என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த ��ாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் விரும்பும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலை���ர் அவர்களுக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்!
மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்!
தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே!
இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவர் அவர்களின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்.
@TVKVijayHQ
கரூரில் நம் குடும்பங்களை இழந்த துயரின் நினைவு நாள் இன்று. அன்பையும் பாசத்தையும் தவிர வேறொன்றும் அறியாத நம் உறவுகளைப் பிரிந்த வலி, வாழ்க்கை ம��ழுவதும் தீராது.
நம் இதய உறவுகளை இழந்து, வாழ்நாள் காணாத வேதனையையும் தவிப்பையும் சுமந்துகொண்டிருக்கிறோம். நமது அன்பு சொந்தங்களுக்கு ��தரவாகவும் அரணாகவும் எப்போதும் நாம் இருப்போம்.
கரூர் பெருந்துயரின் நினைவுகளை உள்ளத்தில் ஏந்துவோம்.
'மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.."
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் கிரானைட் வீரமணி, மு.க.ஸ்டாலினுக்கு நன்கு தெரிந்தவர்;
உரிய வீடியோ ஆதரங்கள் இருந்தும் அவர் மீது திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை;
திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினிடம் தா��் காவல்துறை இருந்தது;
வீரமணியை தப்பிக்கவிட்டது யார் என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்
- அமைச்சர் நிர்மல்குமார்
இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், ��ிண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.
பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்!
#CMJosephVijay
#EngineersDay
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்���ுவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்���ந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் கார்ல்சன் மற்றும் திரு.கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர�� திரு. தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் ��லுவலர்கள் கலந்துகொண்டனர்.
#CMJosephVijay
கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதலமைச்சர் விஜய் அவர்களை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்; ஆனால் ��ரு மாநிலத்தின் முதலமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதலமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, ப���ண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.
பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது.
#TNCongress #CMJosephVijay #TVKVijay
From Tamil Nadu to Silverstone, history is being made.
Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, flags off Round 5 of Le Mans Cup 2026, as Ajith Kumar leads the Indian contingent, alongside Narain Karthikeyan and Aditya Patel.
Two icons on one track, united by one mission: to put Tamil Nadu on the global motorsport map and inspire the next generation of racers.
#sportstn #futureishere #TNSportsDevelopment #MotorsportsTN
83K on Polimer. 56K on Puthiya Thalaimurai. This is the number of people who are watching Assembly Proceedings live.
Credit where it’s due — @TVKVijayHQ has succeeded in creating genuine interest among the general public in Tamil Nadu Assembly proceedings.
Who would have thought Assembly proceedings could attract such numbers?
Amazing.