கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் நல்லாசியுடன் தாராபுரம் சட்டமன்றத் இடைத்தேர்தலில் போட்டியிடும் நம் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து இன்று(28/09/2026) தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி மணக்கடவுரில் கழக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @KanimozhiDMK அவர்கள் பரப்புரை மேற்கொண்ட நிகழ்ச்சியில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்கள் தலைமையில் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@Udhaystalin@r_sakkarapani
மணக்கடவு பகுதியில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திருமிகு S.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்.
மக்களை வஞ்சித்து, வாழ்வாதாரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் திறனற்ற தவெக ஆட்சிக்கு தோல்வியை பரிசளிக்க மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். மணக்கடவு மக்களின் எழுச்சிமிக்க வரவேற்பு தாராபுரத்தில் உதயசூரியனின் உதயத்தை உரக்கச் சொல்கிறது!
#VoteForDMK
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆதரவுடன் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நம் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் எங்கள் எதிர்காலம் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் தாராபுரம் கிழக்கு ஒன்றியம் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் பரப்புரை மேற்கொண்ட போது.
@IPeriyasamy_@r_sakkarapani
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. S.சுகன்யா https://t.co/91EPjcOc2V அவர்களை ஆதரித்து மாண்புமிகு கழக துணை பொதுச்செயலாளர் மக்கள் தலைவி கழகத்தின் போர்வாள்
ஆருயிர் அக்கா திருமிகு #கனிமொழி_ராஜாத்தி_கருணாநிதி எம்பி அவர்கள் வருகின்ற 28-09-2026 திங்கட்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
#KanimozhiKarunanidhi #kanimozhirajathikarunanidhi
@KanimozhiDMK@mp_saminathan
#இலபத்மநாபன்
#SuganyaManivasagam
#DMK #ByElection #Dharapuram
☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.
உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.
முதல்வர் விஜய் அவர்களின் சட்டமன்ற மானிய கோரிக்கை பதிலுரையில் தரம் தாழ்ந்த பேச்சையும், திமுக'வினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் எங்கள் கழகத் தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களை உருவ கேலி செய்த முதலமைச்சர் விஜய் அவர்களை கண்டித்து கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது.
@Udhaystalin
#BIGBREAKING
தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு இடைத் தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.