#WATCH | “5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுக 10 வருஷம் இல்லையா?”
அதிமுக தலைமை அலுவலகத்தில் விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த தொண்டர்
#SunNews | #Vijayabhaskar | #ADMK
ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
அப்படியே உங்க மகனாரையும் எம்.பி. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு... see more...
இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை முதல்வருக்கு அவரின் பாஷை இல் உதயநிதி பதில் சொல்லி இருக்கிறார் இதனால் நான் உதயநிதி சொன்னது சரி என்று சொல்லவில்லை இரண்டு பேரும் சட்டசபையின் மாண்பை அனுசரிக்கவில்லை என்பதே உண்மை
இரண்டு அப்பாக்கள்
=====================
.
இன்று இணையம் முழுவதும் முதல்வர் விஜய்யின் தனி வாழ்க்கை ஒரு பேசுபொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'அப்பா எங்கே?' என்று அவர் கேட்ட கேள்விக்கு அவர் படுக்கையறையில் புகுந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அவர் திரிஷாவுடன் உறவில் இருக்கிறாரா என்பதே இன்னமும் உறுதியாகவில்லை. இருவருமே அதனை இன்று வரை உறுதிப்படுத்தவில்லை. சரி, அது உறவுதான் என்றே வைத்துக்கொள்வோம். விஜய் மனைவியிடம் இருந்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருபவர். மணமுறிவு வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திரிஷாவும் மணமாகாத ஒரு bachelorette. அப்படிப்பட்ட இருவரும் மனமொத்து ஒரு உறவில் இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. திருமணமற்ற அல்லது திருமணத்துக்கு அப்பாற்ப்பட்ட உறவை இந்திய சட்டங்கள் குற்றமாகக் கருதுவதில்லை. சில மதங்கள் கருதுகின்றன. நல்லவேளை, அந்த மதங்களின் சட்டங்கள் இந்தியாவில் அமலில் இல்லை. எனவே அது தண்டனைக்குரிய குற்றமல்ல.
திருமணத்தில் இருக்கும் போதே வேறு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டார் என்பதை தவறாகச் சொல்லலாம். அதுவும் உண்மையா என்பது நமக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும், அதுவும் தண்டனைக்குரிய குற்றமல்ல. அது தனி மனித அறம் சார்ந்த பிரச்சினை. அதில் உணர்வுபூர்வமாக பாதிப்புற்றது அவர் மனைவிதான். அதன் காரணமாகத்தான் அவர் நீதிமன்றம் போயிருக்கிறார். அந்தப் பிரச்சினை காரணமாகத்தான் விஜய் தனது மகன் மற்றும் மகள் இருவரையும் பிரிந்து இருக்கிறார். அதில் கண்டிப்பாக அவர் மனமுடைந்து இருப்பார் என்று நம்பலாம். மனைவிக்கு ஏற்கனவே ஜீவனாம்சமும் தந்திருக்கலாம். இனியும் கூடத் தர வேண்டி வரலாம்.
அதாவது குடும்பம் உடைந்து, பிள்ளைகளைப் பிரிந்து, தனது அறப்பிறழ்தலுக்கு வேண்டிய விலையை அவர் கொடுத்து விட்டார்.
அது ஒரு புறம் இருக்க, அந்தத்திருமணமே கூட எந்த அளவுக்கு மகிழ்வான ஒன்று, இருவரில் யாரிடம் அதிக பிரச்சினை இருந்தது, போன்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இந்த விபரங்கள் தெரியாமல் ஒரு குடும்பத்தின் பிரிவு குறித்து விமர்சிக்கும் அருகதை வேற்றாருக்குக் கிடையாது. அந்த உறவில் விஜய் தரப்பில் domestic violence அல்லது வேறு ஏதாவது சட்ட மீறல் இருந்து, அது நிரூபணம் ஆனால் அப்போது அதை விமர்சிக்கலாம்.
அப்படியெல்லாம் இல்லை, மணம் தாண்டிய உறவு தவறுதான்; அதை விமர்சனம் செய்தே தீருவோம் என்றால் அதே தவறை கலைஞரும் செய்திருக்கிறார். திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த கமலும் செய்திருக்கிறார். இத்தனைக்கும் கலைஞர் தனது அறப்பிறழ்தலுக்கு விலை கூட கொடுக்கவில்லை. தனது துணைவி, இணைவி இருவருடன் சேர்ந்தே வாழ்ந்து இருந்து விட்டுப் போயிருக்கிறார்.
எனவே, எந்த விதமான உறவும் இருவரின் சம்மதத்துடன் நிகழும்பட்சத்தில் அதில் ஆட்சேபிக்க எதுவுமில்லை. மனைவி அல்லது கணவன் சார்ந்த பாதிப்பாளர் இருந்தால் அது சம்பந்தப்பட்டவரின் பிரச்சினை. மணமுறிவு, ஜீவனாம்சம் போன்ற தீர்வுகள் அந்தப் பெண்களுக்கு இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை, விஜய்யின் அரசியலை, கொள்கை சார் முடிவுகளை, ஆட்சியையே விமர்சிக்க வேண்டும் என்பேன். தனிப்பட்ட உறவு சார் முடிவுகளை கடக்க வேண்டும்.
விஜய் கேட்ட 'அப்பா எங்கே?' என்பது மோசமான ஒரு கேள்வி. ஆனால் அதற்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுவானேன். அப்பாவைக் காட்டு என்றுதானே கேட்டார். காட்ட நிறைய இடங்கள் இருக்கின்றனவே? மதுரை நூலகத்தைக் காட்டலாம். கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையைக் காட்டலாம். மத்ய கைலாஷ், கோவை உள்ளிட்ட டஜன் கணக்கான மேம்பாலங்களைக் காட்டலாம். காலை சிற்றுண்டித்திட்டத்தில் காட்டலாம். பொருளாதார வளர்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலம் காட்டிய இரண்டிலக்க ஜிடிபியைக் காட்டலாம்.
இப்படி பற்பல சாதனைகளைக் காட்டி 'இதோ இங்கேதான் எங்கப்பா இருக்கிறார்!' என்று காட்டலாம். கெத்தாக இருக்கும். உண்மையான பதிலடியாகவும் இருக்கும்.
அதையெல்லாம் விட்டு விட்டு...
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
மனுஷன் farm land கோசாலை பாத்ததுக்கு அப்றம் அவர் பேசியதை கேட்டதுக்கு அப்றம் அவர் மேல உள்ள மரியாதை கூடிடுச்சு..
அண்ணாமலை
அண்ணா வை எதிர்க்க ஒரு காரணம் சொல்லுங்க..🙄(சும்மா அவதூறுகள் unproved allegations அல்லாம)
நீங்க எவ்வளவு அவதூறு பரப்பினாலும் என் தலைவன் ஓரு பிரஸ் மீட் போதும் அடிச்சு உடைச்சுடுவார் 🔥
சும்மா வரல IPS,, ஓரு தவம் அவருக்கு ⚡
நான் என்ன சொல்றேன்னா எல்லா கட்சியும் சேர்ந்து ஓரு விவாதம் பண்ண வாங்க எங்காளு ஒருத்தனா வருவாரு தெறிக்க விடுவாரு🚶🙏
விவாதிக்கலாமா,,😏