கேட்கவும் வழங்கவும் அவசியமில்லாத
போது தானாக முகிழ்ந்த மௌன மன்னிப்புகள்
எந்த வேண்டுதலும் இல்லாமல்
கடவுள் முகம் கூட காணாமல்
தொட்டில் மரத்தடியில் பிறந்திருந்த
பூனைக்குட்டிகள்
என்றோ உடைந்துவிட்டாலும்
இப்போதும் அதே அளவில் சிரிக்கும்
மேசை மேல் இருக்கும் புத்தன் சிலை
வான நீலத்தை சேலையாக
சூடிக்கொள்ளும் அவள் காதல் சிந்தனை
கைப்பிடியறவு கற்கண்டை
தங்கக் காசுகள் போல அள்ளித்தரும்
திருமண வீட்டில் குழந்தைகள்
��ிடுமுறை நாட்களில் நிம்மதியாக
தன் நிழலை கண்டு ரசிக்கும் நகர மரங்கள்
நாடு கடந்து போன மகளின் பிறந்தான் தேதியை அப்படியே வைத்திருந்த அப்பாவின் முருகன் காலண்டர்
கண்ணீர் மல்க எழுதிய காதல் பிரிவு கவிதைகளின் கனம் குறைந்த பிறகு
முகம் பார்த்து சிரித்த எழுத்துப்பிழைகள்
ஞாபகத்தினுள் மட்டும் வருடா வருடம்
சொல்லப்படும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பணமில்லாத போதும் எப்படியாவது
வா��்கி வரப்பட்ட பட்டாசுகளை கையிலெடுத்து முகர்ந்து பார்த்த போது வந்த தீ வாசம்
கடல் மடியில் அந்திவானம் உறங்க
அவள் மடியில் நான் நிலா தேட
முகம் நிறைய கிடைத்த முத்தங்கள்
வாடிய உயிர் நாடித்துடிப்பு நின்ற பிறகு
சூடிய மாலைகள் நடுவே சுருள் காகிதமாக உடல் கிடக்கும் வேளையில்
கைக்குழந்தையை கையில் தந்த நிமிடத்தில் கிடைத்த வெப்பம்
நானும் நானும் நீயும் நீயுமாக
ஓயும் ந���மிடங்கள் யாவிலும்
நிறைகுடமாகவே வாழும் மொழியில்
தீராமலே இருக்கும் அர்த்தம்
மொத்தமும் தீயில் எரிந்த பிறகும்
மீண்டும் துளிர்க்க ஈரம் வைத்திருக்கும்
வனத்தின் காட்டுப்பிரியம்
மொத்த உலகமும் புறக்கணித்தாலும்
நீலக்கடலை சின்ன சிறகுகளால் கடந்து மிதக்கும் பறவையின் ஞானம்
ஒரே ஒரு புத்தனோடு ஞானமிழந்த
போதி மரம்
என்பதுகளிலும் பூக்கட்டுகிறாள்
மாறவே இல்லை இரண்டு ரோஜாக்கள்
���ேர்த்துத் தரும் நற்குணம்
....
ஒரு புத்தகத்தை நீங்கள் பாதி வாசித்துவிட்டு ஒரு வாரம் கழித்து தொடந்தால் அது கோபித்துக்கொள்ளாது
வருடங்களாக கடலுக்குச் செல்லாமல் மீண்டும் ஒருநாள் சென்றால் அது அப்போதும்
அலைகளை துன்புறுத்தாமல்
தந்துவிடும்
ஒரு பாடலை மறந்து போன பிறகு
மீண்டும் கண்டுகொண்டால்
அது அகமகிழ இன்பம் தரும்
பாதிப்பாதியாக
எழுதி வைத்திருக்கும் கவிதைகளை முடிக்கும் போது
இதயம் பூரண நிம்மதி கொள்ளும்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஒரு மலரை புகைப்படமெடுத்தால்
அது கனவுக்குள் நன்றி சொல்லும்
மனிதர்களோடு நீங்கள் இப்படி
உறவாட முடியாது
உடன் இருந்தாலும்
உடனுக்குடன் அன்பு செய��தாலும்
எதுவுமே போதாது
எதிர்பார்த்தபடியே இருக்கும்
மனங்களை தினம் தினம்
ரசிக்கவும் முடியாது !
சாளரன்
12.09.2026 22/100
❣️🌿💫
தின்று பார்க்க
எதையாவது தேடுகிறது
போன மாதம் பிறந்த
பூனைக்குட்டிகள்
என்றும் ஈரமாகவே
இருக்கும் மழைத்துளிகளில்
விளையாடுகின்றன
பறவைகள்
வேக வேகமாக ஓடினாலும்
தேங்கி நின்று நடந்து போனாலும்
அதே சுழல் தானே வாழ்வு
ஒரே நிழல் தானே நினைவு !
@ss_twtz
விஸ்கி பாட்டிலின்
மூடியை காணவில்லை
இசை மட்டும்
பளீரென தெரிகிறது
பிரபஞ்சம் பிறக்கும்
போது தீ மட்டும் இருந்தது
உயிர்கள் பிறக்கும் போது
நீர் சூழ்ந்து கொண்டது
எல்லாமே மாறிவிட்டதென்று
பக்கம் பக்கமாக எழுதிய பி���்
ஒரு குரல் காதில் சொன்னது
உங்களுக்கு தான் அது
தேவையில்லாத முள்.
மீனுக்கு அது முதுகெலும்பு !
சாளரன்
11.09.2026
இருந்த இடத்திலிருந்து
நகராமல்
சோழன் காலத்திருந்து
வாழ்கிறார் கடவுளான
ஈசன்
அன்று போலவே
நின்று தீர்ந்து
வெம்பி விழிநீர் வந்த
பிறகு மீள்கிறார்கள்
���ழை மனங்கள்
தின்று பார்க்க
எதையாவது தேடுகிறது
போன மாதம் பிறந்த
பூனைக்குட்டிகள்
என்றும் ஈரமாகவே
இருக்கும் மழைத்துளிகளில்
விளையாடுகின்றன
பறவைகள்
வேக வேகமாக ஓடினாலும்
தேங்கி நின்று நடந்து போனாலும்
அதே சுழல் தானே வாழ்வு
ஒரே நிழல் தானே நினைவு !
சாளரன்
11.09.2026 17/100
அ.வ.அ.கல்லூரியில் எனது "உடன்பாட்டு வெயில்" கவிதை நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்படுகிறது. எதிர்பாராதது. கல்லூரிப் பாடத்திட்டக் குழுவினருக்கு என் நன்றி. உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி 😍😍😍❤️🙌