிடிப்பினை வெளிக்கொணர்ந்து, தமிழ் நாட்டின் வரலாற்றுப் பெருமைக்குப் புகழ் சேர்த்துப் பங்களித்துள்ள அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
திருக்குறள் ஒரு சனாதன நூல் //
நாம செத்ததுக்கு அப்பறம் நமக்கும்,இந்த குறளுக்கும் பட்டையையும், நாமத்தையும் நூலிபான்ஸ் சாத்த பாப்பானுகனு தான் தலைவன் 2000 வருஷத்துக்கு முன்னாடியே
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"னு
எழுதி வச்சுட்டாப்ளா🙏🔥.
காவி என்றால் என்ன பிரச்சினை தவெகவினருக்கு ? காவி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிக்கிறது என்கிறார் அமைச்சர் மருத்துவர் @arunraajkg அவர்கள். இந்த அபத்தமான தவறான எண்ணத்தை அருண்ராஜ் அவர்கள் மாற்றிக்கொள்வதும் , கொஞ்சம் தமிழக ஆன்மீக வரலாற்றை அறிந்து பேசுவதும் நல்லது . அத்துடன் திருக்குறளை படித்து தெளிவு பெறுவது இன்னும் சிறப்பு .
காவி பொதுவாக துறவறத்தை குறிக்கும் . சமண இலக்கியம் சிலப்பதிகாரத்தில் மாதவியும் கவுந்தி அடிகளும் காவி பூண்டார்கள் என்கிறார் இளங்கோவடிகள். அவருமே காவியணிந்த சமணரல்லவா . புத்தரும் பௌத்தர்களும் அணிந்தது காவியே.
திருக்குறள் ஒரு சனாதன நூல். அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்பது சனாதனத்தின் அடிப்படை. கர்மாவை பற்றியும் ஊழ்வினைப்பற்றியும் வேதங்களை பற்றியும் இந்துக்கடவுள்களையும் பலக் குறள்களில் காண்கிறோம். துறவியலுக்கு ஒரு அதிகாரமே உள்ளது. எப்படி பார்த்தாலும் வள்ளுவர் சனாதனிதான் .
இதில் என்ன பிரச்சினை? இந்து தருமம் எப்பொழுதுமே அனைவருக்குமான பொது வாழ்வியல் தான். Vasudhaiva kutumbakam - "உலகமே நம் குடும்பம்" என்ற உலகளாவிய பொதுவுடமையை பேசுவது சனாதனம் . இது கூட புரியாமல் பிரித்து பேசுபவர்கள்தான் திருவள்ளுவரின் சிந்தனைகளை சிறுமைப்படுத்துகிறார்கள் .
நாம் நம் கடவுளுக்கு கூட விதவிதமாக அலங்காரம் செய்யும்போது வள்ளுவருக்கு எதை அணிவிக்கலாம் எது கூடாது என்று தீர்மானிக்கும் தகுதி உங்களில் யாருக்கு உள்ளது ?
உலகத்துக்கு வழிகாட்டும் இந்து தர்மத்தை நீங்கள் யாரும் ஒரு குறுகிய வட்டதுக்குள் அடைக்க முயலவேண்டாம் . அனைவருக்குமான பொதுமறையை சிவன் முருகன் ஆசியுடன் அரங்கேற்றினார்கள் என்று நினைத்து பெருமைப்படுங்கள்.
ஆளுநர் குடியிருக்கும்
மக்கள் மாளிகைக்குச்
சில கேள்விகள்
திருவள்ளுவர்
காற்றைப்போல் பொதுவானவர்;
காற்றுக்கு ஏன்
காவிப் பூச்சு?
திருவள்ளுவர்
மானுடத்தின் பொதுச்சொத்து
‘வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து’
என்று பாரதியால்
பொதுமைப்படுத்தப்பட்ட
புலவனுக்கு
திருநீறு என்ற
உள்ளூர் அடையாளம் எதற்கு?
தர்மார்த்த காம மோட்சம் என்ற
நாற்பொருளிலிருந்து விடுபட்டு
அறம் பொருள் இன்பம் என்ற
முப்பொருளை மட்டுமே
முன்னிறுத்தியவனுக்கு
உருத்திராட்சம் என்ற
உருட்டுமாலை தேவையா?
அண்டமெங்கும் விரிந்திருக்கும்
ஆகாயம் என்று
கருதப்படும் வள்ளுவரை
மதம் என்ற
சின்னச் சிமிழுக்குள் அடக்குவது
வரலாற்றின் வழு இல்லையா?
மெய்த் தமிழர்கள்
மீண்டும் மீண்டும்
எதிர்த்துக்கொண்டிருக்க
ஆளுநர்கள் மீண்டும் மீண்டும்
அதே செயலைச் செய்வது
உங்கள் அதிகாரத்தால்
எங்களைக் காயப்படுத்துவது
ஆகாதா?
அன்புகூர்ந்து
நிறுத்திக்கொள்ளுங்கள்;
தாங்கமாட்டார்கள்
தமிழர்கள்
வள்ளுவரை
வாழ விடுங்கள்
#திருவள்ளுவர்
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu