காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் @AIADMKOfficial பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு. ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்திருக்கும் பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல், தமிழகத்திற்கான உரிய நீரை, உரிய நேரத்தில் வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தற்போது மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி பாலைவனமாகும் அபாயகரமான சூழல் உருவாகக்கூடும்.
ஏற்கனவே, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விளைநிலங்களைப் பாலைவனமாக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என கர்நாடக காங்கிரஸ் அரசும், அதன் முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் தற்போது தெரிவித்திருக்கும் பதில் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே, அண்டை மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் நதியின் நீர், தேசிய சொத்தாகவே கருதப்பட வேண்டும் என்பதையும், அந்த நீரை எந்தவொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது எனவும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் சுமார் 25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்குப் பாசன வசதியாகவும், சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் காவிரியின் குறுக்கே அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு எந்தவகையிலும் துணை போகக்கூடாது என்பதோடு, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக திகழும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் எந்தவிதமான சமரசமுமின்றி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும், விரைவில் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? - இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ?
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா?
தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும்.
எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
அனைத்து கழக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் வணக்கம் 🙏 நலமாக இருக்கிறேன்.
பொதுசெயலாளர் அண்ணனும், கழகமும் இந்த எளிய தொண்டனுடன் என்றும் துணை நிற்பார்கள் என்ற என்னுடைய அசைக்க முடியா நம்பிக்கையை மீண்டும் உறுதியாக்கியது நீங்கள் அனைவரும் காட்டிய அன்பும், அக்கறையும்.
அண்ணனின் @EPSTamilNadu ஆணைக்கினங்க கழக வழக்கறிஞர் அணி செயலாளர் அண்ணன் @IInbadurai அவர்களின் வழிகாட்டுதலோடு நமது கழகத்தின் வழக்கறிஞர் அணி எனது வழக்கை எந்த வித தொய்வுமின்றி மிக சிரத்தையோடு கையாண்டு வருகிறார்கள். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அமைதி காத்து நிற்கிறேன்.
மீண்டும் பேசுவோம் விரைவில்... 🙏🙏🙏
"என்னுடைய தொகுதிக்குள் வந்தால் கொன்று விடுவேன்" என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளரை, அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், அதிகார திமிருடன் சொந்தக் கட்சி நிர்வாகியையே ஆபாசமாகப் பேசும் இவர்களா தமிழகத்திற்கு மாற்றத்தைத் தரப் போகிறார்கள்?
ஒட்டுமொத்த அரசியல் கழிவுகளின் குவியலாக மாறியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' மாற்றமல்ல; அது சகிக்க முடியாத துர்நாற்றமே!
#பொய்க்கால்_குதிரை_அரசு
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து…
விசாரணையில் முக்கிய சாட்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் எப்படி நீதிமன்றம் ஏற்கும். ஆனாலும் தெரிந்தே தான் விஜய் இந்த அரசு வேலை என்ற நாடகத்தை நடத்தினார்.
மொத்தமும் நாடகம்..
He EPS Overwhelmed With Our Website https://t.co/A6ndFAkODE .
That Word " தொழிற் சங்கம் மாதிரி உங்களுக்கு ஒரு அங்கீகாரம் பண்ணி தரேன் இதே மாதிரி செயல் படுங்க " 😭❤️
Officially #Young_ADMK is Going to Recognise 😭🙌
இதுக்கு மேல என்ன எங்களுக்கு வேணும்.
கொராணா காலத்தில் 1 ஆண்டு எந்த வருமானமும் இல்லாமல் ஆட்சி செய்தவர்💥
பல லட்சம் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாகியவர்❤️
10 ஆண்டு ஆட்சியில் ஒரு முறை கூட வரியை ,மின்சார கட்டணத்தை உயர்த்தாதவர்👍
ஏரி குளம் அத்தனையும் தூர்வாரி விவசாயம் செழிக்க செய்த்தவர்
தலைவர் @EPSTamilNadu ❤️
தேர்தல் நேரத்தில் ஓட்டு பிச்சைக்காக புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்ட தவெக கட்சியினர், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிகாரத் திமிரில் மூதாட்டியின் தோளில் இருந்த புரட்சித்தலைவரின் கட்சிக் துண்டைக் கழற்றி வீசுகிறார்கள்.
ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்பும் புரட்சித்தலைவரின் கட்சியின் துண்டைப் பார்த்து கூட அச்சப்படுகிறீர்கள் என்றால், அந்த அச்சம் இருக்கும் வரை புரட்சித்தலைவர் தான் இந்த நாட்டை ஆள்வார்!
100 கோடி மதிப்புள்ள, பழனியில் தமிழ்க்கடவுள் முருகன் நிலத்தைத் திருடிய, தவெக ஆட்சியாளர்களின் உள்ளரசியலையும், கண்துடைப்புக்கு நடக்கும், மெத்தனமான விசாரணையைக் கண்டித்தும்,
புரட்சித்தமிழரின் கட்டளையை ஏற்று, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பழநியில் நடைபெறுகிறது
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர். VPB பரமசிவம் அவர்களின் தலைமையில்.
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் @DrVpb 🔥
தேர்தல் காலம் வரை தன்னை நீட் எதிர்ப்புப் போராளியாக வேடமிட்ட @CMOTamilNadu, இன்று நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குகிறார்!
இரண்டு மாதங்களாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மௌனம் காக்கும் முதல்வர், ஜனநாயக ரீதியாகப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது வாயைத் திறந்து பதில் சொல்வாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு