கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தீக்கதிர் மட்டுமே தொடர்ந்து அவர்களைப் பற்றி பேசி வருகிறது.
எதிர்கட்சியான திமுக ஆளும் கட்சி தவெக மற்றொரு பிரதான கட்சி அஇஅதிமுக ஆகிய மூவரும் அமோனியா கசிவு விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏற்க தக்கதல்ல.
கடந்த காலத்தில் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆதரவால் தப்பித்து வந்த புனித பீட்டர் பால் கடல் உணவு இறால் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை தற்போதும் தண்டனைகள் இன்றி தப்பித்து வருகிறது.
அந்தத் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், பணி முடித்த பெண்களை வெளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யாமல், கொத்தடிமைகளைப் போலத் தொழிற்சாலைக்குள்ளேயே தங்க வைத்தது மோசமான சட்டவிரோதமாகும். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆபத்தான அமோனியா வாயு செல்லும் குழாய்களுக்கு அருகிலேயே இப்பெண் தொழிலாளர்கள் தங்கும் அறை அமைந்துள்ளதுதான் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.
ஏற்கனவே சில நேரங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ள போதும் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டவுடன் ஒலிக்க வேண்டிய ஒலிப்பான் வேலை செய்யாதது மட்டுமல்ல; தேவையான முதலுதவி ஏற்பாடுகள் கூடத் தொழிற்சாலையில் இல்லை.
இத்தகைய சட்டவிரோத அனைத்து நடவடிக்கை களுக்கும் அவர்களது அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் முக்கியமான காரணமாகும்.
எனவே தமிழ் அரசு தவறு செய்த நிறுவனம் அதிகாரிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
#Ammoniagasleak
#MRF நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
30 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வருடக் கணக்காக காலம் கடத்தி வந்தது இந்நிர்வாகம்
ஒவ்வொரு முறையும் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிபந்தனை விதித்தது.
தொழிலாளர்களும் நிர்வாகம் கேட்ட அளவிற்கு உற்பத்தியை கொடுத்தார்கள் ஆனால் நிறுவனம் திய புதிய நிபந்தனை விதித்து தொழிலாளர்களை தொடர்ந்து அலைகழித்தது நிர்வாகம்
தொழிலாளர் துறையின் எந்த ஆலோசனைகளையும் சமரசங்களையும் எம்ஆர்எப் நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்து வந்தது. ஒப்பந்த தொழிலாளிகளை சட்ட விரோதமாக நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியது
வரைமுறை இன்றி தொழிலாளிகளை கொத்துக் கொத்தாக சஸ்பென்ட் செய்து வந்தது.
இத்தகைய தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிராக தான் தொழிலாளர்கள் இன்று #CITU தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும். கடந்த கால ஒப்பந்த காலம் முடிந்த தேதியில் இருந்து ஒப்பந்தம் அமலாக்கும் தொடர வேண்டும்
பணியிடை நீக்கம் என்ற பெயரில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையே ஊதிய வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக வித்தியாசங்களை ஏற்படுத்தும் நிர்வாக ஆலோசனை கைவிடப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
#WorkersProtest #GateMeeting #Communist
தலித் சமூகத்தில் பிறந்த ஒரு கலைஞன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் நாவல்.
ஜி. கல்யாண ராவ் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தக அறிமுகம்.
சமூக பிரச்சனைகளைப் பற்றி பேசும் நாவல்கள், மார்க்சிய தத்துவார்த்த புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள், கட்டுரைகளை தமிழ் மார்கஸ் இணையத்தில் வெளியிட விரும்பும் தோழர்கள் கட்டுரைகளை உங்கள் பெயர் (புனைப் பெயரில் கட்டுரை வரவேண்டும் என விரும்பினால் அப்பெயரையும் இணைக்கவும்) மற்றும் தொடர்பு எண்ணோடு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
#BookIntro #Tamilmarx
https://t.co/WtUzKVYH1Z
சம்பளம் மட்டும் அதே இடத்தில் நிற்கிறது.ஆனால் செலவு மட்டும் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
ஒரு நடுத்தர குடும்பம் இன்று மாத
சம்பளத்தை வாழ்க்கைக்காக செலவு செய்யவில்லை…இந்த மாதத்தை எப்படி கடப்பது? என்பதற்காகவே போராடுகிறது.ஒரு சாமானிய குடும்பம் இன்று ஆசைக்காக வாழவில்லை.
