தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தவெக நிர்வாகிகள் - வேலை கேட்டு வந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுபாதக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
#CBSE வினாத்தாள் கசிவு நிர்வாக முறைகேடுகளை கண்டித்து சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்டு #AFIS தோழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவர்களை காவல்துறை மோசமான முறையில் கைது செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தலித் இளைஞர் ஆகாஷ் டெலிசன் (26) காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில், நீதி கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் சிபிஐ(எம்), ததீஒமு பங்கேற்றது.
அதன் தொடர்ச்சியாக ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலை மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், 90 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், ஆகாஷின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், CPIM மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.மோகன், தீஒமு மாவட்டத் தலைவர்கள் வி.கருப்புசாமி, எஸ்.முத்துராமலிங்கபூபதி, ஆர்.வீரைய்யா உள்ளிட்டோர் சந்தித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதும் கூட்டணியில் இருந்ததில்லை அது பெயர் தொகுதி உடன்பாடு.
அதிகாரத்தில் பங்கு அல்லது மந்திரி சபையில் இடம் பெற்றால் தான் அது பெயர் கூட்டணி
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
நன்றி தோழர் @VanniTamizhVCK
இளைஞர்களே சங்கம் தான் நம்மல பாதுகாக்கும்
திருப்பூர் மாவட்டத்தில் பிளிப்கார்ட்ஸ் மினிட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய டெலிவரி ரைடர்ஸ்களுக்கு வழங்கி வந்த சம்பளத்தை முறையான முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மூன்று முறை குறைத்துள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகத்தை கண்டித்தும் முறையான ஊதியம் மற்றும் இன்சென்டிவ் வழங்க கோரி இந்த இளைஞர்கள் சங்கமாக இணைந்து போராடுகிறார்கள்.
#DYFI - #CITU தலைமையில் மதியம் துவங்கிய இந்த போராட்டம் தற்போதும் தொடர்கிறது.
#tiruppur #flipkart #flipkartminutes
இதில் #வெற்றிமாறன் சொல்லும் படம் #BattleshipPottemkin படம் மிகவும் முக்கியமான படம், சினிமா துறையில் இருப்பவர்கள் பல பேருக்கு இந்த படம் ஒரு study material மாதிரி...
இன்றைக்கு வரை அதில் பயன்படுத்த படும் edit patterns பயன் படுத்த படுகிறது...
அந்த படம் youtube la available அனைவரும் must watch பண்ண வேண்டிய படம்...
தனி மனிதனால் தீர்வு கொடுக்க முடியாது, அமைப்பாய் திரண்டு சண்டையிடுவது தான் நமக்கு தீர்வு தரும் என்று சொல்லும் அற்புதமான படம்.
மாணவர்களை அரசியல் படுத்தினால் கூட இருக்கிறவர்கள் நல்லவனுக்காகவும் சேர்ந்து போராடுவார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த காணொளி
அவர்களை அரசியல் படுத்தாமல் விட்டால் இது என்னோட பிரச்சனை இல்ல அவங்க பிரச்சனையும் கடந்து செல்வார்கள்.
உத்தரப் பிரதேசத்தை இருளில் மூழ்கடித்த பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசு!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு யோகி ஆதித்யநாத் அவர்களே?
பாஜகவின் 'இரட்டை இன்ஜின்' ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசத்தில் மின்சாரத் துறை சீரழிந்து கிடக்கிறது. மீட்டர் பில்லிங் முறைகேடு, அதிக கட்டணம் சொல்லி மக்களிடையே சட்டவிரோத கூடுதல் கட்டணம் வாங்குவது என முறைகேடுகள் அதிகரித்துள்ளது.
இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (#CPIM) ஜூன் 1 அன்று மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது. மாநிலத்தின் அனைத்துக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பும் ஆயிரக்கணக்கான தோழர்கள் திரண்டு யோகி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சிபிஐ (எம்) முன்வைக்கும் மக்கள் கோரிக்கைகள்:
சாமானியர்களைப் பாதிக்கும் 10% மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து நுகர்வோருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயிகளுக்கு முழு இலவச மின்சாரமும் உடனே வழங்க வேண்டும்.
தட்சிணாஞ்சல், பூர்வாஞ்சல் மின் விநியோகக் கழகங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
மின்சாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்; ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்குக் குறைந்த அழுத்த (Low Voltage) மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்து, கிராமப்புறங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
@CMOfficeUP@BJP4India
#UP #DoubleEngine
இதில் கூறப்பட்டிருக்கும் காரணங்களை அப்படியே மாற்றி வரிசை அமைக்க வேண்டும். முதலில் வங்கிதான் பிரச்சனை. அதிகாரிகள் அலட்சியம், அரசியல்வாதிகள் தலையீடு, இடைத்தரகர் எல்லாம் அடுத்தடுத்துதான்.
தாட்கோவை செயல்படுத்த தனி வங்கி அமைக்க வேண்டும் என்பது நம்மிடம் உள்ள முக்கியமான கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் பலமுறை வலியுறுத்தினார். நடக்கவில்லை ,இன்று அதே துறை அண்ணன் @VanniTamizhVCK அவர்களிடம் வந்துள்ளது. இந்த நிலையை மாற்றி அனைவரும் பயன்பெரும் வகையில் TAHDCO மாற்றி அமைக்கப்படும் 🙏