, இப்போது உங்கள் CM பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மௌனமாக இருக்கிறீர்களா..??
குற்றத்திற்குத் துணை போனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
ஆட்சியைத் தக்கவைக்க MLA சரவணன் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறீர்களா CM சார்...?
முதலமைச்சர் விஜய் அவர்களே, பாலியல் கொடூரத்திற்கு ஆளான பெண் குற்றஞ்சாட்டிய ஸ்ரீவைகுண்டம் MLA மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? பெண்களுக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறி வாக்கு வாங்கிவிட்டு,
"வெறும் வாய் மட்டும் தான், செயலில் சுத்த வேஸ்ட்" என்று சொல்லும் நிலையில் தான் விஜய் ஆட்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மின்சாரத் துறையின் பெயரை 'மின்வெட்டுத் துறை' என்றே மாற்றிவிடலாம்.
#முரசொலி
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகத்திற்கு புதிய இலக்கணம் வகுத்த "இயக்குநர் இமயம்" திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு!
கலையின் மீதும் கல்வியின் மீதும் ஆர்வம் கொண்டவர். மாணவச் செல்வங்களுக்காக நம் திராவிட மாடல் அரசு கொண்டுவந்த “ஊஞ்சல், தேன்சிட்டு” இதழ்கள் பற்றியும், “சிறார் திரைப்படத் திருவிழா” பற்றியும் தாங்கள் பேச வேண்டும் எனக் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களிடம் கலையை கொண்டு சேர்ப்பதன் அவசியம் பற்றியும், இத்திட்டங்கள் பற்றியும் பெருமையோடு உரையாற்றினார்; மகிழ்ந்தார்.
கலை என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கருவி என்பதை திரைத்துறையில் நிரூபித்துக் காட்டிய இயக்குநர் இமயம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
ராப் இசை பாடகர் வேடன் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவருக்கு @muthamilarignar பதிப்பகத்தின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலையும், பெரியார்-அண்ணா-கலைஞர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
#Vedan
மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர் திருமதி.வசந்தாதேவி அவர்களும், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு.மிலிட்டரி நா.முருகன் அவர்களும் அக்கட்சியில் இருந்து விலகி, இன்று முதல் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழியில் சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டோம்.
#Trichy_South_DMK