If you see the pattern, every time there is a TVK MLA/Minister or some senior cadre is in trouble immediately the next thing they do is this Temple drama
சீனாவில் தயாரிக்கப்படும் இந்த Potassium chlorate வகை பட்டாசுகளை இந்தியாவில் வாங்க விற்க பயன்படுத்த கடுமையான தடை உள்ளது.
ஒரு மாநிலத்தின் அமைச்சராக உள்ள ஒருவர் அதனை பயன்படுத்தி கெத்தாக ரீல் போடுவது என்பது அவர் சட்டத்தை துளியும் அறியாதவர் என்பதை காட்டுகிறது.
கீர்த்தனா எல்லாம் 5-ம் Class பாஸ் பண்ண கூட லாயக்கு இல்லாதவர்.. கீர்த்தனா அமைச்சராக பெற்றது தமிழ்நாட்டின் பெரும் சாபம் பெரும்பீடை..
@PesoNagpur please look into this
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக்.
ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு...
என்ன நடந்துச்சுன்னா :
தினக்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூவீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு.
ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ்.
அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுறாரு.
கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு.
இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு.
அடுத்த என்ன பண்ணாங்க தெரியுமா?
அப்படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்!
சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க.
ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்!
போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க.
சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்படிக் பாராட்டுறதுன்னே தெரியல!
கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️
#keralapolice
#police
#Congress