எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்து, தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர்.
ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார்.
1936- ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1947-��் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் பாராளுமன்ற உறுப்பினராகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர்.
பள்ளிகளில் இலவச மதிய உணவுத் தி���்டத்தை அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தவர்.
பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பா��வே கருதிய கல்விக்கண் திறந்த கர்மவீரர், தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழ்ந்த தன்னலமற்ற பெருந்தலைவர் ஐயா காமராசரின் நேர்மை மற்றும் எளிமையை போற்றுவோம்!
"முதலில் சமூக சீர்திருத்தம்தான் தேவை. அதற்குப்பின்புதான் அரசியல் சீர்திருத்தம்" என்று முழங்கி, பறையர்’ என்ற சொல்லில் என்ன இழிவு இருக்கிறது? அர்த்தத்தில்தான் இழிவு இருக்கிறது.
ஒரு சொல்லுக்கு இழிவு என்றால், அதை கற்பித்துதான் போக்கவ���ண்டும். ஆகவே, அதை நெஞ்சுரத்தோடு பயன்படுத்துவதுதான் இழிவைப் போக்கும்” என்றுக் கூறி எந்த சொல்லால் ஒடுக்குகிறார்களோ அதே சொல்லால், பறையன்’ இதழை ஆரம்பித்து சாதிக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
'சமூக இதழியலின் முதல் முன்னோடி’ தனது 85 வயது வரை ஒதுக்கப்பட மக்களின் குரலாய் ஒலித்து பயணித்த திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 166 வது பிறந்த தினத்தில் அவரின், ஆ��ுமைமிக்க நெஞ்சுரத்தை போற்றுவோம்!
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (06.07.2025) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்���லில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்று சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன்!
மேலும், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, கடந்த மூன்றாண்டு காலமாக சமூகநீதி களத்திலும், தமிழர் உரிமைக்கான களத்திலும், தொடர்ந்து போராடி வரும் தமிழர் தேசம் கட்சிக்கு முழு ஆதரவை வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினோம்!
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களால் தொடர்ந்துவரும் வெடிவிபத்துக்களையும்,உயிரிழப்புகளை தடுத்திடவும்,
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எ���ுக்க தவறும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும்,
காரியாப்பட்டி அருகே வடகரை யுவராஜ் பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த தண்டியனேந்தலைச் சே��்ந்த நால்வருக்கும் தலா 50 லட்சமும், அரசு வேலையும்,காயமடைந்தவர்களுக்கு தலா 25 லட்சமும், வழங்கிட வலியுறுத்தியும்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:18.06.2025, புதன்கிழமை இடம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
அநீதிக்கு எதிரான களத்தில் அணிதிரள்வோம் வாரீர்!
தமிழ் மன்னர்களில் கொடை - வீரம் - மொழிப்பற்று என பன்முகவேந்தராய் வலம் வந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்ப் ப��லவர்கள் பலரையும் ஆதரித்து, தமிழ் தழைத்தோங்கி வளர பல முயற்சிகளை முன்னெடுத்த பேரரசரின் புகழைப் போற்றுவோம்.
மே 23, தமிழ் இனத்தின் அடையாளமாக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350-வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சியில் மஞ்சள் படை பேரணி தமிழர் தேசம் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது..
@KKSelvakumaroff#மஞ்சள்படை_பேரணி | #Trichy | #முத்தரையர்_சதயவிழா
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் நேற்றைய தினம் முத்தரையர் சமூகத்த��னர் மீது சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தேன். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும் உண்மை குற்றவாளிகள் மீது தகுந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தேன்!
@tnpoliceoffl
@CMOTamilnadu