சத்தமில்லாமல் உயர்வது விலைகள் அல்ல… சாமானிய மக்களின் வாழ்க்கைச் சுமை
தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மட்டும் தான் நம்ம கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் உண்மையில் சத்தமில்லாமல் உயர்ந்து கொண்டிருப்பது சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவு.
இந்த உயர்வுகள் தனித்தனியாக பார்க்கும்போது பெரியதாக தெரியாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு நடுத்தர குடும்பம் தினமும் வாங்கும் அனைத்து பொருட்களின் கூடுதல் செலவையும் மாத இறுதியில் கணக்கிட்டுப் பார்த்தால், சம்பளத்தை விட செலவுதான் வேகமாக ஓடுகிறது என்பது புரியும்.
https://t.co/TF7sj7K71W
இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதியம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 1சதவீதத்திற்கும் குறைவாக உயர்ந்துள்ளது
கான்ட்ராக்ட் தொழிலாளர் முறை என்பது நவீன கொத்தடிமை முறை...
ஊதியம் வேண்டுமா நான் சொல்றத செய்.
சம்பளம் கொடு லீவு வேணும்னு வந்த வேலைய விட்டு துறத்திவிட்டுருவேன் என்ற கான்ட்ராக்ட் காரர்களின் மிரட்டலே பதிலாக இருக்கும்.
கொடும் வெயில் கொட்டும் மழையோ நடு ராத்திரியோ துப்புரவு தொழிலாளர்களுக்கு வேலை தான். ஆனால் அவர்களுக்கு அரசு போதிய சம்பளம் கொடுக்காது. அவர்களை பணி நிரந்தரம் செய்யாது.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் துப்புரவு பணியில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட விடுமுறை கிடைக்காமல் வேலை செய்யும் கொடுமை உள்ளது.
ஆட்சி மாறியுள்ளது காட்சி மாறவில்லை.
கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்து போதிய ஊதியம் தந்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதே உண்மையான மாற்றமாக அமையும்.
#Labours #TVK #Chennai
மிராசுதார்கள் தவறு எனக் கருதுவதை செய்யும் பண்ணையாட்களுக்கு சவுக்கடியும், வாயில் சாணிப்பால் ஊற்றுவதும் தண்டனைகளாக திகழ்ந்தன. தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதும், அச்சத்தை ஏற்படுத்துவதும், போராட்ட உணர்வை மழுங்கடிப்பதும் இதன் நோக்கமாகும்.படிக்கhttps://t.co/rlDEnKzAMn
கீழத் தஞ்சையிலே விவசாயத் தொழிலாளர்கள் பாடி வந்த வயல் பாட்டு பின்வருமாறு இருந்தது. "கட்டும் சேலையை
முட்டிவரை கட்டச் சொன்னது யாரய்யா
ஆண்டை, அய்யா என்று கூறய்யா...
கணுக்கால் வரை கட்டச் சொன்னது யாரய்யா
நம்ம சாமி பி.எஸ்.ஆர் என்று கூறய்யா..."
நிலப்பிரபுக்களுக்கு முன்னர் ஆண் கூலியாட்கள் வரும்போது, துண்டு தோளில் போடக் கூடாது ; இடுப்பில் கட்ட வேண்டும் எனவும், பெண்களைப் பொறுத்த வரையில், சேலையை கணுக்கால் வரை கட்டக்கூடாது, முட்டிவரை தான் அணிய வேண்டும் என கட்டுப்பாட்டுகளை விதித்தனர்.
#வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு! உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது!
வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி 18 பெண்களை வன்கொடுமை செய்த 215 அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு இன்றுவரை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஏ.நல்லசிவன் அவர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கு நடைபெற்றது.
269 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அதில் 54 பேர் உயிரிழந்தனர் இந்நிலையில் 215 பேரின் தண்டனைக்கு எதிராக 27 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ன
மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டதோடு 10 லட்சத்தில் 50% பணத்தை நேரடியாக வன்கொடுமை ஈடுபட்ட அந்த அதிகாரியிடம் வசூலித்து தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து வழக்காடிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்
#protest #victory #AILU
கோவிட் காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு மடி மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்று குடும்பத்துடன் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்