உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்!
முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் இருந்திருப்பது, அரசியல் எதிர்ப்புக்கும் சபை நாகரிகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
நீங்கள் எதிர்க்கலாம். விமர்சிக்கலாம். உங்கள் அரசியல் கொள்கைகளுக்கு எதிரான அரசை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதையை மறுப்பதற்கு எந்த அரசியல் காரணமும் நியாயமாகாது.
முதலமைச்சர் பதவி என்பது ஒருவருடைய குடும்பத்திற்கோ, கட்சிக்கோ சொந்தமான பதவி அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவாகும் அரசியலமைப்பு பொறுப்பு.
அந்தப் பதவியில் இருப்பவருக்கு மரியாதை செலுத்துவது அவருடைய தனிப்பட்ட நபருக்கு அடிபணிவது அல்ல; மக்களின் ஜனநாயக உரிமைக்கும், சட்டமன்றத்தின் மாண்புக்கும் மரியாதை செலுத்துவது.
வயதில் மூத்தவர்களிடமிருந்தும், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய சபை நாகரிகத்தை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல.
பதவி கிடைத்துவிட்டால் மட்டும் ஒரு அரசியல்வாதி உயர்ந்துவிட முடியாது. நடத்தை, நாகரிகம், பொறுப்புணர்வு, ஜனநாயக மாண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்போதுதான் அந்தப் பதவிக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்.
சட்டமன்றத்தில் நடந்து கொள்ளும் விதமே ஒரு அரசியல்வாதியின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே, அரசியல் எதிர்ப்பை காட்டுங்கள்; ஆனால் சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
@Udhaystalin
நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை! 👇
சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
✅ தரமான உணவு வழங்க புதிய உணவுப் பட்டியல்
✅ நிறுத்தப்பட்டிருந்த இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவு
✅ வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
✅ இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி
✅ உணவுத் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு
மாணவர்களின் குரலுக்கு மதிப்பளித்து, கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு!🙏 @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.7.2026) தலைமைச் செயலகத்தில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, செய்தித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் @imrajmohan ராஜ் மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ஒட்டுமொத்த வேலூர் மாவட்டமும் விழாக்கோலம் பூண்டு, தலைவரின் தலைவனின் வருகைக்காகத் தவம் கிடக்கிறது.
வரும் திங்கள் கிழமை.. வேலூர் மாவட்டம் வீதிகள் எல்லாம் ‘தளபதி’ முழக்கத்தால் அதிரப்போவது உறுதி!
தமிழக வெற்றிக் கழகம்
பிப்ரவரி 23 திங்கள் கிழமை வேலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தங்க தளபதி தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத,
மக்களின் நம்பிக்கை தலைவராக,
வெற்றி தலைவர் தளபதி
விஜய்
நமது வேலூர் மண்ணில்........