அவற் அவன் 10,000 20,000 செமஸ்டர் பீஸ் கட்ட முடியாம படிப்ப முடிக்க கஷ்டப்படுறான் வருஷம் 29 லட்சம் ஒருத்தன் மட்டும் முழுங்கிட்டு பத்தல பத்தலன்றான் கேட்டா ஒடுக்க பாக்குறிங்க அடிமையா தான் இருக்கனுமான்னு தலித் Card தூக்குறான் அநியாயம்டா இதெல்லாம்
@SaattaiOnline கூலி வேலை செய்றவங்க மகன் Iphone வாங்குனா தப்பில்ல…
எந்த ஒரு வேலையும் செய்யாம நீயும் உன் அண்ணனும் வாங்கிட்டு இருக்கிங்ளே.. அதான் டா தப்பு கூ* மவனே..
உன்ன ஒண்ணுமே பண்ணாத ஒருத்தனுக்கு நீ கெட்டது நெனச்சா -
அவனுக்கு கெட்டது நடக்குறதுக்கு முன்னாடி , உனக்கு எல்லா கேடுகெட்டதும் நடந்து முடிஞ்சிடும் !
வாழ்க்கை எடுக்கும் பாடத்தை விட சிறந்த பாடம் ஏதுமில்லை !!
மண்டி போட்ட விஜய் சேதுபதி.
10 வருட பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக மன்னிப்பு கேட்ட விஜய் டிவி. எங்க அவன் வாய் மயிறு பேசுனானோ அங்க மன்னிப்பு கேட்கனும். அதுவரை விட மாட்டோம்
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
பொதுவெளியில் ஆபாச மொழியில்
வன்மத்தோடு வசைபாடுவதிலும்,
கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும்
தீயசக்தியின் அடிவருடிகளே!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து,
ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை
நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு
தூயசக்தியின் நேர்மையான
ஆட்சி கசக்கத்தான் செய்யும்!
தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது,
ஆவேசமாக அலறினாலும்
சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!
தீயசக்திக்கு மக்கள் மீண்டும்
பாடம் புகட்டப் போவது
உறுதி உறுதி உறுதி!
நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர் மற்றும் இராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
தூர் வாரும் பணிகள் உள்ளிட்ட மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினோம்.
சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் அவர்கள் துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினோம்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கே.வி. விஜய் தாமு (இராயபுரம்), திருமதி எம்.ஆர். பல்லவி (திரு.வி.க.நகர்), மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., (இராயபுரம்), திரு.பி.கணேசன், இ.ஆ.ப., (திரு.வி.க.நகர்), வட்டார துணை ஆணையாளர்கள் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., (வடக்கு), திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), காவல் துணை ஆணையாளர்கள் திரு.சமேசிங் மீனா, இ.கா.ப., (புளியந்தோப்பு), திரு.ச.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப., (கொளத்தூர்), திரு.பாஸ்கர், இ.கா,.ப., (வண்ணாரப்பேட்டை), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@CMOTamilnadu | @HM_Tamilnadu | @chennaicorp | @kvdamu
#வடகிழக்குப்_பருவமழை | #சென்னை_மாநகராட்சி | #மழைநீர்_வடிகால் | #ArunraajTVK
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.